Thursday 3 December 2015

// // Leave a Comment

அவனும் அவளும் ( ஒரு காதல் கதை )

அப்ப அப்ப வந்து எதாவது எழுதுறதே வேலையா போச்சு. தொடந்து எழுத எனக்கும் ஆசை தான் பட் ஆசைகள் எல்லாம் நிறைவேறுமா ? ஆனால் இனி வாரத்துக்கு ஒரு தடவையாவது அலட்டுவம் எண்டு இருக்கன். பாப்பம் எந்தளவுக்கு சரிவருது எண்டு. இந்த முறை ஒரு காதல் கதையுடன் வந்து இருக்கன் சத்தியமா இது காதல் கதை தாங்க. நம்புங்க… கத அப்பிடி இப்பிடி தான் இருக்கும் ஏனென்டா சொந்த அனுபவம் இல்ல பாருங்க . 
அது ஒரு காலை வேளை நண்பனுக்கு காதல் தூதாக வருகின்றான் அவன். தோழியின் காதலுக்கு தூதாக வருகின்றாள் அவள். அவனுக்கு தெரியாது தன்னைக் கடந்து சென்றவள் தன்னுடைய நாயகி என்று. அவளுக்கும் தெரியாது அங்கு நின்றவன் தன்னுடைய நாயகன் என்று. நாளடைவில் ஒருநாள் கதவின் விளிம்புகளுக்கிடையால் அவளைக் கண்டான் அவன். சாதாரணப் பெண் அவள்…… அவன் பார்வைக்கு அழகியாய் தெரிந்தாள். அவனுக்கு ஏதோ ஒரு பிரியம் ஏற்பட்டது. கூடுமான பொழுதெல்லாம் அவளைக் காணச் செல்வான் அவளுக்கே தெரியாமல்.
எப்படியாவது சொல்லி விட வேண்டும் தன் காதலை என்று நினைத்தான் அவன். சொன்னால் ஏற்பாளோ? இல்லை மறுப்பாளோ? என்ற குழப்பமும் அவனிடம் இருந்தது. மெதுவாய் நண்பன் காதில் விடயத்தைச் சொன்னான். தோழி வழியாய் அவளுக்குத் தூது வந்தது. விடயத்தை கேட்டும் உடன்பாடில்லாதவள் போல் காட்டிக் கொண்டாள். ஆனால் மனதிற்குள் அந்த விடயம் அலை பாய்ந்து கொண்டே இருந்தது அவளுக்கு. இரவூ வேளை தூங்கச் சென்ற அவளுக்கு கனவில் நாயகனின் நாடகம். விடிந்தது பொழுது…… கலங்கிய குட்டையானாள் அவள். மெல்லக் குடியேறினான் நாயகன் அவள் மனதில்……

கனவைப் பற்றித் தோழியிடம் உரைத்தாள். கனவைக் கேட்ட தோழி அவள் கண்ணுக்குள் இருந்த கனவைக் கண்டுகொள்ளவில்லை. வெட்கம் கலந்த அவளது புன்னகையின் அர்த்தம் கண்டுணரவில்லை. இறுதியில் ஒருவாறாக அவன் நண்பன் மூலம் அவள் தூதனுப்பினாள் தன் காதலை. தூது சென்றவன் அவளது காதலைச் சொல்லாது தொலைபேசி எண்ணை மட்டுமே கொடுத்து விட்டான். அதே போல் அவனது தொலைபேசி எண்ணும் அவளுக்கு கொடுக்கப்பட்டது.
எதற்காக இந்த எண்ணைத் தந்திருப்பாள் அவள்? ஒருவேளை சரமாரியாக திட்டுவதற்கோ? என்ற பயம் அவனிடம் தோன்றியது. ஆகையால் ‘Hi’ என்று குறுந்தகவல் மட்டும் அனுப்பினான் அவன் அவளுக்கு. அவளும் சாதாரணமாகவே கதைத்தாள். நட்பை வளHக்க நினைக்கிறாள் முதலில் என்று நினைத்தான் அவன். அப்போது அவளிடமிருந்து ஒரு குறுந்தகவல் வந்தது ‘வெளியே தெரிந்தால் பிரச்சினையாகி விடும் நம் காதலை வெளியே சொல்லாதீHகள்’ என்று. அவனுக்கு அமிHதத்தை குடத்தில் வாHத்து வாயில் விட்டது போல் இருந்தது. அவன் மீண்டும் உறுதி செய்தான் ‘காதலா? அப்ப ழுமுஆ?’ என்று. அப்பொழுது தான் அவளுக்கு புரிந்தது தூது சென்றவன் பாதியை விழுங்கிவிட்டான் என்று. அவளும் ‘ழுமு’ என்று குறுந்தகவல் அனுப்பிவிட்டாள். ஆனால் மனதினுள் இன்னும் கொஞ்சம் மறைத்திருந்து அவனிடம் விளையாடியிருக்கலாம் என்று ஒரு நப்பாசை. நாயகனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. சந்தோஷத்தில் கூத்தாடினான் கத்தி.

நாயகன் முகம் அறியாமலேயே அவனைக் காதலிக்க தொடங்கிய அவள் காணவேண்டும் என ஆசைப்பட்டாள். ஆனால் கேட்பதற்கு வெட்கம். அவளை வென்ற அவன் ‘நான் உன்னைப் பாHக்க வேண்டும். வீட்டுப்பக்கம் வருகிறேன்’ என்றான் முந்திரிக்கொட்டை போல். எப்படியோ பார்க்கப் போகிறேன் என்ற களிப்பில் அவளும் இருந்தாள்.
பார்வை ஒன்று புன்னகை பூக்கள் சில என சந்திப்பு நிறைவேறிய பின் Propose பண்ணுவது எப்படி என்று சிந்தனை எழுந்தது அவனுள். அவளிடமே கேட்டான் ‘உன்னை எப்படி Propose பண்ணுவது’ என்று மீண்டும் குறுந்தகவலில். அவனது நகைச்சுவையில் மூழ்கி மீண்டும் மீண்டும் அவன் மேல் காதலில் விழுந்தாள் அவள்.
ஒருவாறாக Propose பண்ணுவதற்கு நாட்குறித்தாயிற்று. அந்நாளும் வந்தது. அன்று அவளுக்கு அவன் ஓர் அழகிய பொம்மையை பரிசளித்தான். வந்த வேலையை மறந்து அவளோடு ஏதோ பேசிவிட்டு சென்ற பின் தான் ஏதோ அவனுக்கு ஞாபகம் வந்தது. குறுந்தகவல் அனுப்பினான் அவளுக்கு ‘வந்த வேலையை மறந்து விட்டேன் I LOVE YOU’ ’ என்று. புதுமையான Proposalஐ வாஞ்சையோடு ஏற்றுக்கொண்டாள். இந்த நகைச்சுவை நாயகனின் காதல் வயது இப்பொழுது ஓராண்டிற்கு மேலாகிறது.
Read More

Saturday 29 August 2015

// // 4 comments

விருமாண்டி ஸ்டைல் கதை


யேவன் என்று நினைத்தாய்.....எதை கண்டு சிரத்தாய்....விதை ஒன்று.... முளைக்கையில்....வெளிப்படும் முழுரூபம் ( அட தொலைபேசி அடிக்குதுங்க )

சாப்பிட்டு கொண்டிருந்த இந்திரன்  அலைபேசி திரையில்  யாரென பார்த்தான் .   சந்திரன் அழைக்கிறார் என்று காண்பித்தது . வாயில் பரோட்டாவை தினித்தவாறே இயக்கினான் .


இந்திரன் : சொல்லு மச்சி !

சந்திரன் : ________________

இந்திரன் : அய்யயோ ! எப்போ ?

சந்திரன் : ________________

இந்திரன்: பொருளு எடுத்துட்டு போனியா ?

சந்திரன் : _________________

இந்திரன்: போடங்கோ! எத்தனைவாட்டி சொல்றேன் பொருள்  இருக்ககான்னு செக் பண்ணிட்டுப்போண்ணு ! இப்படி தனியா போய்  மாட்டிகிட்டியேடா !

சந்திரன் :__________________

இந்திரன்: எத்தனை பேரு ?

 சந்திரன்:___________________

இந்திரன்: சரி இப்போ  எங்க இருக்க நீ ?

சந்திரன் : __________________

இந்திரன் : யாழ்ப்பாணம் மெயின் ஹாஸ்பிட்டலா ? சரி இரு வரேன் !

பாதி உரையாடலை  படித்து  முடித்ததும் பலபேருக்கும்  இந்த கதை கீழே உள்ளவாறு இருந்திருக்கும் என யூகித்திருக்கலாம் ! 

இந்திரன் : சொல்லு மச்சி !

சந்திரன் : ஆனந்து ,ஆள  வச்சு அடிச்சுட்டாண்டா !

இந்திரன் : அய்யயோ ! எப்போ ?

சந்திரன் : இப்போதான்டா

இந்திரன்: பொருளு எடுத்துட்டு போனியா ?

சந்திரன் : இல்லடா

இந்திரன்: போடங்கோ! எத்தனைவாட்டி சொல்றேன் பொருள்  இருக்ககான்னு செக் பண்ணிட்டுப்போண்ணு ! இப்படி தனியா போய்  மாட்டிகிட்டியேடா !

சந்திரன் : எதிர்பார்க்கலை மச்சி !

 இந்திரன்: எத்தனை பேரு ?

 சந்திரன்: நாலஞ்சுபேரு வந்தாங்கடா

இந்திரன்: சரி இப்போ  எங்க இருக்க நீ ?

சந்திரன் : யாழ்ப்பாணம் மெயின் ஹாஸ்பிட்டல் !

இந்திரன் : யாழ்ப்பாணம் மெயின் ஹாஸ்பிட்டலா ?சரி இரு வரேன் !

ஆனா நான் கதையை மேல உள்ளது மாதிரி நினைச்சு  எழுதலைங்க ! கொஞ்சம்  கீழே படிங்க!

இந்திரன் : சொல்லு மச்சி !

சந்திரன் : வண்டி பஞ்சர் ஆயிடுச்சு!

இந்திரன் : அய்யயோ ! எப்போ ?

சந்திரன் : இப்போதான்டா

இந்திரன்: பொருளு எடுத்துட்டு போனியா ?

சந்திரன் : லோக்கல் சவாரி அதான் ஜாக்கி  லிவரு எதுவும் எடுக்காம கேர்லெஸ்ஸா இருந்துட்டேன் !

இந்திரன்: போடங்கோ! எத்தனைவாட்டி சொல்றேன் பொருள்  இருக்ககான்னு செக் பண்ணிட்டுப்போண்ணு ! இப்படி தனியா போய்  மாட்டிகிட்டியேடா !

சந்திரன் : சரி மச்சி ! சும்மா உதார் உடாம குய்க்கா  கெளம்பி வா  ! கஸ்டமர் கார்லயே வெய்ட் பண்றாங்க !

இந்திரன்: எத்தனை பேரு ?

 சந்திரன்: நாலு பெருசு ! ரெண்டு சிறுசு !

இந்திரன்: சரி இப்போ  எங்க இருக்க நீ ?

சந்திரன் : யாழ்ப்பாணம் மெயின் ஹாஸ்பிட்டல் பக்கத்துல !


இந்திரன் : யாழ்ப்பாணம் மெயின் ஹாஸ்பிட்டலா ? சரி இரு வரேன் !



விருமாண்டி ஸ்டைல்னு  சொன்னவுடனே அருவா கதைன்னு நெனச்சீங்களா ! அதான் இல்ல !அந்த படத்துல ஒரே கதையை ரெண்டு பெரும் வேற வேற மாதிரி சொல்லுவாங்க ! இங்க கதை வேற! வசனம் ஒன்னு !\

இங்கால பக்கம் எல்லாம் அருவா வரப்பிடாது சொல்லிபுட்டன்



Read More

Sunday 15 February 2015

// // Leave a Comment

பை,Figureஐ தியேட்டருக்கு கூட்டிச் செல்வது எப்படி?? விமர்சனம்

ராஜ் அண்ணாவின் பை மற்றும் Figureஐ தியேட்டருக்கு கூட்டிச் செல்வது எப்படி ?? என்ற இரு குறும்படங்கள் இன்று ராஜா  தியேட்டரில் வெளியாகி இருந்தது. ராஜ் அண்ணாவின் படம் என்ற படியால் அங்க போய் பார்த்து விட்டு. அது எனது பார்வையில் எப்பிடி இருந்துச்சு .. எண்டும் இங்க அலட்டலாம் எண்டு இருக்கன்.

