Saturday 30 March 2013

// // Leave a Comment

ஃபேஸ்புக் பாதுகாப்பனதா


http://srathan.blogspot.com/சில வருடங்களுக்கு முன்பு வரை நம் நண்பர்கள், உறவினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நேரில் சந்திக்கும் பொழுதோ, எப்பொழுதாவது தொலைபேசியில் பேசினாலோ மட்டும் தான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று, நாம் என்ன செய்கிறோம், என்ன நினைக்கிறோம் என்பதை தினமொரு முறை, பலர் மணிக்கொரு முறை பகிர்ந்துகொண்டிருக்கிறோம். உபயம் சமூக வலையமைப்புத்தளங்கள்!!

அதில் ஃபேஸ்புக்கின் பங்கு மிகவும் அதிகம். காலையில் பார்த்த விசயங்கள், மனதில் உதித்த விசயங்கள், விரும்பிய புகைப்படங்கள், வடித்த கவிதைகள், பார்த்த காணொளிகள், வாசித்த கட்டுரைகள் என்று பகிரப்படும் விசயங்களுக்கு அளவே கிடையாது. 

நாங்கள் எடுத்த புகைப்படம்...
.
.
.
எங்கள் குடும்ப நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம்..
.
.
.
நானும் இந்த பிரபலமும் சந்தித்த பொழுது எடுத்த புகைப்படம்..
.
.
.
என் தொ(ல்)லை பேசி எண்ணை மாற்றியுள்ளேன். இதோ.. இது தான் என் எண்..
.
.
என்று தன்னைப் பற்றியும் தங்களது எண்ணங்களையும் ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துகொண்டேயிருக்கிறோம். 

சில சமயங்களில் விபத்து கொலை போன்ற சம்பவங்களையும், அஞ்சலிகளையும் பகிர்ந்தாலும், நம் எண்ணங்களே பிரதானமாக இடம் பிடிக்கின்றன பகிர்தலில். சில கேள்விகள் எழுகின்றன. நாம் பகிரும் விசயங்களை யார் யார் பார்க்கிறார்கள் என்பது நமக்குத் தெரியுமா? நாம் பகிரும் புகைப்படங்கள் யார் யாருக்கெல்லாம் அனுப்பப்படுகின்றதென தெரியுமா?

"என் புகைப்படங்களை வைத்து என்ன செய்யப்போகிறார்கள்? நான் என்ன பெரிய பிரபலமா?" என்ற எண்ணம் நமக்குள் எழத்தான் செய்யும். ஆனால், நாம் பகிரும் விசயங்களால் நமக்கு எந்த திசையில் இருந்தும் சங்கடங்கள் நேரலாம். நம் பகிர்தலை யார் யார் எல்லாம் பார்க்கலாம் என்பதை தேர்வு செய்யும் வரை!!

என் தோழி ஒருவர் தான் ஒரு பிரபலத்துடன் சில புகைப்படங்களை எடுத்திருக்கிறார். அந்த பிரபலமும் அவரது புகைப்படத்தொகுப்பில் அந்தப் படங்களைச் சேர்த்துள்ளார்.  தோழி அந்தத் தொகுப்பை தன் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்தார். நமக்குத் தான் பிரபலங்களின் படங்களைப் பார்ப்பதில் ஆர்வமாச்சே. அந்தத் தொகுப்பைப் பார்த்தால் அவரது குடும்ப உறுப்பினர்களின் படங்களெல்லாம் உள்ளன. அதில் பல இதுவரை ஊடகத்தில் வெளியாகாத படங்கள்!!

அந்தப் பிரபலம் இதை எதிர்பார்த்திருப்பாரா?

அவர் செய்யாததென்ன?

தன் பகிர்தலை யார் யார் பார்க்க முடியும்? யார் யார் பிறரிடம் பகிரமுடியும் என்ற Settingsஐச் சரியாகத் தேர்ந்தெடுக்காதது தான்.


http://srathan.blogspot.com/


ஃபேஸ்புக் நிறுவனத்தினர், தளத்தின் பயணர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துவருகிறது. ஃபேஸ்புக் தளத்தினர் இந்த குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் வகையில் பாதுகாப்புக் கட்டுப்பாடை (Privacy Settings) மேலும் பலப்படுத்தியுள்ளனர். இனி நம் பாதுகாப்பிற்கு நாமே முழுப்பொறுப்பு.

சரி.. ஃபேஸ்புக்கின் தளத்தில் கவனிக்கப்படவேண்டியவை எவை?

பகிர்தல்:



http://srathan.blogspot.com/நாம் பகிரும் விசயங்களை யார் யார் பார்க்கலாம்? அனைவரும் பார்க்கலாம், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்கள் என்று நான்கு பிரிவாகப் பிரிக்கலாம். அனைவரும் என்று தேர்ந்தெடுக்கும் பொழுது இணையத்தில் உள்ள அனைவரும் நம் பகிர்தலைப் பார்க்க முடியும். இதைத் தேர்ந்தெடுக்கும் முன்பு கொஞ்சம் யோசிக்கவும்.  சில சமயங்களில் சிலர் மட்டுமே பார்க்கும் படியான தகவல்களையோ, கருத்துகளையோ பகிர்கிறோம் என்றால், யார் யார் பார்க்கவேண்டும் என்பதையும் தனித்தனியாகத் தேர்ந்தெடுக்கலாம்.




அடிப்படைத் தகவல்கள்:


http://srathan.blogspot.com/
நம்மைப் பற்றிய அடிப்படைத் தகவல்களான பெயர், பால், ஃபேஸ்புக் பிரதான புகைப்படம் முதலியவை அனைவருக்கும் தெரியும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கும். நம் நண்பர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள இது வசதியாக இருக்கும் என்பதால்..












