Sunday 7 April 2013

// // 1 comment

பேர் க்ரில்ஸ்(BG)


'பேர் க்ரில்ஸ்' (Bear Grylls).. இந்தப் பெயரை உங்களுக்கு தெரியாது என்றா ஒரு சிறந்த TV showவை நீங்க miss பண்ணிட்டிங்க அதுதாங்க Man Vs Wild.
ரசிகனாக இருப்பது உண்மையில் ஒரு அதீத ரசனை. பல்துறை கலைஞர்களுக்கு, படைப்பாளிகளுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு, வரலாற்று நாயகர்களுக்கு.. சமயங்களில் தலைவர்களுக்கும் கூட ரசிகனாக இருக்கிறோம். குறைந்தது யாரொருவரையேனும் ரசிக்காமல் யாரும் இருக்கமுடியாது. ரசித்தலுக்குரிய நபர் எப்படி நம்மிலிருந்து வேறுபடுகிறார் என்பதில் இருக்கிறது சூட்சுமம். அவர் எப்படி அந்த விஷயத்தைக் கொண்டு நம்மை மதிமயங்கச் செய்கிறார், வியப்பூட்டுகிறார் என்பது அதன் உள்ளீடு.
"மீண்டும் வந்துவிட்டார், வல்லவர்.. துணிந்தவர்.." என்று சமீபத்திய டிஸ்கவரிதமிழ் சானலில் விளம்பரம் கண்டிருப்பீர்கள். முதல் முறையாக 'மேன் Vs வைல்ட்' (Man Vs Wild) நிகழ்ச்சியைக் காணும் போதே தெரிந்துவிட்டது, யாரும் விளக்கவேண்டிய அவசியமேயிருக்கவில்லை. இவன் எக்ஸ்ட்ரார்டினரி. வல்லமை, துணிவு, நிபுணத்துவம் என்பன ஒருங்கே ஒருவனுக்கு அமைவது என்பது அரிது. மிகச்சில மனிதர்களுக்குதான் அது வாய்க்கிறது. பூமியின் பல்வேறு பகுதிகளின் புவியியல் அமைப்புகள், காடுகள், பாலைவனங்கள், கடல், பனிப்பிரதேசம், மலைகள்.. இவற்றின் இயல்புகள், அங்கு வாழும் உயிரினங்கள் குறித்த அறிவு, எதிர்பாராத தருணங்களை சிந்திக்கும் ஆற்றலோடு எதிர்கொள்வது என பிரமிக்க வைக்கிறார் 'பேர் க்ரில்ஸ்'. தொடர்ந்து 'மேன் Vs வைல்டி'ன் பகுதிகளை தவறவிடாமல் பார்க்கத்துவங்கினேன். இண்டெர்நெட்டில் அவர் குறித்து தேடிப்படிக்கத் துவங்கினேன். பிரமிப்பும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.இப்போது பேர் க்ரில்ஸ் என்ற ப்ரிட்டிஷ்காரனின் ரசிகன் நான்.
‘பேர்’ பிரிட்டிஷ் ராணுவத்தில் 1994ல் தன் பயணத்தைத் துவக்குகிறார். அங்கேயே பல்விதமான பயிற்சிகள். பல உட்பிரிவுகளில் பணியாற்றுகிறார். அட்வென்சர் மிகப் பிடித்தமானதாகிறது. இக்கட்டான ஆபத்துச் சூழ்நிலைகளில் எப்படித் தப்புவது என்பதில் நிபுணத்துவம் பெறுகிறார். அதையே வீரர்களுக்கு பயிற்றுவிக்கும் பயிற்றுனராகவும் ஆகிறார். மலையேறுதல், பனிச்சறுக்கு, பாராகிளைடிங், பாராசூட்டில் குதித்தல் போன்றன அவருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டுகளாக இருக்கின்றன. 1996ல் வாழ்நாளின் பெரிய விபத்தொன்றை பாராசூட்டிலிருந்து குதிக்கும் போது சந்திக்கிறார். பின்னர் தனது 24 வது வயதில் 1998ல் மவுண்ட் எவரெஸ்டில் ஏறி அதைச் செய்த மிக இளம் வயது சாதனையாளராகிறார்.
பிறகு வட அட்லாண்டிக் உறைகடல் பயணம், அனுபவங்கள் பற்றிய புத்தகங்கள், டிவி நிகழ்ச்சிகள் எனத் தொடர்கிறது அவரின் சாதனைப்பயணம். 2006ல் டிஸ்கவரி சானலுக்கான ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சி துவங்கி உலகின் அதிக மக்களால் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளின் வரிசையில் இணைகிறது. அதன் பின் ‘சானல்4’ க்கான ‘பார்ன் சர்வைவர்’ வெளியாகின்றது. அதன் பின்னும் ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சீசன்கள் வெற்றியடைகின்றன.
இந்ற்நிகழ்ச்சிகளின் நோக்கம்தான் இதன் உயர்வைக் பறை சாற்றுகிறது. காடுகள், மலைகளில் சிக்கிக்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள், கார் மறும் வாகன விபத்துகள், விலங்குகளால் ஆபத்து, நெருப்பு, நீர் முதலியவற்றால் நிகழும் உயிராபத்தான சூழல், மற்றும் பலவிதமான எதிர்பாராத இக்கட்டான சூழ்நிலைகளில் உலகெங்கும் நாள் தோறும் ஏராளமானோர் உயிரழக்கின்றனர். அதற்கு முக்கியக் காரணமாக அந்தச்சூழலை எதிர்கொள்ளும் மனத்திடமும், புத்திசாலித் தனமான, வேகமான திட்டமிடலும் இல்லாதது முக்கியக்காரணமாக இருக்கிறது. மனிதன் எந்தச் சூழ்நிலையிலும் தப்பிப் பிழைத்திருப்பது எப்படி.? இதற்கான ஒரு பயிற்சியாகவே, விழிப்புணர்வாகவே இவரது நிகழ்ச்சிகள் அமைகின்றன. ஒரு பெரிய பல்துறை நிபுணர் குழுவே இவருக்குப் பின்னால் நின்று துணை புரிவதும் இவரின் வெற்றிக்கு முக்கியக்காரணம் எனினும் ‘பேர் க்ரில்ஸ்’ நம் விழிகளை விரியச்செய்வது நிச்சயமே.!
இவரின் சாதனைகள் அடுத்த பதிவில் பார்ப்போம்...... நண்பர்களே காத்திருங்கள் 





1 comment: