Thursday 5 February 2015

// // 8 comments

செய்வினை செய்து பாப்பமா

கல் தோன்றி மண் தோன்றா காலத்தின் முன் தோன்றிய எமது தமிழ் இனம் பல்வேறு கலைகளில் உலககிற்கு முன்னோடியாக இருந்தது . கலைகள், மொழியறிவு ,நகர கட்டமைப்புக்கள் ,வானசாஸ்திரம், பூமிசாஸ்திரம், பூகோள சாஸ்திரம், என பலகளைக்களில் முன்னோக்கி இருந்தனர் என்பது நான் சொல்லி தான் உங்கள்ளுக்கு தெரிய வேண்டிய ஒன்றல்ல. இது பல திரைப்பட இயக்குனர்களே சொல்லிவிட்டனர்.(நம்ம 7ம் அறிவு முருகதாஸ் யாபகம் இருக்கா )

 அப்படி உலகத்தின் முன்னோடியாக இருந்தவர்க்களுக்கு ஒரு பிரச்சனை அது என்ன எண்டா  எட்டுத்திக்கிலும் இருந்து அம்பு போல பாய்ந்து வரும் எதிரிகளிடம் இருந்து தாம் வாழ்ந்த பிரதேசத்தை பாதுகாப்பது தான் . நாம் வீரத்தில் சளைத்தவர் இல்லை என்பதுக்கு கடல் கடந்து நாடு பிடித்த சோழன் முதல் தமிழ் ஈழம் காக்க தன் உயிர் நீர்த்த பிரபாகரன் வரை சான்று. என்றாலும் எப்பொழுதும் போர்களிலேயே இருப்பது எம் மக்களுக்கு சலிப்பூட்டியது . அதனால் எம்மை நோக்கி வரும் எதிரிகளை வெறும்  படைபலத்தால் மட்டும் வெல்லாமல்  கண்கட்டிவித்தைகளை காட்டி எதிரிகளை சீரழிக்க திட்டமிட்டார்  எம் முப்பாட்டன் பாண்டியன். அதாவது படையெடுத்து வரும் எதிரிகள் எம் படைபலத்தையும் தாண்டி நாம் கொண்டுள்ள அனுமானுச சக்தி மீது பயம் கொண்டு எம் மீது ஏற்படும் படையெடுப்புக்களை தடுப்பதே அக்கால தமிழ் பேரரசுகளின் திட்டமாக இருந்தது.  

அட இன்னும் செய்வினை பற்றி ஒன்னுமே எழுதலையோ ?? நில்லுங்க அதுக்கு தான் வாரன் 

பாண்டிய மன்னன் இவ்வாறு யோசித்ததன் விளைவு ??  எமது அப்போதைய வில்லேஜ் விஞ்ஞானிகள் என்ன செய்தாங்க என்டா தமக்கு தெரிந்த விஞ்ஞானத்தை வைத்துக்கொண்டு , அந்த விஞ்ஞானத்தின் உதவியால் , மனிதனது வாழ்வுக்கு, அவனது துணிவுக்கு சவால்விடும் ஒரு உபாயத்தை கண்டறிந்தார்கள் அது தாங்க தற்போது அகிலத்தை ஆட்டுவிக்கும் "கறுப்பு விஞ்ஞானம்". கருப்பு விஞ்ஞானமா அப்பிடி எண்டா என்ன எண்டு யோசிக்கிரிங்களா ?? அது தாங்க செய்வினை, ஏவல், பில்லி சூனியம், வசியம், மோகனம், மாரணம், உச்சாடனம், வித்வேஷனம், பேதனம், ஸ்தம்பனம், ஆக்ருஷனம் எல்லாம்.
   
என்னடா இவன் வாய்க்குள்ள நுழையாத பெயர்கள் சொல்லுறன் எண்டு பாக்கிறிங்களா ?? அப்பிடி எண்டா என்ன எண்டு பாப்பமா ?

பில்லி :- ஒருவரை உடல் ரீதியிலும், உள்ள ரீதியிலும், செயல் ரீதியிலும், ஈர்த்து மந்திரவாதி தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து தனது விருப்பப்படி செயல்லாற்ற வைப்பது  

சூனியம் :- சூனியம் என்றால் வெறுமை என்று அர்த்தம். அதாவது ஒருவனை உடல் ரீதியிலும், உள்ள ரீதியிலும், செயல்ப்பாட்டிலும்,  பொருளாதார  ரீதியிலும் ஒன்றும் இல்லாதவன் ஆக்குவது 

ஏவல் :- எமது விருப்பத்துக்கு ஏற்ப மற்றவர்களை செயற்பட வைப்பது 

செய்வினை :- தனது சொந்த வினைப்படி செயலாற்றும் ஒருவனை மாந்திரிக முறையில் பலவழிகளில் திசைதிருப்பி அவனை அழிந்து போக வைப்பது ஆகும் 

வசியம் :- நம்மை பிடிக்காதவர்களையும் நம்மை விரும்ப செய்தல், நம்மை கண்டவர்கள் நம்பால் வசியமாதல், நம் சொல்படி கேட்டல்.(அட நமக்கெல்லாம் இது ரொம்ப தேவைப்படுதே )

மோகனம் :- நம்மை கண்டவர்கள் நம் மீது மோகிக்க செய்தல், அதாவது மோகம் கொள்ள செய்தல் . (அட இதுவும் தேவைப்படுதே )

ஆக்ருஷனம் :- எப்படிபட்டவர்களையும், காந்தம் எப்படி இரும்பை கவ்வுகின்றதோ, அது போல் நம்பால் கவர செய்வதாகும். ஓடிப்போனவர்களை திரும்ப வரவழைத்தல். (அட இதுவும் நல்லா இருக்கே காந்தம் மாதிரி கவருமாம் )

ஸ்தம்பனம் :- தன்னை கண்டதும் அனைத்தையும் ஸ்தம்பிக்க செய்வது அதாவது அசைவற்று இருக்க செய்வது.

பேதனம் :- கணவன் மனைவியையோ, நண்பர்களையோ, தகாத உறவுகளையோ பிரிப்பது.

வித்வேஷனம் :- ஒருவருக்கொருவர் கடும் பகையை உருவாக்கி அவர்களை அழிக்க செய்வது.

உச்சாடனம் :- எவரையும் நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது .

 மாரணம் :- மேல் கண்ட அணைத்து செயல்களிலும் மிக கொடியது. மற்றவர்கள் உயிருக்கு கேடு விளைவிப்பது ( உயிரை எடுப்பது )

அட இப்பிடி ஒண்டு ரெண்டு இல்ல பல கறுப்பு விஞ்ஞான வழிமுறைகளை கண்டு பிடித்தனர் எம் வீர தீர முன்னோர்கள். அதில் பல காலத்தின் போக்கில் அழிய இப்போது எமக்கு சிலதே தெரிந்து உள்ளது. 

சரி இப்பிடி இதனை கண்டு பிடிச்சானே அதனால எதாவது பயன் இருந்துச்சா ?? எண்டு பார்த்தா இவன்னின் இவ் வித்தைகளை கண்டு படையெடுப்புக்கள் குறைந்து என்னவோ உண்மை தான்.. 

ஆனா  நம்ம ஆக்கள் சும்மா இருப்பாங்களா "எத எடுத்தாலும் 10 ரூபாய்" எண்டு திருவிழா காலத்தில விளையாட்டு சாமான் விக்கிறது போல எங்கட ஆக்களும் இந்த வித்தைய விக்க தொடங்கினான்கள்..   அதுலையும் எங்க ஆட்கள் ரொம்ப உஷார் இது வெறும் விஞ்ஞானம் தான் என்று சொல்லி கற்றுத்தந்தால் மற்றவர்க்களுக்கு தங்கள் மீது இருக்கும் பயம் போய்விடும் என்பதால் , இதை கெட்ட சக்திகளின் துணையோடு செய்து வருவதாக கூறி அதை செய்யும் முறையை மட்டுமே சொல்லி தந்தான். ஒவ்வொரு விஞ்ஞான சூத்திரத்தையும் ஒரு கெட்ட ஆவியின் பெயரால் அழைத்தான். அந்த விஞ்ஞான தாக்கத்தை ஏற்படுத்தும் சமன்பாடுகளை, கேட்டாலே பயம் வரவழைக்க கூடிய மந்திரங்களின் வடிவில் கற்றுத்தந்தான். செய்வினை எடுக்கும் செய்வினை கூட ஒரு விஞ்ஞான ஃபார்முலாதான். ஒரு மருந்த முறிக்க இன்னுமொரு மருந்து. ஆனால் கற்று தரும் போது அதையும் ஒரு அனுமானுச செயற்பாடகவே கற்றுத்தந்தார்கள்.

இப்படி அவர்கள் செய்ததின் விளைவு ஒரு சில தலைமுறைக்கு பின் வந்தவர்கள் அதனை விஞ்ஞான செயற்பாடுகளாக பார்க்கவில்லை வெறும் மந்திர தந்திரங்களாகவும் அனுமானுஷ சக்திகளாகவும் பார்த்தனர் .. அதனால் இன்று விஞ்ஞானம் இரத்த காட்டேரியாகவும், குள்ள முனியாகவும், நமோநிவியாகவும் மட்டுமே பார்க்கப்படுகிறது.



இத எல்லாம் சொன்னா சிரிக்கிறாங்க என்ன பண்ணுறது ?? அடுத்த பதிவில எப்பிடி செய்வினை வைக்கிறது எண்டு சொல்லி தாரன் .. அதுவரைக்கும் உங்க கருத்த சொல்லுங்க கேப்பம் 

                                   



8 comments:

  1. ஐயா நானும
    இந்த கறுப்பு விஞ்ஞானத்தை படிக்க் ஆசைப்பர்றேன் எப்படி படிப்பது

    ReplyDelete
    Replies
    1. பழைய புத்தகக்கடைகளில் அல்லது முக்கியமாக நூலகங்களில் இவ்வாறான புத்தகங்களை பெற முடியும். நண்பரே. யாழ்ப்பாணம் நூலகத்தில் தான் நான் இப் புத்தகத்தை இரவல் பெற்றேன். இணையத்தில் இருந்தால் நான் உங்களுக்கு அனுப்பிகின்றேன் நண்பரே

      Delete
    2. மாந்திரீகம் என்பது ஒரு கலை அதை கற்கும் ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது நம்முடைய ஜாதகத்தில் மந்த்ரீக செயல்களை கற்று கொள்ள யோகம் இருக்க வேண்டும் நீங்கள் சொல்லும் புத்தகங்கள் எல்லாம் நிறையாக உள்ளது அதை வைத்து அறிவை மட்டும் வளர்த்தி கொள்ளலாம் ஆனால் பிரயோக முறைகளை செய்தல் பாதிப்புகள் நமக்கு நிகழும் நல்ல குருவை தேடி கற்று கொள்ளுங்கள் அவருடைய அனுபவம் உங்களை பாதுகாப்பான முறையில் கற்க வழி வகுக்கும்.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. Puthakam kedakkuma eppadi vaguvathu enagu oru puthakkam venum yaridam erugu athan thogi enna

    ReplyDelete
  5. Puthakam kedakkuma eppadi vaguvathu enagu oru puthakkam venum yaridam erugu athan thogi enna

    ReplyDelete
  6. I want the adress of the per7on who is doing black magic.

    ReplyDelete