சேவைகள், இணையதளங்கள்:



திடீரென்று நம் நண்பர்களிடம் இருந்து "எனது பக்கத்து பூமி காலியாக இருக்கிறது. வந்து விவசாயம் செய்யவும் என்று ஒரு அழைப்பு வரும். என்ன வென்று பார்த்தால் Farmville, Fishville என்று ஒரு விளையாட்டுச் சேவைகளாக இருக்கும்.  சிலவமயம் ஃபேஸ்புக்  பக்கத்தைப் பார்த்தால் நான் ஆடு வளத்தேன், பன்னிக்குட்டியைப் பார்த்தேன் என்று எங்கும் அவர்கள் இணையத்தில் விவசாயம் செய்வதாக இருக்கும்." இது போன்ற அழைப்புகள், பகிர்தல்களால் கடுப்பாகிறவராக நீங்கள் இருந்தால்.. இது போன்ற சேவைகளையே துண்டிக்கலாம் (Block).

அதற்கான வசதியையும் ஃபேஸ்புக் தளத்தினர் கொடுத்திருக்கிறார்கள்.

முக்கியமாக செய்யவேண்டிய விசயம்.. எந்த ஒரு அழைப்போ, கேள்வியோ வரும் பொழுது நன்றாகப் படித்துப்பார்த்து ஆம் இல்லை என்று தேர்வு செய்யவும்.  பல தளங்கள், சேவைகள் நாம் அச்சேவையைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் பொழுதே "உங்கள் நண்பர்களின் பட்டியலை எடுத்துக்கொள்ளவா?" என்று கேட்கின்றன. பின் அவை உங்கள் பெயரால் உங்கள் நண்பர்களுக்கு செய்திகள் அனுப்புவார்கள் (எப்படி செய்தி என்று சொல்லவா வேண்டும்.


இங்கே நான் கூறியுள்ளவை யாவும் ஃபேஸ்புக் தளத்தில் கொடுக்கப்பட்டவையே. ஒரு பத்து நிமிடத்தை உங்கள் பாதுகாப்பிற்காக ஒதுக்குவது சரிதானே?


கடைசியா ஒரு ஜோக் 

http://srathan.blogspot.com/


 

Read More

Wednesday 27 March 2013

// // Leave a Comment

ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன்?


இந்த தொடர் ஜோதிடம் மூட நம்பிக்கையா அல்லது  அறிவியலா என்று ஆராயப்போவதில்லை  ஆனால் இது ஜோதிடத்தில் இருக்கும் சில மூட நம்பிக்கைகளையும் ஏன் ஜோதிடம்  பல நேரங்களில் பொய்க்கிறது  எனதைப் பற்றியும் பொய்க்கிறது எனத் தெரிந்தும் எப்படி இத்தனை காலம் அது நீடித்துவருகிறது என்பதையும் .உலகின் பெருவாரியானவர்களின் நம்பிக்கையை பெற்ற இந்த கலை ஏன் அத்தனைத்தூரம் மக்களுக்கு பயன் இல்லாமல் இருக்கிறது என்பவைகளைப் பற்றி  ஓரளவிற்கு தெளிவாக உரக்க சிந்திக்க இருக்கிறோம் 

முதல் உண்மை:-

ஜோதிஷம் எனும் ஜோதிடம் நாம் நினைப்பது போல் மனிதனின் எதிர்க்காலத்தை தெரிந்து கொள்வதற்காக ஏற்ப்படுத்தப்பட்டதல்ல .

ஜோதிஷம் என்றால் ஒளியைத்தேடி என்றுதான் பொருள் .இந்த பொருளுடைய சொல்லுக்கும் மனிதனின் எதிர்க்காலத்திர்க்கும் எங்கே தொடர்பு இருக்கிறது. மனித இனத்தின் உயர் நூல்கள் உயர் சாஸ்திரங்கள் அத்தனைக்கும் குறிக்கோள் ஒன்றுதான். *அது மனிதனை ஒரு நிலை உயர்த்துவது .*அவனின் பரிணாமத்தின் அடுத்தப் படிக்கு அழைத்து செல்வது *பின் இறுதியிலே பிரும்மத்தை  அறிந்து அதனுடன் இணைவது இவைகளே ஒரு உயர் நூலினின் லட்ஷனங்கள் இவைகளுக்கு உதவாத எந்த நூல் படிப்பதும் பொழுது போக்குவது ஒன்றே  .
நாம் வந்த வேலையை பலர் மறந்துவிடுகின்றனர் வந்த வேலைப் பார்க்கவே நேரம் பற்றாது .

இதில் வெட்டிப் பொழுது போக்குவதுவேறு தேவையா ஜோதிஷம் என்பது வேதத்தின் ஆறு அங்கங்களில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது .வேதத்தின் பயன் எதுவோ அதுவேதான் ஜோதிட சாஸ்திரத்தின் பொருளும் ஆகும் .அறிவைத்தேடும் பயணத்தில் ஜோதிடமும் ஒரு கருவியாகும் இதில் மனிதனின் ஆன்மீக பயணத்திற்கு வானசாஸ்திரத்தை எங்கனம் பயன் படுத்துவது என்பதன் விளக்கமும் அறிவும் தான் உள்ளது .இது குறித்து ரிஷிகளும் சித்தர்களும் ஆயிரக்கணக்கான  ஆண்டுகளாக இயற்கையை ஊன்றி கவனித்து இயற்கையின் மாறுதல்கள் பூமியை எவ்வாறு பாதிக்கிறது என கண்டுணர்ந்து அவைகளில் கண்ட உண்மைகளை ஒரு சாஸ்திரம் ஆக்கினார்கள் .


