Wednesday 24 April 2013

// // Leave a Comment

பட்டுக்கோட்டை பிரபாகரன்


பட்டுக்கோட்டை பிரபாகரன் சிறந்த எழுத்தாளர் என்று நினைக்கிறேன். இவரது ஆதர்சம் ஜேம்ஸ் ஹாட்லி சேஸாக இருக்க வேண்டும். அவரைப் போலவே த்ரில்லர்கள் எழுத முயற்சிக்கிறார். சில புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. பரத்-சுசீலாஎன்று ஒரு ஜோடி துப்பறிகிறது. சரி படித்துத்தான் பார்ப்போமே என்று படித்தால்:
என்னைக் காணவில்லை: கல்கி
யில் தொடர்கதையாக வந்திருக்கிறது. டைம் பாஸ் த்ரில்லர். இரண்டாவது கல்யாணம் செய்துகொள்ளும் பணக்கார அப்பா, வயது வந்த மகன், அவன் காதலி; இரண்டாவது மனைவியும், அவள் அண்ணனும் வில்லன்கள். வில்லன் கோஷ்டி போடும் திட்டங்களை எல்லாம் யாரோ ஒரு மர்ம மனிதர்(கள்) அவர்களுக்கு ஐந்து நிமிஷம் முன்னால் செய்கிறார்கள். பரத்-சுசீலா துப்பறியும் கதை. முடிவை நான் எதிர்பார்க்கவில்லை.
இனி இல்லை இடைவேளை: இன்னொரு டைம் பாஸ் த்ரில்லர். கம்ப்யூட்டரால் வேலை போகும் இருவர் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படும் இடங்களில் குண்டு வைக்கிறார்கள்.
சொல்லாதே செய்: “என்னைக் காணவில்லை”யை நினைவுபடுத்துகிறது. நடிகர் பிரகாஷை கொல்ல ஒருவன் திட்டம் போடுகிறான். கொல்லப் போகும்போது அவனை வேறு யாரோ கொன்றிருக்கிறார்கள். கல்கண்டில் தொடர்கதையாக வந்ததாம்.
ஜாக்பாட் ராத்திரி: பணம் நிறைந்த சூட்கேஸ், அதைக் கைப்பற்ற துடிக்கும் மூன்று கோஷ்டிகள். சுவாரசியமான த்ரில்லர்.
ஆகாயத்தில் ஆரம்பம்: ஒரு விஞ்ஞானியை கடத்தும் முயற்சி. கொஞ்சம் தற்செயல், ஒரு சின்ன விஷயத்தால் பிடிபடுகிறார்கள். சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கிறது.
இமைக்காத இரவுகள்: சில நீண்ட கதைகள். போர்.
பின்னிரவில் நதியருகில்: காதல், அப்பா சதி செய்து பெண்ணை வேறு இடத்தில் கட்டிக் கொடுக்கிறார். கணவன் இறக்க, அப்பா கதற, காதலன் மணக்கத் தயாராக இருந்தும், காதலி அவனை நிராகரிக்கிறாள். அவள் மனம் கணவனிடம் போய்விட்டது. ப்ராக்டிகலாக எல்லாரும் இருக்கிறார்கள், அதுவே ஆச்சரியம்.
பிறகு நான் வருவேன்: காதல், அம்மாவின் பிரஷரால் காதலனுக்கு வேறு இடத்தில் கல்யாண ஏற்பாடு நடக்கிறது. காதலி பிரிய, கடைசியில் ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.
அந்தி மந்திரம்: மாமன் மச்சானுக்குள் விரோதம். மாமன் பெண் பழி தீர்க்க சின்ன மச்சானை மணக்கிறாள். வேஸ்ட்.
இது நடக்கக் கூடாது: போர். மறைந்த தயாரிப்பாளர் ஜீவி மைக்கேல் ஜாக்சனை இந்தியாவுக்கு வரவழைக்க முயன்று கடைசியில் ஜாக்சன் கழற்றிக் கொண்டார். அதை வைத்து எழுதி இருக்கிறார். ஜீவிக்கு கதையில் பெயர் ஜீவபாலன்!
இது வரை தோற்றதில்லை: ஒன்றுமே இல்லாத, பரத்-சுசீலா துப்பறியும் கதை.
நிலா சாட்சி: இன்னொரு க்ரைம் த்ரில்லர். மனைவியை கொலை செய்யும் பெரிய மனிதர், அவளை ஒரு சீரியல் கில்லர் கொலை செய்த மாதிரி காட்டுகிறார்.
இயந்திரப் புன்னகை: கற்பை பெரிதாக நினைக்காத NRI பெண், “எதிரியோடு” படுத்து கிராமத்தில் சண்டையை நிப்பாட்டுகிறாள்.
அழகிய பெண்ணே: நல்ல நிலையில் இருக்கும் எழுத்தாளன், நர்ஸ், எழுத்தாளனிடம் உதவி பெற்று முன்னேறி வரும் நண்பன் முக்கோணம். நண்பனும் நர்சும் சதி செய்கிறார்கள் என்று மீண்டும் மீண்டும் வாசகனை ஏமாற்ற முயற்சி செய்திருக்கிறார்.
இது ஒரு பொற்காலம்: வைரங்களை திருட முயற்சி. வேஸ்ட்.
மெல்லப் பொய் பேசு: பரத்-சுசீலா நாவல். புரட்சிகரமான மருந்து கண்டுபிடிக்கும் தாத்தாவை யாரோ கடத்திவிட பரத்தும் சுசீலாவும் கண்டுபிடிக்கிறார்கள்.
நான் உன்னை சுவாசிக்கிறேன்: கல்கியில் தொடர்கதையாக வந்தது. அரவிந்த் மூன்றாவது பையன். அண்ணா, அக்கா நல்ல நிலையில் இருக்கிறார்கள். அரவிந்த் தொழில் செய்து நண்பனால் ஏமாற்றப்பட்டிருக்கிறான். அடுத்த தொழில் செய்ய பணம் தேவை, அப்பா சனி திசை முடியவும், தங்கை கல்யாணம் முடியவும் இரண்டு வருஷம் பொறுக்க சொல்கிறார். அக்கா அண்ணனுடன் போட்டி மனப்பான்மையில் இருக்கும் அரவிந்தால் பொறுக்க முடியவில்லை, கந்துவட்டிக்கு கடன் வாங்கி ஆரம்பிக்கிறான். நடுவில் பிருந்தா என்ற ஒரு balanced mentality உள்ள பெண்ணை விரும்புகிறான். தொழில் ஆரம்பித்தவுடனே அடி மேல் அடி. இழுத்து மூட வேண்டிய நிலை. பிருந்தா அவன் வீட்டாரிடம் எடுத்துச் சொல்லி நிலைமையை சீர் செய்கிறாள். அரவிந்த், பிருந்தா இரண்டு காரக்டர்களும் நன்றாக வந்திருக்கும். படிக்கலாம்.
கொஞ்சம் காதல் வேண்டும், எப்படியும் ஜெயிக்க வேண்டும்:சினிமாவில் போராடும் ஒரு துணை இயக்குனர் திரும்பி கிராமத்துக்கு போவது முதல் கதையில். அதே துணை இயக்குனர் ஒரு படத்தை இயக்க வருவது அடுத்த கதையில். படிக்கலாம். துணை இயக்குனரின் ஏமாற்றங்கள் நன்றாக வந்திருக்கின்றன.
உயிரோடு உறவாடு: காதல் முறிவு. அப்புறம் ஹீரோ எல்லா உண்மையையும் சொல்லி வேறு ஒருத்தியை மணக்கிறார். ஆனால் அவர்களுக்குள் ஒத்துப் போகவில்லை. டைவர்ஸ் பேச்சு வரை போகிறது. மனைவி கணவனை குற்றம் சாட்டும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். கைது, விடுதலை, முன்னாள் காதலியோடு திருமணம். பிரபாகர் மனைவியை “குற்றவாளியாக” சித்தரிக்க நினைத்திருக்கிறார், ஆனால் கணவன் மேல்தான் அதிக தவறு இருப்பதாகத் தோன்றுகிறது. படிக்க வேண்டியதில்லை.
கனவு கரையும் நேரம்: ஒரு கொலையாளி விட்டுச் செல்லும் க்ளூக்களும் அவன் திட்டம் போட்டு விட்டுச் செல்வதே. டைம் பாஸ்.
தயங்காதே: ஒரு நிருபரின் கொலை, ஒரு நடிகையின் தற்கொலை. வேஸ்ட்.
யாருக்கும் முகமில்லை: காதலை எதிர்க்கும் அப்பா. வேஸ்ட்.
டிசம்பர் பூ டீச்சர்: சிறுகதைத் தொகுப்பு. ஒரு சிறுகதை எனக்கு கொஞ்சம் பிடித்திருந்தது. நான்கு கல்லூரி நண்பர்கள். இருப்பவர்களில் ஏழையானவன் முன்னேற முயற்சி செய்கிறான். மிச்ச மூன்று பேரும் பேசி பேசியே நேரத்தை வீணடிக்கிறார்கள்.
பட்டுக்கோட்டை பிரபாகர் கதைகள்: சில கதைகள் டிசம்பர் பூ டீச்சரிலும் படித்தேன். ஒரு காந்தமும் இரும்புத் துண்டும் நல்ல தீம் – முதிர் கன்னி பஸ்ஸில் தடவுபவனுக்கு இடம் கொடுத்து… மரம்அவருக்கு பிடித்த சிறுகதை என்று நினைக்கிறேன் – “சூழ்ச்சி” செய்து ஒரு மரம் வெட்டப்படுவதை தடுக்கிறான் ஹீரோ. வயசு டீனேஜ் வயசுக் கோளாறை நன்றாக சித்தரிக்கிறது. நேற்றைய இலைகள் கதையில் க்ளைமாக்ஸ் நன்றாக வந்திருக்கிறது. ரெண்டு இட்லி, ஒரு வடைகதையின் ஆப்டிமிஸ்டிக் முடிவு நிறைவாக இருக்கிறது.
பிரபாகரை படிக்க வேண்டுமென்றால் அவரது கதைகளைப் படியுங்கள். 
Read More

Sunday 21 April 2013

// // Leave a Comment

மரண புதிர்


ஒரு காட்டில் உள்ள மரத்தில், உங்களை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்ருகாங்க. அந்த கயிறை ஒரு மெழுகுவர்த்தி எரித்து கொண்டிரிக்கிறது. கீழே,நீங்க எப்ப கீழே விழபோறிங்கன்னு ஒரு சிங்கம் வேற வைடிங்க்ல இருக்கு. இந்த சூழ்நிலைல எப்படி நீங்க தப்பிபீங்க???





விடை கீழே....
.
.
.
.
.
.
.
.
.
.



.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
நீங்க ஹாப்பி பெர்த்டே பாடிநீங்கனா சிங்கம் ஓடி போய் மெழுகுவர்த்தியை அணைச்சிடும்..... நீங்க எஸ்கேப்..... இப்ப நான் எஸ்கேப்....



Read More

Sunday 14 April 2013

// // Leave a Comment

நான் கமல் ரசிகன்

 காய்த்த மரமே கல்லடி படும் என்பது நடிகர் கமல்ஹாசனுக்கு மிகவும் பொருந்தும். தமிழகத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்ட/ விமர்சிக்கப்படும் நடிகர் என்றால் அது இவராகத்தான் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் ஆரம்பித்து, சினிமா வாழ்க்கை, அவர் எடுக்கப்படும் சினிமா, அதில் வரும் கருத்துகள் என்று விமர்சனம் செய்யப்படாதவையே இல்லை எனலாம். ஒரு வேளை கமலை விமர்சிப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு வித பெருமை வந்துவிடுகிறதோ? எவ்வளவு தான் கமல் விமர்சிக்கப்பட்டாலும், ஒரு நடிகர், திரைத்துறைக் கலைஞர் என்ற விதத்தில் அவரது ரசிகனாகவே இருக்கிறேன்.

ஏன் கமல் ரசிகனாக இருக்கிறேன்?


கமலின் நடிப்பை ரசிக்க ஆரம்பித்தது எந்த வயதில் என்று யோசிக்க ஆரம்பிக்கையில் அது அபூர்வ சகோதரர்கள் காலத்தில் இருந்து என்று தோன்றுகிறது. அபூர்வ சகோதரர்களில் குள்ளமாக நடித்ததைப் பார்த்த பொழுது "எப்படிக் குள்ளமாக நடிக்க முடியும்" என்றெல்லாம் யோசித்ததுண்டு. அப்படியே.. சானக்யன், வெற்றிவிழா, இந்திரன் சந்திரன், மைக்கேல் மதன காமராஜன், குணா என்று ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு விதமான மாற்றங்கள். ஒன்று ஒப்பனைகளில் மாற்றம், அல்லது கதையமைப்புகளில் மாற்றம் அல்லது வட்டார வழக்கில் மாற்றம் என்று ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம்..நல்ல படங்களின் மீதான் ரசனையை வளர்த்தது கமல், படங்கள் தான்!!

எத்தனையோ முறை சக நண்பர்களின் (கமல் ரசிகன் என்பதால்) எள்ளலிற்கு உள்ளாகியிருக்கிறேன்.நண்பர்களை பொறுத்த மட்டிலும் நல்ல படங்கள் எனில், நீண்ட நாட்கள் ஓட வேண்டும் என்றால் படங்களில் நிறைய பாட்டுகள், சண்டைகள், என்ற மசாலாவாக இருக்க வேண்டும் என்பதும் கமலின் பெரும்பாலான படங்கள் இத்தன்மை இல்லாததும் விளங்க ஆரம்பித்தது.ஏன் கமல் படங்களில் சண்டைகள் வருவதில்லை என்றேல்லாம் யோசித்ததுண்டு. அதை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது. 


2007,08ம் ஆண்டுகளில் கமலின் பழைய படங்களுக்கும் அறிமுகம் கிடைக்க ஆரம்பித்தது. சலங்கை ஒலி, சிகப்பு ரோஜாக்கள், 16 வயதினிலே, நாயகன், வறுமையின் நிறம் சிவப்பு, சிப்பிக்குள் முத்து, மூன்றாம் பிறை, பேசும்படம் என்றெல்லாம் படங்களைப் பார்த்த பொழுது தரமான படங்கள் பலவற்றுள் நடித்து வந்திருப்பதும் தரமான இயக்குனர்கள் தங்களின் தரமான படங்களில் கமலை நடிக்க வைத்திருப்பதும் கவனித்தேன். இதனால் கமல் படங்களின் மீதும் தரமான படங்களின் மீதும் ரசிப்பு மேலும் அதிகரித்தது. அந்த ரசனை கமல் படங்கள் மட்டுமல்லாமல் மற்ற நல்ல படங்களையும் பாராட்டும் பக்குவத்தை ஏற்படுத்தியது.

இப்படி கமல் ரசிகர்களும், தரமான படங்களின் ரசிகர்களும் கமல் படங்களையும், தமிழ்த் திரையுலகிற்கு கமலின் பங்கையும் புகழும் பொழுது, "கமல் நடித்த படங்கள் எல்லாம் உலக சினிமாக்களின் காப்பி தான். அவர் ஒரு காப்பி நடிகர் மட்டுமே. ரசிகர்கள் வியந்து போற்றுவதற்கெல்லாம் தகுதியானவர் இல்லை" என்ற கருத்தை வலைப்பூக்களின் பார்க்கும் பொழுது, அதற்குக் "கமல் ரசிகன்" என்ற முறையில் விடையளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கமலின் தரமான படங்கள் என்று சொல்லப்படும் நாயகன், தேவர்மகன், மகாநதி, குணா, சத்யா, ஹேராம், விருமாண்டி, அன்பே சிவம் போன்ற படங்களெல்லாம் ஆங்கிலப்படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. நகைச்சுவைக்குப் பெயர் போன சதிலீலாவதி, மகளிர் மட்டும், பஞ்சதந்திரம் போன்ற படங்களும் சுடப்பட்டவை என்று கூறப்படுகிறது. 

இதற்கு பதில் சொல்வதற்கு முன்பு Product Creation பற்றி சில கருத்துகள்..

