Saturday 30 June 2018

// // 1 comment

ஒரு கண்ணீர் துளியும் நானும்

அடிக்கடி இதுல அலட்டனும் எண்டு நினைக்கிறனான் ஆனா எங்க முடியுது .. நேரம் .. அது தாங்க முக்கிய பிரச்சனையா இருக்குது .. ஆனா இனி அப்ப அப்ப வந்து எதோ அலட்டிட்டு போறன் ..

வாழ்க்கையில் என்னை ரொம்ப பாதிச்ச சம்பவங்கள் எண்டு எடுத்தா அதில் ஒரு விடயம் நான் வாழ்ந்து கொண்டு இருந்த வாழ்க்கையை முழுவதுமாய் திருப்பிய விடயம் .. ஒரு சில கண்ணீர் துளி .. ஒரு பெண்ணின் கண்களில் இருந்து .. அதை அந்த பெண் மற்றவர்களிடம் இருந்து மறைக்க போராடிய கணம்.. ஆம் எல்லாவற்றையும் எளிதில் மறந்து விடும் குணமுடைய எனக்கு இந்த ஒரு சில கணப்பொழுது மட்டும் எப்படியோ என் மனதில் நிலைகொண்டு விட்டது.

ஒரு மகனாக.. தம்பியாக..  என் வீட்டில் பல பெண்கள் என்ற போதிலும் எந்த பெண் கண்ணிலும் நான் அந்த நொடி வரை கண்ணீரை பார்த்ததில்லை.. அதுவே என் மாற்றத்துக்கு காரணம்.. அதுவரை வாழ்க்கையில் என்ன செய்கின்றோம் என்றே தெரியாது .. சில பல கூடாத பழக்கங்களையும் சேர்த்தது கொண்டு திரிந்த என்னை அந்த கண்ணீர் துளிகள் சில கேள்விகள் கேட்க வைத்தது.. என்னையும் பெண்கள் கண்ணில் கண்ணீரை வர வைக்கும் ஒரு சாதாரண ஆண் வர்க்கத்தில் சேர்க்கவைத்தது அந்த கண்ணீர் துளிகள். 

மகனாய் .. தம்பியாய் மட்டுமே இருந்த என்னை ஒரு நல்ல மனிதனாக.. வாழ்க்கையில் நீயும் எதாவது செய் .. நீ நன்றாக படிப்பாய் என நம்பும் உன் அம்மாவின் நம்பிக்கையை பொய் ஆக்காதே என சொல்லிய கணங்கள் அவை .. எனக்கு ஒரு நல்ல நண்பியை உருவாக்கிய துளிகள் அவை... பல தங்கைகளை உருவாக்கிய நொடிகள் .. ஆம் நான் இன்று இவ்வாறு இருக்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம்.. அந்த கண்ணீர் துளிகள் .. 

அன்றில் இருந்து அந்த கண்களில் ஆனந்தத்தை மட்டுமே பார்க்க வேண்டும் எண்டு நினைத்திருந்தேன் .. எப்போதெல்லாம் அக் கண்ணுக்குரியவரை சந்திப்பேனோ அப்போதெல்லாம் அக் கண்கள் அவள் உதடுகள் சொல்லும் பொய்யினை மறுத்து உண்மைகளை சொல்லும் .. என்ற போதிலும் நான் அவள் உதடுகள் சொல்லும் பொய்யை நம்புவதாக அவளையும் என்னையும் ஏமாத்துவேன். அவளும் நான் நம்பியதாய் பொய்ப்புன்னகை செய்வாள்.. 

கடந்த வருடங்களில் என்னால் எந்த கண்ணும் ஒரு துளி நீர் கூட விடவில்லை என்பதில் கவனமாய் இருந்தேன் என்ற போதிலும் கண்ணீர் சிந்தும் பல கண்களையும் அவற்றை மறைக்க முயற்சித்துரும் பெண்களையும் கண்டேன் அவை என் மனதை பாதித்த போதிலும்.. 2014 என்னைப் பாதித்த அளவுக்கு எவையும் பாதிக்கவில்லை .. 

ஆனால்  இன்று.. மீண்டும் அந்த கண்கள் .. அதே கண்ணீர் துளிகள் .. அதை என்னிடம் இருந்து மறைக்க போராடிய கணம்.. வாழ்க்கையில் எதை நான் பார்க்க கூடாது என்று நினைத்தேனோ அதே கணப்பொழுதுகள் மீண்டும் .. உள்ளத்தால் உடைந்த கணங்கள் அவை.. ஆனாலும் எந்த ஒரு ஆறுதலான வார்த்தைகளும் அவளுக்கு சொல்ல தகுதியற்றவனாக நான் அவள் அருகே. 

அவளுக்கு சொல்லும் தகுதி இல்லை என்ற போதிலும். மகனாக, தம்பியாக , அண்ணனாக .. தோழனாக .. காதலனாக .. இருக்கும் நான் சொல்ல விரும்பும் ஒரு விடயம் நாம் யாரையாவது உண்மையாக அன்பு செலுத்துவோமாக இருப்பின். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வருவதற்கு நாம் எந்த காரணத்தை கொண்டும் அனுமதிக்க கூடாது.. முக்கியமாக அதற்கு  நாம் காரணமாக அமைய கூடாது.. எமது கருத்துக்களை அமைதியாக அவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியும்.. அதே நேரத்தில் அவர்களின் கருத்துக்களை கேட்கவும் எமது செவிகளை சாயுங்கள்..

Read More