வானியல் : வெளியில் தோன்றும் கிரகங்கள் மற்றும்  நட்சத்திரங்களை இனம் கண்டு வகைப் படுத்துவது. அவற்றின் இயக்கம் மற்றும் சுழற்சி பற்றி அறிவது, தட்பவெப்ப நிலை மாற்றங்களில் வான் பொருட்களின் தாக்கம், கிரகணங்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவற்றைப் புரிந்து கொள்ளுதல் முதலியவை. ஒருபகுதி .இகலை புரிந்துகொள்ள கணிதம்  மேம்பட்டது  .இது ஒரு அங்கம் இதில் திரி கோணம்  பல உயர் கணிதங்களும் வளர்ந்தன இத்தகைய கணித அறிவின் மூலமே கோள்களின் இயக்கத்தியும் அசைவுகளையும் பண்டைய அறிஞர்கள் கண்டறிந்தனர் .
 ஜோதிடத்தின் முக்கிய அடுத்த அங்கம் கால அளவிடுதல் முறை
 காலக் கணக்கு முறைகள்   தாங்கள் காணும் இயற்கை நிகழ்வுகளின் அடிப்படையிலேயே உண்டாயின.  பன்னிரண்டு ராசிகள்,  சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை சுழற்சியைக் கொண்டு நாட்களை அளவிடுதல் போன்றவை.  பிறப்பு, இறப்பு நாட்கள், பருவங்கள், பண்டிகைகள் இவை அனைத்தும் இந்தக் கால அளவு முறையிலேயே குறித்து வைக்கப் பட்டன. 
இத்தகைய பாரம்பரிய அறிவு பஞ்சாங்கம் என்ற பொதுப் பெயரிலே தொகுக்கப்பட்டது
இவ்வாறு பிருமத்தைத் தேடும் பயணத்திற்காக முறைபடுத்தப்பட்ட வானியல் அறிவும் கணித அறிவும்  பல  நூற்றாண்டுகளாக கவனித்து பதிவு  செய்யப்பட பிரபஞ்ச நிகழ்வுகளும் அது குறித்த ஆராயய்ச்சியின் ஒட்டு மொத்த பெயரே ஜோதிடம் என்பதாயிற்று .
 
தற்போது கூடபத்தில்  விண்ணியல் ஆராய்ச்சியின் போது அந்தகைய ஆராய்ச்சின் போக்கிலே வேறுபல கண்டுபிடிப்புகளும் ஏற்ப்படும் அவைகள் பல ஆயுதங்கள் நாம் செய்வதற்கும்   இன்னும் சொல்லப்போனால் மனிதனின் செயற்கை கால் செய்வதற்கு கூட தொழில் நுட்பம் விண்வெளி ஆராயய்சி செய்யும் போது கிடைத்ததாக அப்துல் கலாம் கூறியிருக்கிறார்
இவ்வாறே ஜோதிடம் எனும்   வானியல் அறிவும், கணித அறிவும், பல நூற்றாண்டுகளாகத்
திரட்டப் பட்ட பிரபஞ்ச நிகழ்வுகள் இவைகளை உள்ளடக்கிய ஒரு பெரும் அறியியல் திரட்டில்
விளைந்த ஒரு சிறிய பொருள்தான் நாம் இப்போது கூறும் எதிர்காலத்தை பற்றி மட்டும்
கூறுவதாக நினைக்கும் ஜோதிடம் ஒருகாலத்தில் ஒவ்வரு பிராமணரும் ஜோதிடம் அறிந்திருக்க
வேண்டிய கட்டாயம் இருந்தது .காலப்போக்கில் இது எதிர்காலத்தை கூறும் ஒரு கலையாக இதையே தொழிலாகக் கொண்ட சிலரால் மாற்றியமைக்கப்பட்டது

எனவே ஜோதிஷம் அல்லது ஜோதிடம் என்பது வேதத்தில் ஆறு அங்கத்தில் ஒன்று .சித்தர்களால் அர்த்தத்துடன்  பேணி வளர்க்கப்பட்ட கலை .ஆனால் எதிர்க்காலம் அறிந்து கொள்ள மட்டும் அல்ல .இதின் பல உபயோகத்தில் எதிர்க்காலம் அறிவதும் ஒன்று .ஆனால்  தற்போது இந்த சாஸ்திரம் இந்த எதிர்க்காலம் அறிவதிலேயே தேங்கிப் போய் நின்றுவிட்டது .காரணம் அனைவருக்கும் தெரிந்ததே .

Read More

Saturday 23 March 2013

// // Leave a Comment

நான் படித்து ரசித்த சில புத்தகங்கள்

நான் படித்து ரசித்த சில புத்தகங்கள் பற்றிப் பகிர்ந்து கொள்வதற்கு இப்படி ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த blogger ற்கு மனமார்ந்த நன்றி. நான் படித்து ரசித்த புத்தகங்களைப் பட்டியலிடுவது இன்னும் எளிதாகப் போய் விட்டது. சிந்து பைரவி படத்தில் ஒரு வசனம் வரும். நாமளா பாடறது ஒரு சுகம், சங்கீதம் கேக்கறது ஒரு சுகம். அதே மாதிரி சங்கீதத்தைப் பற்றி பேசுவதும் ஒரு சுகம் என்று சுஹாசினி சொல்லுவாங்க. அதே போல், புத்தகங்களைப் படிப்பது ஒரு சுகம், அதைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதும் ஒரு தனி சுகம். அதனால் தான் அலட்டல்களில் அவ்வப்போது என்னைக் கவர்ந்த சில புத்தகங்களைப் பற்றி இடுகைகள் எழுதியிருக்கிறேன். சரில்ல, ஓவரா பீத்திக்காதே. விஷயத்துக்கு வா’ன்னு சில பேர் கூவறாங்க.