ரு பொருளை (Product) உருவாக்குவதற்கு முன்பு அப்பொருள் எந்த சந்தையில்(Market) வெளியிடப் போகிறோம், அச்சந்தையின் மக்கள் எப்படிப்பட்டவர்கள் (Demographics), அந்த சந்தையில் என்ன மாதிரியான பொருட்கள் எல்லாம் உள்ளன (Market Survey), அச்சந்தையின் தேவை என்ன ( Market Needs), பொருளைச் சந்தைப்படுத்தும் பொழுது எப்படி மாறுபடுத்தப் போகிறோம் ( Product Differentiation) என்றெல்லாம் ஆராய்ந்து, பொருளைத் அம்மக்களிற்கு ஏற்ப வடிவமைத்து (Localisation / Customization) சந்தைப்படுத்த வேண்டும். சந்தையில் வெளியிடப்போகும் பொருள் தன் ஆராய்ச்சியின் மூலம் வந்த பொருளாகவோ, ஏற்கனவே வெளியான பொருளின் சில பல மாறுதல்களுக்கு உட்பட்ட பொருளாகவோ இருக்கலாம். இதை எல்லாவற்றிற்கும் மேலாகத் தேவைப்படுவது வாடிக்கையாளர்க்கு என்ன மாதிரியான அனுபவத்தைத் ( User Experience) தரப்போகிறோம் என்பதே!! கமலின் படங்கள் உலகப்படங்களில் இருந்து சுடப்பட்டவை என்றாலும் தமிழ்ச் சந்தைக்குத் தேவையான மாற்றங்களுடன் மண்வாசனையுடனேயே வந்துள்ளன.

தேவர்மகன், விருமாண்டி, மகாநதி போன்ற படங்களைப் பார்க்கும் பொழுது நமது மண்ணையும் மண்ணின் மைந்தர்களையும் தான் பார்க்க முடியும். சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் பங்காளிச் சண்டைகளையும், சாதிச் சண்டைகளையும் மண்வாசனையுடன் எடுக்கப்பட்ட படங்கள் மிகக்குறைவே. மகாநதியைப் பார்க்கும் ஒவ்வொரு தந்தைக்கும் உள்ளம் கொதிக்கச் செய்தது தான் படத்தின் வெற்றியே. எங்கோ ஆங்கிலேய நாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் இருந்து சுடப்பட்டது என்று கூறப்பட்டாலும், கும்பகோணத்தையும் கல்கத்தாவையும் முடிச்சுப் போட வைத்தது தான் மகாநதி குழுவின் வெற்றியே. விருமாண்டியை ரசித்த அளவிற்கு நம் மண்ணில் புதைந்திருக்கும் குரோத உணர்வை நினைத்து வெட்கப்பட்டது மனம். அது தான் படத்தின் வெற்றியே!! காப்பியடிக்கப் பட்டதாகக் கூறப்படும் படங்களை இன்று பார்த்தாலும் எனக்கு என் மண்ணில் நடக்கும் விசயமாகப்படுகிறதே ஒழிய அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ நடப்பதாகப் படவில்லை.

அன்பே சிவம், குருதிப்புனல் போன்ற படங்களில் வெளிப்படுத்திய கருத்துகளுள் முதிர்ச்சியின்மையும் தேர்ச்சியின்மையும் தெரிந்தாலும் இப்படியும் படங்களை எடுக்கலாம் என்று அடுத்த தலைமுறையினர்க்கு நம்பிக்கை கொடுத்தது. குருதிப்புனலை ஹிந்தியில் இருந்து காப்பியடித்திருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக மிரட்டியிருப்பார்கள். குருதிப்புனல் தான் தமிழில் வெளியான முதல் "டால்பி" ஒலியமைப்பில் வெளியான சினிமா. தமிழகத் திரைத்துறையினரை தொழில்நுட்ப ரீதியில் உயர்த்தியதில் பெரும்பங்கு கமல் படங்களுக்கு உண்டு. ஒவ்வொரு படத்திலும் ஒப்பனை, கதையமைப்பு மட்டுமல்லாமல் தொழில்நுட்ப ரீதியிலும் புதிய விசயங்களைக் கொண்டுவந்ததில் கமலிற்குப் பெரும் பங்குண்டு. இங்கும் ஒரு பன்மொழிப் படத்தை எடுக்க முடியும் என்று காட்டியதில் ஹேராமிற்குப் பெரும் பங்குண்டு. இப்படம் தோல்வியுற்றதற்கான காரணமும் இதுவே. 

கமலின் பரிட்சார்த்தமான படங்கள் பலவும் சொந்தத் தயாரிப்பில் வந்த படங்களே. மாற்றுப் படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு தெரிந்திருந்தாலும் கமல் எடுத்ததற்கான காரணம், புதிய அனுபவத்தைத் தர வேண்டும் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? அதற்குக் காப்பி தான் அடிக்க வேண்டுமா? என்றால், இப்படி ஒரு கதைக்கருவில் தமிழ் ரசிகர்களுக்குப் படம் கொடுக்க விருப்பப்பட்டிருக்கலாம். "மண்வாசனையுடன்" எடுக்கப்பட்ட படங்களை ஈயடிச்சான், கொசுவடிச்சான் காப்பி என்பதெல்லாம் ஓவர். 

