வணக்கம், ரொம்ப காலம் கழிச்சு திரும்பவும் எழுதணும் எண்டு வந்து இருக்கன், காரணம் பாத்தா எத்தனையோ விஷயம் யாரிட்டையாவது சொல்லணும் எண்டு தோணும் ஆனா அப்பிடி சொல்லும்போது அவங்க கருத்துக்கள் எங்க என் முடிவுகளில செல்வாக்கு செலுத்திடுமோ எண்ட பயம் எப்பயுமே இருக்கும். அப்பிடி சொல்லாம சொல்லாம சேர்த்த விடயங்கள் இப்போ சேர்ந்து ஒரு பெரிய பூதமா முன்னுக்கு நிக்குது, அது தான் யாருமே வாசிக்காட்டியும் இங்க சொல்லுவம், எண்டு வந்து இருக்கன், பாப்பம்...
Saturday, 31 December 2022
Sunday, 5 September 2021
நானும் யாழ் சமையலும்.

எத செய்ய தொடங்கினாலும் ஒரு 6 மாசத்தோட அத விட்டுட்டு இன்னொண்டு பக்கம் போறவன் நான். (சாத்தியமா இது நல்ல பழக்கம் இல்லை :p ) சிவாவின் அலட்டல்களில எழுதினது ஆகட்டும், Siva Feed la எழுதினது ஆகட்டும், Podcastல கதச்சதாகட்டும், Siva's View சனலில காணொளி செய்ததாகட்டும், இல்ல டிக்டாக்ல சின்ன சின்ன tech சம்மந்தமான காணொளி போட்டதாகட்டும் இப்பிடி இந்த லிஸ்ட் பெருசா போகும், இது கம்ப்யூட்டர் சம்மந்தமா மட்டும் இல்ல வெளி ப்ரொஜெக்ட்ஸ்க்கும் சரியா பொருந்தும்...
Saturday, 30 June 2018
ஒரு கண்ணீர் துளியும் நானும்

அடிக்கடி இதுல அலட்டனும் எண்டு நினைக்கிறனான் ஆனா எங்க முடியுது .. நேரம் .. அது தாங்க முக்கிய பிரச்சனையா இருக்குது .. ஆனா இனி அப்ப அப்ப வந்து எதோ அலட்டிட்டு போறன் ..
வாழ்க்கையில் என்னை ரொம்ப பாதிச்ச சம்பவங்கள் எண்டு எடுத்தா அதில் ஒரு விடயம் நான் வாழ்ந்து கொண்டு இருந்த வாழ்க்கையை முழுவதுமாய் திருப்பிய விடயம் .. ஒரு சில கண்ணீர் துளி .. ஒரு பெண்ணின் கண்களில் இருந்து .. அதை அந்த பெண் மற்றவர்களிடம் இருந்து மறைக்க போராடிய கணம்.. ஆம் எல்லாவற்றையும்...
Friday, 19 August 2016
காதலும் இலட்ச்சியமும்.

இப்ப எல்லாம் எங்க ஐங்கால பக்கம் வாரது. வரணும் எண்டு ரொம்ப ஆசை தான் பட் நேரம் ஒரு பிரச்சனையா இருக்குது. அதனால அப்ப அப்ப வாராது தான் சரியா இருக்கு.
அட என்ன தலைப்பு வித்தியாசமா இருக்கு எண்டு பாக்கிறிங்களா. இது என் சொந்த கதை இல்லை ஆனால் என் சொந்தங்களின் கதை. அதுதாங்க என் நண்பர்களின் கதை.
எனக்கு ஒரு நல்ல நண்பர் இருக்கிறான் (றார் ) அவருக்கு என்ன விட 5 வயது கூட ஆனால் பலவிடயங்களில எங்களுக்குள்ள ஒரு ஒற்றுமை. பாருங்க...
Wednesday, 6 July 2016
அப்பா : ஒரு விமர்சனம்

அப்பா தமிழ் சினிமா வெளியில் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றாகி இருக்கிறது. சமுத்திரக்கனி என்கிற தனிமனிதன்… அவனது படைப்பின் வழியாக மிகப்பெரியதொரு கேள்வியை உங்கள் முன் வைக்கிறான். மிகவும் அதிமுக்கியமான அவசியமான ஒரு மாற்றத்தை உங்களிடத்தில் எதிர்பார்த்து நிற்கிறான்.
தினசரி… காலையில் எழுந்து குழந்தைகளை பள்ளிக்கு படு சிரத்தையாக அனுப்புகிற அம்மா, அப்பாவா நீங்கள்? ஆம் என்றால்… இது நீங்கள் பார்க்க வேண்டிய படம்.
உங்கள் குடும்பத்தில்...
Tuesday, 14 June 2016
அநியாயங்களிடையே பிறக்கிறான் 'சே'!