சில புத்தகங்கள் வாழ்வின் யதார்த்தங்களைப் புரிந்து கொள்வதற்கு ரொம்பவே உதவியாயிருந்திருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், சுவாமி சுகபோகானந்தா எழுதிய மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் புத்தகம். வாழ்வின் மிகவும் விரக்தியான, தனிமைப் படுத்தப்பட்ட காலகட்டத்தில் மிகவும் தன்னம்பிக்கையூட்டிய புத்தகம். அதேபோல் காஞ்சி காமகோடி ஸ்ரீ பரமாச்சார்யாள் அவர்களின் பேச்சுகளின் தொகுப்பான தெய்வத்தின் குரல்.


The book you have read more than once:
ஒரு தடவைக்கு மேலாக ஒரு புத்தகத்தை வாசித்தது:



என்னடா இது மேஜர் சுந்தர் ராஜன் மாதிரி ஆங்கிலத்தில் சொன்னதை இன்னொரு முறை தமிழிலே சொல்கிறானே என்று நினைக்கறீங்க. பரவாயில்லை, நினைத்துவிட்டுப் போங்கள் :-)


அது பொன்னியின்செல்வனே மூன்று தடவை முழுவதுமாக படித்து முடித்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம், குந்தவை வரும் பாகங்களை மீண்டும் படிப்பேன்.

ஆங்கிலத்தில் மீண்டும் படிக்க வைத்த புத்தகம், டான் பிரவுணின் டிஜிடல் ஃபோர்ட்ரெஸ். விறுவிறுப்பாக இருந்ததால், விடிய விடிய படித்து விட்டு, முழுவதும் புரிவதற்காக மீண்டொருமுறை படித்தேன்.


One book you would want on dessert island:
ஒரு தனித்தீவில் நீங்கள் எடுத்துச் செல்ல நினைக்கும் புத்தகம்


பட்டுக்கோட்டை பிரபாகரன் மற்றும் சுஜாதாவின் எந்தவொரு நாவலானாலும் சரி. தமிழில் எழுதும் எவருக்கும் இவர்களே ஆசான். தைரியமாகச் சொல்லலாம்.

One book that made you laugh:
சிரிக்கவைத்தவொரு புத்தகம்:


ஆங்கிலத்தில் நகைச்சுவையான புத்தகம் என்றால், டிண்டின் காமிக்ஸ். அதுவும், கேப்டன் ஹேடக் எங்கேயாவது போய் அடிபட்டுக் கொண்டு, Billious of Blue Blistering Barnacles, Thundering Typhoons என்று கத்துவதைப் பார்த்தால் குபீரென்று சிரித்து விடுவேன்.

தமிழில் படித்ததில் சிரித்து வயிறு கிழிந்தது, கிரேஸி மகன் எழுதிய, கிச்சா. கிச்சா அடிக்கும் லூட்டியில் வயிறு அருந்தே போய்விட்டது. சாவி எழுதிய வாஷிங்கடன் திருமணமும் அதே ரகம். சில இடங்களில் மட்டும் கிச்சு கிச்சு ரகம்.

One book that made me cry:
அழவைத்த ஒரு புத்தகம்:


நல்லவேளை இது வரை அப்படியேதும் புத்தகம் படித்ததில்லை.


One book that you wish had never been written:
இந்த மாதிரி ஒரு புத்தகத்தை ஏன் எழுதினார்கள் என்றொரு புத்தகம்

பொன்னியின் செல்வனைப் படித்து முடித்து விட்டு, அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து கொண்டிருந்தபோது, அடுத்து என்ன நடந்திருக்கும் என்ற ஆவல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நேரம் அது. பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து, அதன் அடிப்படையில் யாராவது எழுதியிருக்கிறார்களா, என்று தேடியதில் விக்கிரமன் எழுதிய நந்திபுரத்து நாயகி பற்றி அறிந்து கொள்ள நேரிட்டது. அந்த நந்திபுரத்து நாயகி, குந்தவை என்றும் அவளை வைத்தே மூன்று பாகங்கள் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிந்ததும், அந்தப் புத்தகத்தை தேடாத இடமில்லை. கடைசியில்  புத்தகம் வாங்கி அன்றே  புத்தகம் செம கடி. வாங்கி விட்டோமே என்ற எண்ணத்திற்காகவே படிக்க வேண்டியதாப்போச்சு.

One book you wish you had written:
நான் எழுதியிருக்க வேண்டும் என்றெண்ணிய புத்தகம்


சுஜாதாவின் சில நாவல்களைப் படிக்கும் போது, இப்படியொரு கதைகளத்தைக் கொண்டு நமக்கேன் கற்பனை வர மாட்டேங்குது என்ற ஏக்கம் மட்டுமே வரும்.


One book you are currently reading
இப்போது படித்துக் கொண்டிருக்கும் ஒரு புத்தகம்:


இப்போது மூன்று புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன். விவேகானந்தரின் வாழ்க்கை சரித்திரம், சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள், ஜிம் கரி எழுதிய, Men are From Mars, Women Are From Venus.


One book you’ll recommend
நான் பரிந்துரைக்கும் ஒரு புத்தகம்


எதைச் சொல்ல எதை விட?

.
.
.
.
.
.

அடுத்த பதிவுல பாப்பம்
Read More

Wednesday 20 March 2013

// // Leave a Comment

சினிமாவின் பின்

நேற்று இங்கிலீஷ் பாடத்த கட் பண்ணி ஸ்கூல் லைப்ரரில Things you would never know without the movie industry.. என்று எழுத்தாளர் சுஜாதாவின் புத்தகம் ஒன்றுவாசிச்சனான். அதுல ஹாலிவுட் சினிமாக்களில் தான் இவை எல்லாம் பார்க்கலாம் என்று ஒரு பட்டியலே இருக்கிறது.

1 . என்னதான் ஏழையாக இருந்தாலும் கதாநாயகன் வசிக்கும் வீடு பளபளவென்று விசாலமாக தான் இருக்கும்.

2 . இரட்டையர்களில் ஒருவர் எப்போதும் கெட்டவர்

3 . பாம் வெடிப்பதை தடுக்க வேண்டும் எனில் எந்த ஒயரை வேண்டுமானாலும் வெட்டலாம். பரவாயில்லை வெடிக்காது.