தினமும் ஒரு உலகப்படத்தைப் பார்க்கும் எவருக்கும் ஒவ்வொரு படத்திலும் சில காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. அதே அனுபவத்தை தமிழ் ரசிகர்களுக்கும் 30 ஆண்டுகளாகத் தரவேண்டும் என்று நினைத்ததில் தவறிருப்பதாகத் தோன்றவில்லை. கமல் செய்திருப்பது மக்களின் User Experienceஐ அதிகரித்திருப்பதே!!

கமல் தமிழ் ரசிகர்களின் ரசனையை எதற்காக அதிகரிக்க வேண்டும்? சகலகலா வல்லவன், காக்கிச்சட்டை போன்ற படங்களையே எடுத்துக்கொண்டிருந்திருக்கலாமே!! அப்படி செய்திருந்தால் என்னவாகியிருக்கும்? சூர்யா, விக்ரம் போன்று நடிப்பில் முயற்சிகளை மேற்கொள்ளும் நடிகர்களும் பருத்திவீரன், பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்களும் வருவதற்கு நாளாகியிருக்கும்!! கமல் ஒன்றும் பெரிய சாதனை எல்லாம் செய்யவில்லை. அவர் செய்திருப்பது ஒரு Initiation ஆரம்பம்.

ரசிகர்களின் ரசனையை அதிகரிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார். "நாங்கள் தான் இணையத்தில் இருந்து தரவிறக்கி உலகசினிமா ரசனையை அதிகரித்துக்கொள்கிறோமே, கமல் தான் ரசிகர்களின் ரசனையை அதிகரிக்க வேண்டுமா?" ஐயா படங்களைத் தரவிறக்கம் செய்யுமளவிற்கு இணைய வசதியும் கிடைக்கப் பெற்றோர் ஒரு சதவிதத்தினர் தான். மற்றவர்களை அந்த தரத்திற்குக் கொண்டு வர வேண்டாமா? அதைத் தான் மகேந்திரன்,பாலுமகேந்திரா, பாலசந்தர்,பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் செய்துள்ளனரே. ஏன் கமல் மெனக்கெட வேண்டும்? அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது அதன் வீச்சு அதிகம் என்பதே என் கருத்து!! உலக சினிமாவை நோக்கி வந்திருக்கும் பலரும் சிறு வயதில் கமல் படங்களைச் சிலாகித்தவர்களாகவே இருப்பர்.

கமலிற்கு இவ்வளவு வக்காளத்து வாங்குகிறாயே.. கமல் இன்னும் நம் சமுதாயத்தில் உள்ள ஏகப்பட்ட விசயங்களைப் படமாக்கியிருக்கலாமே!! ஆம்.. எனக்கும் அந்த வருத்தம் உண்டு. கமல் எடுக்க வேண்டிய, ஏற்று நடிக்க வேண்டிய பாத்திரங்கள், பேச வேண்டிய சமுதாயக் கருத்துகளும் நிறைய உள்ளன. கமலிற்கு மனமும் பணமும் இல்லாத பட்சத்தில், அதை விக்ரம்களும், சூர்யாக்களும், சேரன்களும்,பாலாக்களும் செய்தால் நன்றாக இருக்கும். அப்படி மாற்று சினிமாவை எடுப்பதற்கு ஒரு தளம் அமைத்துக் கொடுத்ததில் கமலிற்குப் பெரும் பங்குண்டு!! 

அதனால், காப்பியடித்தார் என்ற சொல்லப்பட்டாலும் கமல் ரசிகன் என்பதில் எனக்கு சிறிதளவும் வருத்தமில்லை!!
Read More

Sunday 7 April 2013

// // 1 comment

பேர் க்ரில்ஸ்(BG)