  ராஜ்,மதீசன்,சப்தமி இவைகளின் கூட்டில் தயாரான படங்கள் பை,Figureஐ தியேட்டருக்கு கூட்டிச் செல்வது எப்படி விமர்சனம். முதலில் ராஜ் அண்ணாவிற்கு  எனக்கும் எப்பிடி பழக்கம் வந்தது எண்டு பாத்தா அதுக்கு மூல காரணம் மதீசன் தான் .. ஏனென்டால் அவர் தான் ULSER எண்ட படம் எடுக்கேக்க எனக்கும் எதோ தெரியும் எண்டு நம்பி சப்தமி அணியில சேர்த்தவர். அதனால தான் ராஜ்,சுலக்சன்,நிருலிக்க்சன் போன்ற அருமையான நண்பர்கள் கிடைச்சாங்க :) சோ மதீசன் அண்ணாக்கு ஒரு பெரிய தேங்க்ஸ் :)

சரி வாங்க முதலாவது படமான பை ய எனது பார்வையில் பார்ப்பம் 

 இச் சமூகத்தை தற்போது ஆட்கொண்டிருக்கின்ற ஒரு கருவினைக் கொண்டு அமைக்கப்பட்ட கதை. இப் படத்திற்காக ராஜ் அண்ணாவிற்கு முதலில் ஒரு salute.
பலருக்கு முன்னோடியாக வாழ்ந்த சமூகம் எம் சமூகம்.அதிலும் ஒரு காலத்தில் எந்தவொரு போதைப்பொருட் பாவனையும் அற்று இருந்த சமுகம். ஆனால் இப்போது எம் சகமூகத்தை சீரளிக்கும் ஒன்றின் பின்னே செல்கின்றௌம். இதை உணர்த்தியிருக்கும் ஒரு படம். இப் படத்தில் நடித்திருக்கும் சுலக்சன் மற்றும் நிருலுக்சன் இருவரும் என் நண்பர்கள்  ஒன்றாக சப்தமி அணியில் பணியாற்றியவர்கள். இருவரது முகபாவமும் மிகச் சரியாக இப் படத்திற்கு பொருந்தியிருக்கின்றது. அதே போல் ராஜ் அண்ணா தெரிவு செய்திருக்கும் இடங்கள் மிகவும் கதைக்கு பொருந்தியுள்ளது.

இப் படத்தில் வரும் காட்சிகள் ஒரு கிராமப்புறத்தில் நடப்பது போல எடுக்கப்பட்டிருக்கின்றது. ராஜ் அண்ணா எதற்கு அப்படி ஒரு இடத்தினை தெரிவு செய்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அதனைப் பார்க்கும் போது… இதுவரை காலமும் நகர்ப்புறத்தில் மது மற்றும் போதைப்பொருட்கள் என்பது பெருமளவில் ஊடுருவிய ஒன்றாகும். நகர்ப்புற இளைஞர்கள் இது ஒரு fashion என நினைத்து தம் வாழ்வை வீணாக்கி கொண்டிருக்கின்றனர். இந் நோய் தற்போது நகர்ப்புறங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கு அடியெடுத்து வைக்கத் தொடங்கி விட்டது. இதனை உணர்த்துவது போலவே கதையின் இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என எனக்குத் தோன்றியது.

எனக்கு இப் படத்தில் ஒரு சிறு திருத்தமாக பட்டது அந்த பொலிஸாரின் காட்சி மட்டுமே. அதில் அவர் அப் பையினை பார்ப்பார். பார்த்து விட்டு ஒன்றும் சொல்ல மாட்டார். அதிலே அப் பொலிஸ்காரர் பையினை திறந்து பார்த்து விட்டு சுலக்சனை நோக்கி “உமக்கு எத்தனை வயது?” என்று கேட்பது போல வைத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

அடுத்து இப் படத்தின் போஸ்டர் இல் இப் படத்தின் பையினுள் என்ன உள்ளது என்று விபரமாக காட்டியூள்ளனர். அடுத்து  படத்தின் ஆரம்ப கட்டங்களில் முதல் வாழ்ந்த எமது சமூகம் எவ்வாறு இருந்தது என்றும் கடைசியில் அச் சமூகம் எங்கு செல்கின்றது என்று காட்டுக்கின்றது. தனது சமூகம் சார்ந்த படைப்புக்களில் மீண்டும் ஒரு வெற்றியை பதிய விட்டுள்ளார் ராஜ் அண்ணா.