4 . எவ்வளவு பேர் கதாநாயகனை தாக்க வந்தாலும் ஒவ்வொருவராகத்தான் வந்து உதைபடுவார்கள்.

5 . அதுவரை மற்றவர் உதைபட தங்கள் முறை வரும் வரை சுற்றிலும் நடனமாடிக் கொண்டிருப்பார்கள்.

6 . ராத்திரி படுத்துக் கொள்ளும் போது பெட்ரூம் விளக்கை அனைத்தாலும் அறையில் எல்லாம் நன்றாக தெரியும். என்ன, கொஞ்சம் நீலமாக தெரியும்....அவ்வளவுதான்

7 அழகான இருபத்திரண்டு வயது கதாநாயகி அணுஆயுத நியூக்ளியர் ரகசியங்களிலும் கம்ப்யூட்டரிலும் எக்ஸ்பெர்டாக இருக்க முடியும்

8 விசுவாசமுள்ள , கடுமையாக உழைக்கும் போலீஸ் அதிகாரி ரிட்டையர் ஆவதற்கு பத்து நாள் முன்பு சுட்டுகொள்ளப்படுவார்

9 வில்லன் கதாநாயகனை நேரடியாக சுட்டு கொள்வதற்கு பதில் சிக்கலான இயந்திரங்கள், பியூஸ்கள் , விஷவாயுக்கள், சக்கரங்கள், லேசர் அல்லது சுறாமீன்களிடம் விட்டு விட்டு சுற்றி வளைத்து தான் கொல்வான். நாயகன் தப்பிக்க முப்பது நிமிஷமாவது கிடைக்கும்

10 போலீஸ் விசாரணையின் போது கட்டாயமாக ஒரு நைட் க்ளப்பில் போய் விசாரித்தாக வேண்டும். பின்னால் மழுப்பலாக ஒரு ஸ்ட்ரிப் டீஸ் தெரிய வேண்டும்

11 எல்லா படுக்கைகளிலும் ஸ்பெஷலாக போர்வைகள் உண்டு. பெண்களுக்கு மார்பு வரை மறைக்கவும், ஆண்களுக்கு இடுப்பு வரை மறைக்கவும் (ஆண்கள் அப்போது சிகரெட் குடுத்தே ஆக வேண்டும்)

12 . யாராயிருந்தாலும் ஒரு விமானத்தை தரையிறக்க முடியும். கண்ட்ரோல் டவரிலிருந்து எப்போதும் சிகரெட் குடிக்கும் ஆசாமி பேசியபடியே இறங்க வைப்பான்.

13 . தண்ணீருக்கடியில் போனாலும் லிப்ஸ்டிக் அழியாது.

14 . எந்த யுத்தமாக இருந்தாலும் காதலியின் போட்டோவை காட்டாதவரை நாயகன் இறக்க மாட்டான். எடுத்து காட்டி விட்டால் அடுத்த காட்சியில் அவன் க்ளோஸ்

15 . பாரிஸ் நகரில் எந்த ஜன்னலில் இருந்து பார்த்தாலும் ஈபில் டவர் தெரியும்

16 . கதாநாயகன் வில்லனிடம் செமையாக அடி வாங்கும் போது வலி தெரியவே தெரியாது. ஆனால் நாயகி பஞ்சு ஒத்தடம் கொடுக்கும் போது மட்டும் 'ஸ்ஸ்... ஆ...' என்பான்

17 . ஒரு பெரிய கண்ணாடி காட்டப்பட்டால் அதன் மீது யாராவது தூக்கி வீசி எறியப்படுவார்

18 . காரில் நேரான ரோட்டில் நேராக போனாலும் நாயகி அடிக்கடி ஸ்டியரிங்கை திருப்புவாள்.

19 . எல்லா 'டைம் பாம் 'களிலும் வெடிக்க எத்தனை செகண்ட் பாக்கி இருக்கிறது என தெரிந்தே ஆக வேண்டும்

20 . போலீஸ் அதிகாரியை சஸ்பென்ட் பண்ணதும் தான் கேசை துப்பு துலக்க தேவைபடுவார்.

21 . தெருவில் நீங்கள் நடனமாட தொடங்கினால் தெருவில் வரும் போகும் எல்லோரும் அதே தாளத்தில் ஆடுவார்கள்.

22 .பாழடைந்த பங்களாவில் தங்கும் பெண்கள் எதாவது வினோத சத்தம் கேட்டால் என்னவென்று பார்க்க சிக்கனமான உடையில் தான் நடந்து செல்வார்கள்.

23 .போலீஸ் அதிகாரிகளும் அவர்களுடைய உதவியாளர்களும் எப்போதும் நேர்மாறான குணமுள்ளவர்களாகத்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

24 .ரஷ்ய அதிகாரிகள் ரஷ்யாவில் தங்களுக்குள் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொள்வார்கள்

இவை பெரும்பாலும் நம் பாலிவூட், கோலிவூட் சினிமாக்களிலும் பொருந்துவதை நீங்கள் இது நேரம் உணர்ந்திருப்பீர்கள்.ஆனால் தமிழ் சினிமாக்கு அனுபந்தமாக சில விஷயங்கள் உண்டு. அவை

25. உணர்ச்சி வசப்படும் காட்சியில் திடீர் என்று மின்னல் வெட்டி மழை வந்தே ஆக வேண்டும். நாயகி வீட்டை விட்டு துரத்தப்படும் போது , டூயட்டின் போது, காதலின் போது எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம். மழையின் போது மட்டும் எப்போது அவள் வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் புடவை அணிய வேண்டும்

26 .பாடல் காட்சியில் ஒரு வரி மயிலாப்பூரிலும் அடுத்த வரி மியாமியிலும் பாடப்படலாம்

27 .ஒரே பாட்டில் பாடிக்கொண்டிருக்கும் போது உடை மாறலாம். நிறம் மாறலாம்.