இன்று - ஜூன் 14: சே குவேரா பிறந்தநாள்.
சே என்னை மிகவும் பாதித்த ஒரு நபர். அவர் வாழ்ந்த காலத்தில் பிறக்கவில்லையே என்று யோசிக்க வைத்த நபர். அவரின் பிறந்த நாளில் அவர் பற்றி சில விடயங்கள்
"கோழையே, சுடு! நீ சுடுவது 'சே'வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!" தன் கால்தடம் பதியும் நிலபரப்பு எல்லாம் என் தேசமே என்று முழங்கிய 'சே'வின் இறப்பில் பிறந்த செவ்வரிகள் இவை.
'சிரிக்கும் கண்கள், புகைக்கும் உதடுகள், சீவி முடியாத தலைமயிர்,பயணித்து கொண்டேயிருக்கும்...
Tuesday, 3 May 2016
”தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவில் மலம் அள்ளும் மனிதர்கள்”- புத்தக விமர்சனம்

புதுடெல்லியில் பிறந்து லக்னோவில் வளர்ந்தவரான பத்திரிகையாளர் பாஷாசிங் எழுதிய ”தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்” என்ற புத்தகத்தை வாசித்து முடித்தபோது இன்னும் நாகரீகமடையாத சமூகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. காஷ்மீர், புதுடெல்லி, பீகார், மேற்கு வங்காளம், உத்திரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம்...
Tuesday, 15 March 2016
ஆங்கிலம் பேசினால் அறிவாளியா?

அட வணக்கம் நண்பர்களே .. இது சும்மா ஒரு சூழலை பார்க்கும் பொது ஏற்பட்ட ஒரு சிந்தனை .. அத உங்களோட பகிர்ந்து கொள்ள எண்ணினான். இது பற்றிய உங்க கருத்தை கருத்துரையில் சொல்லலாமே.
ஆங்கிலத்தினால் பேசினால் அறிவாளி என்ற எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது. ஆங்கிலத்தில் பேசுகின்றவர்களும் அதை பெருமையாகவேக் கருதி பேசுகின்றனர். ஆனால், இவை போன்ற எண்ணங்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவை.
மொழித்திறத்திறன் என்பது அறிவைக் காட்டுவதில்லை....
Saturday, 12 March 2016
வந்த வழி

வணக்கம் நண்பர்களே .. இண்டையோட இந்த ப்ளாக் தொடக்கி சரியாய் மூண்டு வருஷம் ஆகிடுதாம். சோ இது நான் தொடங்கேக்க என்ன நினச்சுகிட்டு தொடங்கினான். அது இப்ப எந்த அளவுக்கு வந்து இருக்கு.. நான் நினைச்சதுல எவளவு செய்து இருக்கிறன் எண்டு திரும்பி பாப்பம் வாங்க ..
இது என் முதலாவது ப்ளாக் இல்லங்க.. இதுக்கு முதல் "இல்லை", "நாங்கள்" எண்டு ரெண்டு ப்ளாக் செய்தனான். ரெண்டுமே ஒரு மாசத்துக்குள இழுத்தி...
Wednesday, 3 February 2016
என் பார்வையில்..... :(

மன்னிக்குக ..
என்னடா இவன் முதலிலேயே மன்னிப்பு கேக்குறானே எண்டு பாக்கிறிங்களா, ஒண்டும் இல்ல இனி நான் சொல்ல போற விடயம் உங்களுள பலருக்கு சிலவேளை சங்கடத்தை கொடுக்கலாம், சில வேளை என்னுல கோவத்த உண்டு பண்ணலாம்.. அதுக்கு தான்.. இது முழுக்க முழுக்க என் சொந்த கருத்து. அதனால நீங்க எத்து கொள்ளாட்டி நான் அதுக்கு ஒண்டுமே செய்ய ஏலாது.
சரி விடயத்துக்கு வருவமா.. அது என்ன எண்டால் எனக்கு இப்ப 20 வயசாகிட்டு
இது வரைக்கும் எத்தனையோ பேரை பாத்துட்டன்,...