அடுத்து ,Figureஐ தியேட்டருக்கு கூட்டிச் செல்வது எப்படி ??  என் பார்வையில் 

Figureஐ தியேட்டருக்கு கூட்டிச் செல்வது எப்படி?? இப் படம் வெளியாகப் போகின்றது என்று சொன்னதும் பல தரப்பட்ட இடங்களில் இருந்து பல்வேறு வகையான எதிர்ப்புகள் வெளிப்படையாக வந்தன .. அதாவது எம் சமூகத்தில்  இருந்து இவ்வாறான ஒரு படமா என்று ?? சமூக சிரழிவு .. இப்படி பல எதிர்ப்புக்கள் ... எத்தனையோ எதிர்ப்புக்கள் வந்தாலும் படத்தினை பார்த்து விட்டு கதைக்கவும் என்ற ஒரு பதில் மட்டுமே  படக்குழுவினரிடம் இருந்து வந்தது

அவர்கள் கொடுத்த பதில் மிகச்சரியாக உள்ளது. அதாவது இதன் கரு இப்பத்தைய இளம் சமுதாயம் எவ்வாறு உள்ளது  என்பதையும் . அவர்கள் எதனை முக்கியமென கருதுகின்றனர். அதற்காக  என்ன விலையினை கொடுகின்றனர் என்றும் காட்டுகின்றது.

தியேட்டருக்கு என்று தான் தான் தலைப்பில் சொல்லபட்டு உள்ளது. எந்த தியேட்டர்  என்று சொல்லவில்லை என்பதை கவனிக்குக



Read More

Thursday 5 February 2015

// // 8 comments

செய்வினை செய்து பாப்பமா

கல் தோன்றி மண் தோன்றா காலத்தின் முன் தோன்றிய எமது தமிழ் இனம் பல்வேறு கலைகளில் உலககிற்கு முன்னோடியாக இருந்தது . கலைகள், மொழியறிவு ,நகர கட்டமைப்புக்கள் ,வானசாஸ்திரம், பூமிசாஸ்திரம், பூகோள சாஸ்திரம், என பலகளைக்களில் முன்னோக்கி இருந்தனர் என்பது நான் சொல்லி தான் உங்கள்ளுக்கு தெரிய வேண்டிய ஒன்றல்ல. இது பல திரைப்பட இயக்குனர்களே சொல்லிவிட்டனர்.(நம்ம 7ம் அறிவு முருகதாஸ் யாபகம் இருக்கா )

 அப்படி உலகத்தின் முன்னோடியாக இருந்தவர்க்களுக்கு ஒரு பிரச்சனை அது என்ன எண்டா  எட்டுத்திக்கிலும் இருந்து அம்பு போல பாய்ந்து வரும் எதிரிகளிடம் இருந்து தாம் வாழ்ந்த பிரதேசத்தை பாதுகாப்பது தான் . நாம் வீரத்தில் சளைத்தவர் இல்லை என்பதுக்கு கடல் கடந்து நாடு பிடித்த சோழன் முதல் தமிழ் ஈழம் காக்க தன் உயிர் நீர்த்த பிரபாகரன் வரை சான்று. என்றாலும் எப்பொழுதும் போர்களிலேயே இருப்பது எம் மக்களுக்கு சலிப்பூட்டியது . அதனால் எம்மை நோக்கி வரும் எதிரிகளை வெறும்  படைபலத்தால் மட்டும் வெல்லாமல்  கண்கட்டிவித்தைகளை காட்டி எதிரிகளை சீரழிக்க திட்டமிட்டார்  எம் முப்பாட்டன் பாண்டியன். அதாவது படையெடுத்து வரும் எதிரிகள் எம் படைபலத்தையும் தாண்டி நாம் கொண்டுள்ள அனுமானுச சக்தி மீது பயம் கொண்டு எம் மீது ஏற்படும் படையெடுப்புக்களை தடுப்பதே அக்கால தமிழ் பேரரசுகளின் திட்டமாக இருந்தது.  