28 .சட்டென்று எல்லா பிஜிஎம்மும் நின்று விட்டால் யாரோ செத்து போய்விட்டார்கள் என்பது உறுதி.

29 .கோர்ட்டில் யார் வேண்டுமானாலும் வழக்கின் எந்த கட்டத்திலும் நுழைந்து உடனே சாட்சி சொல்லலாம். கோர்ட் வாசற்படியில் நின்றவாறும் சாட்சி சொல்லலாம்.

30 .'முகூர்த்ததுக்கு நேரமாறது பொண்ணை வரசொல்லுங்கோ' என்று குடுமி சாஸ்திரி அவசரப்படுத்தினால் பெண் காணாமல் போக போகிறாள் என்று அர்த்தம்.

31 இறுதியாக பாடலின் எந்த காட்சியிலும் எந்த வேளையிலும் எந்த லோகேஷனிலும் நாற்பது பெண்கள் வரலாம்.எல்லாரும் குட்டை பாவாடை அணிய வேண்டும்


இப்படி இன்னும் சுவாரசியமான தகவல்கள் இருக்கின்றன. டைம் கிடச்சா நீங்களும் ஒருக்கா வாசிச்சு பாருங்கோ

Read More

Sunday 17 March 2013

// // Leave a Comment

உலக நடப்பு (கார்ட்டூன்களாய்)

குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டுகின்றாயே என என் நண்பர்கள் என்னை சில நேரங்களில் கேலி செய்வதுண்டு. சரி நம் பார்வையை எதிலெதில் அகலப்படுத்த இயலுமோ அதைப் புரிவோமே என முதல் சுழி இட்டு அதை தங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்........உலக நடப்பை நாமும் உன்னிப்பாக நோக்கலாமே இக் கார்ட்டூன்கள் வாயிலாக..   வாங்க…


http://srathan.blogspot.com/
 தங்கம் விலை உயர்வு
http://srathan.blogspot.com/
கடாஃபி ஆட்சிக் கவிழ்ப்பின் நோக்கம் மனித உரிமையா அல்லது வளமிகு எண்ணெய்யா!



உலகில் ஆட்சியாளர்களால் நிகழும் வன்கொடுமைகளையும்,
மனித உரிமை மீறல்களும் கண்டு காந்...தீயப்  பார்வையில்! UN 

http://srathan.blogspot.com/
சோமலியா நாட்டின் வறுமையை விளக்கும் ஓவியம்

http://srathan.blogspot.com/
பூகோளம் படும் பாடு

http://srathan.blogspot.com/
உஷ்ணத்தில் உலக உருண்டை

http://srathan.blogspot.com/
சோமாலியாவின் வறுமை! 

http://srathan.blogspot.com/
மனித உரிமைகளின் இன்றைய நிலை

http://srathan.blogspot.com/
லிபிய அதிபரின் கடாஃபியின் மறைவிற்கு பின் அவரது சகாப்தம் வீழ்ந்ததை சித்தரிக்கும் படம்

http://srathan.blogspot.com/
வறியவனுக்கும் செல்வந்தனுக்கும் உள்ள வேறுபாடு

http://srathan.blogspot.com/
இஸ்ரேலின் வன்மத்திற்க்கு ஆதரவளிக்கும் அமெரிக்கா

http://srathan.blogspot.com/
உலகின் மக்கள்தொகை 700 கோடியைத் தாண்டிவிட்டது

http://srathan.blogspot.com/
ஈரானும், இஸ்ரேலும் தொடர்கின்றது அணு ஆயுத உற்பத்தியினை






மனிதர்களின் மனதில் ஒரு வலுவான கருத்தாக்கத்தை பதியவைப்பதில் பேச்சின் / எழுத்தின் பங்கை விட, மிக எளிதான முறையிலான கார்ட்டூன்களின் பங்கு முதன்மையிடத்தினைப் பெற்றுவிடுகின்றது. இதனை பிரசுரித்த அரேப் நியூஸ் நாளிதழ் இதழிற்கும், கருத்தோவியம் வரைந்த ஓவியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!


Read More

Friday 15 March 2013

// // 5 comments

என்னது காமிக்சா ??

புதையலைத் தேடிக் கிளம்பிய அவர்கள் வழியில் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இதுவரை யாருமே பயணம் செய்திராத பாதையில் பயணம் செய்யும் தைரியம் கொண்டு முன்னேறிச் சென்ற அவர்களை எதிர்நோக்கி கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஆபத்துகள் காத்துக் கிடந்தன. ஆள்விழுங்கி ஏரிகள், பயங்கரப் பிராணிகள், காற்றும் புக முடியாத அடர்கானகம், நரமாமிசம் தின்னும் காட்டுவாசிகள் என்று எக்கச்சக்க தடங்கல்கள். அதை எல்லாவற்றையும் முறியடித்து அவர்கள் புதையல் பாதையின் இறுதியை நெருங்கி விட்டார்கள். அங்கே..

நிற்க.. மேலே இருக்கும் வாசகங்களைப் படிக்கும்போது ஏதேனும் காமிக்ஸ் புத்தகம் படிக்கும் உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறது எனில்.. சந்தோஷமாக உங்கள் தோளில் நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள். என் இனமய்யா நீர். என்னது காமிக்சா? அது சின்ன பிள்ளைங்க படிக்குறதாச்சே என்று சொல்லக்கூடியவர் என்றால் இப்படியே ஜகா வாங்கிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான இடுகையல்ல..