'பேர் க்ரில்ஸ்' (Bear Grylls).. இந்தப் பெயரை உங்களுக்கு தெரியாது என்றா ஒரு சிறந்த TV showவை நீங்க miss பண்ணிட்டிங்க அதுதாங்க Man Vs Wild.
ரசிகனாக இருப்பது உண்மையில் ஒரு அதீத ரசனை. பல்துறை கலைஞர்களுக்கு, படைப்பாளிகளுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு, வரலாற்று நாயகர்களுக்கு.. சமயங்களில் தலைவர்களுக்கும் கூட ரசிகனாக இருக்கிறோம். குறைந்தது யாரொருவரையேனும் ரசிக்காமல் யாரும் இருக்கமுடியாது. ரசித்தலுக்குரிய நபர் எப்படி நம்மிலிருந்து வேறுபடுகிறார் என்பதில் இருக்கிறது சூட்சுமம். அவர் எப்படி அந்த விஷயத்தைக் கொண்டு நம்மை மதிமயங்கச் செய்கிறார், வியப்பூட்டுகிறார் என்பது அதன் உள்ளீடு.
"மீண்டும் வந்துவிட்டார், வல்லவர்.. துணிந்தவர்.." என்று சமீபத்திய டிஸ்கவரிதமிழ் சானலில் விளம்பரம் கண்டிருப்பீர்கள். முதல் முறையாக 'மேன் Vs வைல்ட்' (Man Vs Wild) நிகழ்ச்சியைக் காணும் போதே தெரிந்துவிட்டது, யாரும் விளக்கவேண்டிய அவசியமேயிருக்கவில்லை. இவன் எக்ஸ்ட்ரார்டினரி. வல்லமை, துணிவு, நிபுணத்துவம் என்பன ஒருங்கே ஒருவனுக்கு அமைவது என்பது அரிது. மிகச்சில மனிதர்களுக்குதான் அது வாய்க்கிறது. பூமியின் பல்வேறு பகுதிகளின் புவியியல் அமைப்புகள், காடுகள், பாலைவனங்கள், கடல், பனிப்பிரதேசம், மலைகள்.. இவற்றின் இயல்புகள், அங்கு வாழும் உயிரினங்கள் குறித்த அறிவு, எதிர்பாராத தருணங்களை சிந்திக்கும் ஆற்றலோடு எதிர்கொள்வது என பிரமிக்க வைக்கிறார் 'பேர் க்ரில்ஸ்'. தொடர்ந்து 'மேன் Vs வைல்டி'ன் பகுதிகளை தவறவிடாமல் பார்க்கத்துவங்கினேன். இண்டெர்நெட்டில் அவர் குறித்து தேடிப்படிக்கத் துவங்கினேன். பிரமிப்பும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.இப்போது பேர் க்ரில்ஸ் என்ற ப்ரிட்டிஷ்காரனின் ரசிகன் நான்.
‘பேர்’ பிரிட்டிஷ் ராணுவத்தில் 1994ல் தன் பயணத்தைத் துவக்குகிறார். அங்கேயே பல்விதமான பயிற்சிகள். பல உட்பிரிவுகளில் பணியாற்றுகிறார். அட்வென்சர் மிகப் பிடித்தமானதாகிறது. இக்கட்டான ஆபத்துச் சூழ்நிலைகளில் எப்படித் தப்புவது என்பதில் நிபுணத்துவம் பெறுகிறார். அதையே வீரர்களுக்கு பயிற்றுவிக்கும் பயிற்றுனராகவும் ஆகிறார். மலையேறுதல், பனிச்சறுக்கு, பாராகிளைடிங், பாராசூட்டில் குதித்தல் போன்றன அவருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டுகளாக இருக்கின்றன. 1996ல் வாழ்நாளின் பெரிய விபத்தொன்றை பாராசூட்டிலிருந்து குதிக்கும் போது சந்திக்கிறார். பின்னர் தனது 24 வது வயதில் 1998ல் மவுண்ட் எவரெஸ்டில் ஏறி அதைச் செய்த மிக இளம் வயது சாதனையாளராகிறார்.
பிறகு வட அட்லாண்டிக் உறைகடல் பயணம், அனுபவங்கள் பற்றிய புத்தகங்கள், டிவி நிகழ்ச்சிகள் எனத் தொடர்கிறது அவரின் சாதனைப்பயணம். 2006ல் டிஸ்கவரி சானலுக்கான ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சி துவங்கி உலகின் அதிக மக்களால் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளின் வரிசையில் இணைகிறது. அதன் பின் ‘சானல்4’ க்கான ‘பார்ன் சர்வைவர்’ வெளியாகின்றது. அதன் பின்னும் ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சீசன்கள் வெற்றியடைகின்றன.
இந்ற்நிகழ்ச்சிகளின் நோக்கம்தான் இதன் உயர்வைக் பறை சாற்றுகிறது. காடுகள், மலைகளில் சிக்கிக்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள், கார் மறும் வாகன விபத்துகள், விலங்குகளால் ஆபத்து, நெருப்பு, நீர் முதலியவற்றால் நிகழும் உயிராபத்தான சூழல், மற்றும் பலவிதமான எதிர்பாராத இக்கட்டான சூழ்நிலைகளில் உலகெங்கும் நாள் தோறும் ஏராளமானோர் உயிரழக்கின்றனர். அதற்கு முக்கியக் காரணமாக அந்தச்சூழலை எதிர்கொள்ளும் மனத்திடமும், புத்திசாலித் தனமான, வேகமான திட்டமிடலும் இல்லாதது முக்கியக்காரணமாக இருக்கிறது. மனிதன் எந்தச் சூழ்நிலையிலும் தப்பிப் பிழைத்திருப்பது எப்படி.? இதற்கான ஒரு பயிற்சியாகவே, விழிப்புணர்வாகவே இவரது நிகழ்ச்சிகள் அமைகின்றன. ஒரு பெரிய பல்துறை நிபுணர் குழுவே இவருக்குப் பின்னால் நின்று துணை புரிவதும் இவரின் வெற்றிக்கு முக்கியக்காரணம் எனினும் ‘பேர் க்ரில்ஸ்’ நம் விழிகளை விரியச்செய்வது நிச்சயமே.!
இவரின் சாதனைகள் அடுத்த பதிவில் பார்ப்போம்...... நண்பர்களே காத்திருங்கள் 