அட இன்னும் செய்வினை பற்றி ஒன்னுமே எழுதலையோ ?? நில்லுங்க அதுக்கு தான் வாரன் 

பாண்டிய மன்னன் இவ்வாறு யோசித்ததன் விளைவு ??  எமது அப்போதைய வில்லேஜ் விஞ்ஞானிகள் என்ன செய்தாங்க என்டா தமக்கு தெரிந்த விஞ்ஞானத்தை வைத்துக்கொண்டு , அந்த விஞ்ஞானத்தின் உதவியால் , மனிதனது வாழ்வுக்கு, அவனது துணிவுக்கு சவால்விடும் ஒரு உபாயத்தை கண்டறிந்தார்கள் அது தாங்க தற்போது அகிலத்தை ஆட்டுவிக்கும் "கறுப்பு விஞ்ஞானம்". கருப்பு விஞ்ஞானமா அப்பிடி எண்டா என்ன எண்டு யோசிக்கிரிங்களா ?? அது தாங்க செய்வினை, ஏவல், பில்லி சூனியம், வசியம், மோகனம், மாரணம், உச்சாடனம், வித்வேஷனம், பேதனம், ஸ்தம்பனம், ஆக்ருஷனம் எல்லாம்.
   
என்னடா இவன் வாய்க்குள்ள நுழையாத பெயர்கள் சொல்லுறன் எண்டு பாக்கிறிங்களா ?? அப்பிடி எண்டா என்ன எண்டு பாப்பமா ?

பில்லி :- ஒருவரை உடல் ரீதியிலும், உள்ள ரீதியிலும், செயல் ரீதியிலும், ஈர்த்து மந்திரவாதி தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து தனது விருப்பப்படி செயல்லாற்ற வைப்பது  

சூனியம் :- சூனியம் என்றால் வெறுமை என்று அர்த்தம். அதாவது ஒருவனை உடல் ரீதியிலும், உள்ள ரீதியிலும், செயல்ப்பாட்டிலும்,  பொருளாதார  ரீதியிலும் ஒன்றும் இல்லாதவன் ஆக்குவது 

ஏவல் :- எமது விருப்பத்துக்கு ஏற்ப மற்றவர்களை செயற்பட வைப்பது 

செய்வினை :- தனது சொந்த வினைப்படி செயலாற்றும் ஒருவனை மாந்திரிக முறையில் பலவழிகளில் திசைதிருப்பி அவனை அழிந்து போக வைப்பது ஆகும் 

வசியம் :- நம்மை பிடிக்காதவர்களையும் நம்மை விரும்ப செய்தல், நம்மை கண்டவர்கள் நம்பால் வசியமாதல், நம் சொல்படி கேட்டல்.(அட நமக்கெல்லாம் இது ரொம்ப தேவைப்படுதே )

மோகனம் :- நம்மை கண்டவர்கள் நம் மீது மோகிக்க செய்தல், அதாவது மோகம் கொள்ள செய்தல் . (அட இதுவும் தேவைப்படுதே )

ஆக்ருஷனம் :- எப்படிபட்டவர்களையும், காந்தம் எப்படி இரும்பை கவ்வுகின்றதோ, அது போல் நம்பால் கவர செய்வதாகும். ஓடிப்போனவர்களை திரும்ப வரவழைத்தல். (அட இதுவும் நல்லா இருக்கே காந்தம் மாதிரி கவருமாம் )

ஸ்தம்பனம் :- தன்னை கண்டதும் அனைத்தையும் ஸ்தம்பிக்க செய்வது அதாவது அசைவற்று இருக்க செய்வது.

பேதனம் :- கணவன் மனைவியையோ, நண்பர்களையோ, தகாத உறவுகளையோ பிரிப்பது.

வித்வேஷனம் :- ஒருவருக்கொருவர் கடும் பகையை உருவாக்கி அவர்களை அழிக்க செய்வது.

உச்சாடனம் :- எவரையும் நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது .

 மாரணம் :- மேல் கண்ட அணைத்து செயல்களிலும் மிக கொடியது. மற்றவர்கள் உயிருக்கு கேடு விளைவிப்பது ( உயிரை எடுப்பது )

அட இப்பிடி ஒண்டு ரெண்டு இல்ல பல கறுப்பு விஞ்ஞான வழிமுறைகளை கண்டு பிடித்தனர் எம் வீர தீர முன்னோர்கள். அதில் பல காலத்தின் போக்கில் அழிய இப்போது எமக்கு சிலதே தெரிந்து உள்ளது. 

சரி இப்பிடி இதனை கண்டு பிடிச்சானே அதனால எதாவது பயன் இருந்துச்சா ?? எண்டு பார்த்தா இவன்னின் இவ் வித்தைகளை கண்டு படையெடுப்புக்கள் குறைந்து என்னவோ உண்மை தான்.. 