அழகான படங்களோடும் மிக நுண்ணிய தகவல்களோடும் வரும் காமிக்ஸின் சித்திரக்கதைகள் நம் மனதை எளிதில் கொள்ளை கொண்டு விடக்கூடியவை. ஒரு அறை என்பது இப்படி இருந்தது என்று பக்கம் பக்கமாக வார்த்தைகளில் விளக்குவதை விட ஒரு படத்தின் மூலம் எளிதாக சொல்லி விடலாம். பார்க்கப்போனால் காமிக்ஸ்தான் இன்றைய திரைப்படங்களுக்கான முன்னோடி என்றுகூட சொல்லலாம். லாங்ஷாட், க்ளோசப் என்று ஒரு காட்சியை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கான ஆரம்ப முயற்சிகளை எல்லாம் முதலில் செய்து காண்பித்தது காமிக்ஸ்தான்.

காமிக்ஸ் வாசிப்பது ஒரு அற்புத அனுபவம். வாசிக்கும் நம்மையும் ஒரு பாத்திரமாக மாற்றி உள்ளிழுத்துக் கொள்ளும் ஆற்றல் அந்தப் புத்தகங்களுக்கு உண்டு. அந்தப் புத்தகங்களை வாசிக்கும் தருணங்களில் விரைந்தோடும் குதிரைகளில் நாயகர்களோடு ஒருவனாக நானும் பயணித்திருக்கிறேன். இரும்புக்கை மாயாவியாய் மாறி அரூப வடிவில் துப்பாக்கி ஏந்தி எதிரிகளை டுமீல் டுமீல் என சுட்டு வீழ்த்தி இருக்கிறேன். ஸ்பைடரின் வலையில் தலைகீழாகத் தொங்கியுமிருக்கிறேன்.

கொலராடோ நதியும் செவ்விந்தியர்களும் ஏதோ நமக்கு வெகு அருகாமையில் இருப்பதைப் போன்றதொரு உணர்வை காமிக்ஸ்கள் எனக்கு கொடுத்திருக்கின்றன. எனக்கு அறிமுகமாயிராத முற்றிலும் புதிய உலகங்களையும் காமிக்ஸ்களின் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். அஸ்டெக் என்றொரு இனம் இருக்கிறது, அவர்கள் சூரியக்கடவுளை வழிபடுவார்கள் என்பதில் ஆரம்பித்து கவுபாய்களின் உலகம் எப்படியிருக்கும் என்பது வரை காமிக்ஸ்கள் பல தகவல்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றன. 

விவரம் தெரிந்து நான் முதல்முதலில் காமிக்ஸ் வாசித்த தினம் இன்றைக்கும் எனக்கு நினைவில் இருக்கிறது.அன்று ஆரம்பித்த காமிக்ஸ் மீதான என்னுடைய ஆர்வம் இன்று வரை தொடர்கிறது.

இந்த விஷயங்களை எல்லாம் என் நினைவுகளின் பேழையிலிருந்து இப்போது மீட்டெடுத்துப் பேசுவதற்கான அவசியம்.... இருக்கிறது. ஏனெனில் நான் வாசித்த காமிக்ஸ் பற்றியும் அலட்டப்போறேன்

சில வருடங்களுக்கு முன் கமல்ஹாசன் நடித்த "வெற்றி விழா" என்றொரு படம் வெளியானது உங்கள் நினைவிலிருக்கலாம். அது இந்த காமிக்ஸ் தொடரைக் காப்பியடித்து எடுக்கப்பட்டதே. இரத்தப்படலத்தின் மூலக்கதை என்ன? கொலை முயற்சிக்கு ஆளாகி தன் நினைவுகளைத் தொலைத்த ஒருவன் தான் யாரெனத் தெரிந்து கொள்ள மேற்கொள்ளும் பயணம்தான் "இரத்தப்படலம்". ஒருவன் தன்னைத்தானே தேடிப்போவது என்பது விசித்திரம்தான் இல்லையா? மொத்தம் பதினெட்டு பாகங்கள் உடைய கதை. இதுவரை பத்து பாகங்கள் மட்டுமே லயனில் வெளிவந்து இருந்தன. ஆனால் இப்போது எல்லாப் பாகங்களையும் இணைத்து ஒரு ராட்சத இதழாக இந்தப் புத்தகம் வெளிவந்து இருக்கிறது.


கமிக்ஸினால் எனக்கு ஏற்பட்ட எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள்.. அடுத்த இடுகையில்..




Read More

Wednesday 13 March 2013

// // 2 comments

OH MY GOD


OHMஇன்று மதியம் "கயி video center" இன் உதவியால் "OMG : Oh My God" என்ற படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் 2012 September மாதம் வெளிவந்தது. Trailer பார்த்த உடனேயே படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், அப்போது அது முடியாது போனது. இந்த படம் "The Man Who Sued God" என்ற ஆங்கில மொழி படத்தையும், "Kanji Virudh (vs) Kanji" என்ற Gujrati மொழி நாடகத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. கதையின் கரு: பூகம்பத்தில் தனது கடையை இழந்த "Kanji bhai", கடவுளை court க்கு அழைக்கிறார்.