Read More

Tuesday 2 April 2013

// // Leave a Comment

டின் டின்(ஆரம்பம்)

எனது கல்லுரியில் (அதுதாங்க jaffna hindu college) 7ம்ஆண்டு படிக்கிற காலம்..குமாரசுவாமிமண்டபத்தில் முன்னால் நிலத்தி உட்கார்ந்தபடி அனல் பறக்கும் விவாதங்களிற்குகைதட்டி குதூகலித்திருந்தகாலம்.(எவண்டா அது பாடம் கடத்த காயாளும் உபாயங்களில் ஒன்றாகவே இவற்றிலெல்லாம்  நமக்கு நாட்டம் வந்தது எண்டுஅரசாங்க ரகசியங்களைப் போட்டு உடைப்பது..)



நாம தான் ஆங்கிலக் கதைப்புத்தகங்களின்ர பக்கமே தலை வைச்சுப்படுக்கிறதேயில்லையே..ஆனாலும் நம்ம பசங்க சிலபேர் கலர்கலராய் படங்களோடநம்ம முகமூடி மாயாவி போல புத்தகம் வாசிக்கிறத கண்டபோது ஆர்வமேலீட்டால்வாங்கிப்  படம் பார்த்து..சிறிது சிறிதாய்.. என்ர ஆங்கிலப் புத்தகம் வாசிக்கிறதில்லஎண்டிற சபத்தத்தையே முறியடிக்கச் செய்தது தான் அந்த TinTIn..

சிறிதுகாலம் என்னை என்னை  வெறி கொண்டலையச் செய்தது அந்தக் பல வர்ண TinTin புத்தகங்கள்..மழைக்கும் நூலகப்பக்கம்ஒதுங்காதன் என்னை நூலகஅங்கத்துவம் பெறச்செய்யும் அளவிற்கு நீண்டிருந்தது இந்த TinTIn வெறி.TinTIn சில புத்தகங்களைஎடுத்து வேறுஅலுமாரிகளில் யாரும்எடுத்துவிடாதவாறு ஒழித்துவைக்கத் தீர்மானித்தேன்.இதற்காக நான் தெரிவுசெய்ததுதமிழ் இலக்கியப் புத்தகங்கள் வைக்கும்அலுமாரியைத்தான்.. இப்போது நினைத்தாலும் இந்தச் சிறுபிள்ளைத்தனமானசெயற்பாடுகள் சிரிப்பைத்தான் வரச் செய்கிறது..


டின் டின் பற்றிய எனது முழுமையான  பதிவுக்கு காத்திருங்க .........


Read More