Thursday 3 December 2015

// // Leave a Comment

அவனும் அவளும் ( ஒரு காதல் கதை )

அப்ப அப்ப வந்து எதாவது எழுதுறதே வேலையா போச்சு. தொடந்து எழுத எனக்கும் ஆசை தான் பட் ஆசைகள் எல்லாம் நிறைவேறுமா ? ஆனால் இனி வாரத்துக்கு ஒரு தடவையாவது அலட்டுவம் எண்டு இருக்கன். பாப்பம் எந்தளவுக்கு சரிவருது எண்டு. இந்த முறை ஒரு காதல் கதையுடன் வந்து இருக்கன் சத்தியமா இது காதல் கதை தாங்க. நம்புங்க… கத அப்பிடி இப்பிடி தான் இருக்கும் ஏனென்டா சொந்த அனுபவம் இல்ல பாருங்க . 
அது ஒரு காலை வேளை நண்பனுக்கு காதல் தூதாக வருகின்றான் அவன். தோழியின் காதலுக்கு தூதாக வருகின்றாள் அவள். அவனுக்கு தெரியாது தன்னைக் கடந்து சென்றவள் தன்னுடைய நாயகி என்று. அவளுக்கும் தெரியாது அங்கு நின்றவன் தன்னுடைய நாயகன் என்று. நாளடைவில் ஒருநாள் கதவின் விளிம்புகளுக்கிடையால் அவளைக் கண்டான் அவன். சாதாரணப் பெண் அவள்…… அவன் பார்வைக்கு அழகியாய் தெரிந்தாள். அவனுக்கு ஏதோ ஒரு பிரியம் ஏற்பட்டது. கூடுமான பொழுதெல்லாம் அவளைக் காணச் செல்வான் அவளுக்கே தெரியாமல்.
எப்படியாவது சொல்லி விட வேண்டும் தன் காதலை என்று நினைத்தான் அவன். சொன்னால் ஏற்பாளோ? இல்லை மறுப்பாளோ? என்ற குழப்பமும் அவனிடம் இருந்தது. மெதுவாய் நண்பன் காதில் விடயத்தைச் சொன்னான். தோழி வழியாய் அவளுக்குத் தூது வந்தது. விடயத்தை கேட்டும் உடன்பாடில்லாதவள் போல் காட்டிக் கொண்டாள். ஆனால் மனதிற்குள் அந்த விடயம் அலை பாய்ந்து கொண்டே இருந்தது அவளுக்கு. இரவூ வேளை தூங்கச் சென்ற அவளுக்கு கனவில் நாயகனின் நாடகம். விடிந்தது பொழுது…… கலங்கிய குட்டையானாள் அவள். மெல்லக் குடியேறினான் நாயகன் அவள் மனதில்……

கனவைப் பற்றித் தோழியிடம் உரைத்தாள். கனவைக் கேட்ட தோழி அவள் கண்ணுக்குள் இருந்த கனவைக் கண்டுகொள்ளவில்லை. வெட்கம் கலந்த அவளது புன்னகையின் அர்த்தம் கண்டுணரவில்லை. இறுதியில் ஒருவாறாக அவன் நண்பன் மூலம் அவள் தூதனுப்பினாள் தன் காதலை. தூது சென்றவன் அவளது காதலைச் சொல்லாது தொலைபேசி எண்ணை மட்டுமே கொடுத்து விட்டான். அதே போல் அவனது தொலைபேசி எண்ணும் அவளுக்கு கொடுக்கப்பட்டது.
எதற்காக இந்த எண்ணைத் தந்திருப்பாள் அவள்? ஒருவேளை சரமாரியாக திட்டுவதற்கோ? என்ற பயம் அவனிடம் தோன்றியது. ஆகையால் ‘Hi’ என்று குறுந்தகவல் மட்டும் அனுப்பினான் அவன் அவளுக்கு. அவளும் சாதாரணமாகவே கதைத்தாள். நட்பை வளHக்க நினைக்கிறாள் முதலில் என்று நினைத்தான் அவன். அப்போது அவளிடமிருந்து ஒரு குறுந்தகவல் வந்தது ‘வெளியே தெரிந்தால் பிரச்சினையாகி விடும் நம் காதலை வெளியே சொல்லாதீHகள்’ என்று. அவனுக்கு அமிHதத்தை குடத்தில் வாHத்து வாயில் விட்டது போல் இருந்தது. அவன் மீண்டும் உறுதி செய்தான் ‘காதலா? அப்ப ழுமுஆ?’ என்று. அப்பொழுது தான் அவளுக்கு புரிந்தது தூது சென்றவன் பாதியை விழுங்கிவிட்டான் என்று. அவளும் ‘ழுமு’ என்று குறுந்தகவல் அனுப்பிவிட்டாள். ஆனால் மனதினுள் இன்னும் கொஞ்சம் மறைத்திருந்து அவனிடம் விளையாடியிருக்கலாம் என்று ஒரு நப்பாசை. நாயகனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. சந்தோஷத்தில் கூத்தாடினான் கத்தி.

நாயகன் முகம் அறியாமலேயே அவனைக் காதலிக்க தொடங்கிய அவள் காணவேண்டும் என ஆசைப்பட்டாள். ஆனால் கேட்பதற்கு வெட்கம். அவளை வென்ற அவன் ‘நான் உன்னைப் பாHக்க வேண்டும். வீட்டுப்பக்கம் வருகிறேன்’ என்றான் முந்திரிக்கொட்டை போல். எப்படியோ பார்க்கப் போகிறேன் என்ற களிப்பில் அவளும் இருந்தாள்.
பார்வை ஒன்று புன்னகை பூக்கள் சில என சந்திப்பு நிறைவேறிய பின் Propose பண்ணுவது எப்படி என்று சிந்தனை எழுந்தது அவனுள். அவளிடமே கேட்டான் ‘உன்னை எப்படி Propose பண்ணுவது’ என்று மீண்டும் குறுந்தகவலில். அவனது நகைச்சுவையில் மூழ்கி மீண்டும் மீண்டும் அவன் மேல் காதலில் விழுந்தாள் அவள்.
ஒருவாறாக Propose பண்ணுவதற்கு நாட்குறித்தாயிற்று. அந்நாளும் வந்தது. அன்று அவளுக்கு அவன் ஓர் அழகிய பொம்மையை பரிசளித்தான். வந்த வேலையை மறந்து அவளோடு ஏதோ பேசிவிட்டு சென்ற பின் தான் ஏதோ அவனுக்கு ஞாபகம் வந்தது. குறுந்தகவல் அனுப்பினான் அவளுக்கு ‘வந்த வேலையை மறந்து விட்டேன் I LOVE YOU’ ’ என்று. புதுமையான Proposalஐ வாஞ்சையோடு ஏற்றுக்கொண்டாள். இந்த நகைச்சுவை நாயகனின் காதல் வயது இப்பொழுது ஓராண்டிற்கு மேலாகிறது.
Read More