பொதுவாக ஆங்கில படங்களை மைய்யமாகக் கொண்டு அமைக்கப் படும் நமது தமிழ் மொழி படங்கள்- முதலில் இந்திய மக்களுக்கு ஏற்றார் போல் மாற்றப் படுகின்றன. இப்படி மாற்றப்படும் போது, இந்திய மொழி படங்களுக்கே உரியதான ஒரு சில விஷயங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு- அம்மா sentiment, கடவுள் sentiment போன்ற மசாலா சாமான்கள். இதனாலேயே ஒருசில remake படங்களை நான் பார்ப்பது கிடையாது. ஒருவேளை "OMG : Oh My God" கூட இந்த விபத்திற்கு ஆளாகியிருக்கக் கூடுமோ என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால், டைரக்டர் Umesh Shukla வை, இந்திய மசாலாக்களை (தவிர்க்க முடியாதானாலும்) குறைத்ததற்காக பாராட்டியே ஆக வேண்டும்.
OHM
படத்தின் Highlight - dialogues! பொதுவாக, நமது சினிமாக்களில் நாத்திகம் பேசும் கதாபாத்திரங்கள்- திடீரென்று மனம் மாறி ஆத்திகர்களாக மாற்றப் படுவது தான் வழக்கம். இந்த படத்தில், hero வான Kanji bhai ஐ- atheist என்று கூறுவதை விட rationalist என்று கூறுவதுதான் உசிதம். அவருடைய கதாபாத்திரத்தின் அமைப்பு- தனது வீட்டில் மனைவியின் மூடத்தனமான பக்தியை கேலி செய்யும் போதும் சரி, போலி சாமியார்களிடம் court ல் வாதாடும்போதும் சரி- அழகான integrity maintain செய்யப் பட்டிருக்கிறது. இவர் நாத்திகம் பேசி ஒரு நண்பரின் விரதத்தை கலைத்து விட்டார் என்று  Kanji bhai யின் மனைவி விரதம் இருக்க- Kanji bhai அடிக்கும் comment பிரமாதம் ("உன் mobile ஐ charge இல் போட என் mobile இல் எப்படி battery full ஆக முடியும் "?)! கடவுளை commercialize செய்திருக்கும் போலி சாமியார்களை court இல் விசாரணை செய்யும் போதும் dialogue களின் logic கதையை அழகாக நகர்த்துகிறது. ஒரு டிவி interview வில் Kanji bhai யின் வசனம் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. "உண்மை இருக்கும் இடத்தில் மதம் தேவைக்கிடையாது".

Akshay Kumar, "கிருஷ்ண வாசுதேவ் யாதவ்"- அதாவது  கடவுளாக நடித்திருக்கிறார். அவருக்கும் Paresh Rawal (Kanji bhai) க்கும் நடக்கும் சம்பாஷனைகள் அழகாக அமைந்திருக்கிறது. Mithun Chakroborthy- லீலாதர் சுவாமி என்ற போலிச்சாமியாராக நடித்திருக்கிறார். "கிருஷ்ணா-கிருஷ்ணா"என்று நாடனம் ஆடிக்கொண்டு, மற்ற போலிச் சாமியார்களுக்கு தலைவராக அழகாக நடித்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக- படத்தின் முடிவு. Rational ஆக கொண்டு செல்லப்பட்ட கதைக்கு rational ஆன முடிவு.

நேரம் கிடைத்தல் பார்க்கவும்.


என் மதிப்பு  7/10
Read More

Monday 11 March 2013

// // 13 comments

சுயபுராணம்..


அனைவருக்கும் வணக்கம். முதலில் என் பிளாகுகும் ஒரு விசிட் அடிச்சுதான் பார்க்கலாம் என்று நினைத்த உங்களுக்கு நன்றி. 1995ம் ஆண்டு கார்த்திகை மாதம் 29ம் தேதி பிறந்து வளர்ந்து ஆளாகி நல்ல குப்பைகளை கொட்டிக்கொண்டிருந்த நான் ஆட்டைக்கடிச்சு கோழியைக்கடிச்சு கடசில பிளாக்கையும் கடித்துத்தான் பார்க்கலாம் என பண்ணிய ஒரு ட்ரை தான் இது. யாவரினதும் ஆதரவும் ( அல்லது ஏதோ ஒன்று !!! ) கிடைக்கும் என நம்பி எனது சேவையை ( ஹிஹி ) இங்கும் விஸ்தரிக்கின்றேன்.

நம்மல சுத்தி தினமும் எவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்கள்ளாம் நடக்குது. அதுல சில நாம படிச்சு தெரிஞ்சிக்கிட்டதா இருக்கும், சிலது கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டதா இருக்கும், சிலது நமக்கே கூடநடந்ததா இருக்கும். அத மாதிரி நான் படிச்ச, கேட்ட,  அனுபவிச்ச சில சுவாரஸ்யமான விஷயங்கள இதுல நீங்க பாக்கலாம், படிக்கலாம். இதுல நாட்டு நடப்பு, சினிமா, அரசியல், பொது அறிவுனு எல்லாமே இருக்கும்.  இந்த தளத்துக்கு என்ன பேரு வக்கறதுன்னு ரெண்டு மூணு நாளா மண்டையைப் போட்டு உடச்சு கடைசியா அலட்டதானே போறம் எண்டு சிவாவின் அலட்டல்கள்"னு வச்சிருக்கேன்.


என்னப்பத்தி

என்னை பற்றி சொல்லணும்னா.................அடிக்கடி வாழ்வியல் கொள்கைகளை மாத்தி மாத்தி வாழ்ந்துவரும் ஒரு ஜென்மம்

இப்போதைக்கு இவ்வளவு தாங்க… 


சுயபுராணம்ன்னு தலைப்பை போட்டிட்டு என்னைப் பற்றி வேற என்ன எழுதிறதிண்ணே தெரியல(அது சரி... ஏதாவது இருந்தா தானே எழுதிறதுக்கு ஹி....ஹி.......)!!!!????  நான் போடுகிற போஸ்ட்களைப் பார்த்து நீங்களே என்னைப் பற்றி என்னவெண்டாலும் கற்பனை பண்ணிக்கொள்ளலாம்..........


டிஸ்கி

இப்படி டைப் பண்ண ஆரம்பித்ததுமே தாவு தீர்ந்து விட்டது. இப்போவே கண்ண கட்டுதே! இந்த transliterate-உடன் செம காமெடி :) இதுக்கு பதிலா கைல எழுதி ஸ்கேன் பண்ணி போட்டுறலாம் போல இருக்கு




FREE ADVICE- நீங்களும் blog தொடங்குங்க மனசுக்கு நல்லா இருக்கும்




Read More