ஆனா  நம்ம ஆக்கள் சும்மா இருப்பாங்களா "எத எடுத்தாலும் 10 ரூபாய்" எண்டு திருவிழா காலத்தில விளையாட்டு சாமான் விக்கிறது போல எங்கட ஆக்களும் இந்த வித்தைய விக்க தொடங்கினான்கள்..   அதுலையும் எங்க ஆட்கள் ரொம்ப உஷார் இது வெறும் விஞ்ஞானம் தான் என்று சொல்லி கற்றுத்தந்தால் மற்றவர்க்களுக்கு தங்கள் மீது இருக்கும் பயம் போய்விடும் என்பதால் , இதை கெட்ட சக்திகளின் துணையோடு செய்து வருவதாக கூறி அதை செய்யும் முறையை மட்டுமே சொல்லி தந்தான். ஒவ்வொரு விஞ்ஞான சூத்திரத்தையும் ஒரு கெட்ட ஆவியின் பெயரால் அழைத்தான். அந்த விஞ்ஞான தாக்கத்தை ஏற்படுத்தும் சமன்பாடுகளை, கேட்டாலே பயம் வரவழைக்க கூடிய மந்திரங்களின் வடிவில் கற்றுத்தந்தான். செய்வினை எடுக்கும் செய்வினை கூட ஒரு விஞ்ஞான ஃபார்முலாதான். ஒரு மருந்த முறிக்க இன்னுமொரு மருந்து. ஆனால் கற்று தரும் போது அதையும் ஒரு அனுமானுச செயற்பாடகவே கற்றுத்தந்தார்கள்.

இப்படி அவர்கள் செய்ததின் விளைவு ஒரு சில தலைமுறைக்கு பின் வந்தவர்கள் அதனை விஞ்ஞான செயற்பாடுகளாக பார்க்கவில்லை வெறும் மந்திர தந்திரங்களாகவும் அனுமானுஷ சக்திகளாகவும் பார்த்தனர் .. அதனால் இன்று விஞ்ஞானம் இரத்த காட்டேரியாகவும், குள்ள முனியாகவும், நமோநிவியாகவும் மட்டுமே பார்க்கப்படுகிறது.



இத எல்லாம் சொன்னா சிரிக்கிறாங்க என்ன பண்ணுறது ?? அடுத்த பதிவில எப்பிடி செய்வினை வைக்கிறது எண்டு சொல்லி தாரன் .. அதுவரைக்கும் உங்க கருத்த சொல்லுங்க கேப்பம் 

                                   



Read More

Thursday 8 January 2015

// // 3 comments

மஹிந்தவா.......மைத்திரியா......

நண்பர்களே....

இன்றைய நாள் நம்  அது தாங்க இலங்கை நாட்டின் ஜனாதிபதி தேர்தல் எந்தவொரு அமர்கலமுமின்றி சுமுகமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது.
இப்பொழுது அனைவரது எதிர்பார்ப்பும் தேர்தல் முடிவுகளுக்காய் காத்திருக்கின்றன. அதனால் என்னுடைய அலட்டலையும் பதிவேற்ற விரும்புகிறேன்.
                             
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி ஏற்றார்  . அவர் பதவி ஏற்பதற்கு முன்னும், பின்னும் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று யாரும் அறிந்திருக்கிறீர்களா?
 கவலைப்படாதீர்கள் எனக்கும் தெரியாது தான்,  இந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தால் அனைத்தும் தெரிய வரும், அப்பொழுதாவது அறிந்துகொள்வோம்.

மைத்திரி பாலசிறிசேனவின் 100 நாட்ள் திட்டத்தை பற்றி அறிவீர்களா?
அவர் செய்யப்போகும் முதலாவது செயலே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகும்.

மாற்றம் ஒன்றே மாறாதது......
பொறுத்திருந்து பார்ப்போம் மாறுகிறதா இல்லை அதே குட்டைக்குள் மட்டை 

அடிப்பதா என்று......

இதில் நான் எதற்கு சொத்து மதிப்பினை குறிப்பிடுகிறேன் என்று யோசிப்பவர்கள் காத்திருக்கவும் பதில் மற்றொரு பதிவில் தருகின்றேன் 

Read More