Tuesday 15 March 2016

// // 4 comments

ஆங்கிலம் பேசினால் அறிவாளியா?

அட வணக்கம் நண்பர்களே .. இது சும்மா ஒரு சூழலை பார்க்கும் பொது ஏற்பட்ட  ஒரு சிந்தனை .. அத உங்களோட பகிர்ந்து கொள்ள எண்ணினான். இது பற்றிய உங்க கருத்தை கருத்துரையில் சொல்லலாமே.

ஆங்கிலத்தினால் பேசினால் அறிவாளி என்ற எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது.  ஆங்கிலத்தில் பேசுகின்றவர்களும் அதை பெருமையாகவேக் கருதி பேசுகின்றனர்.  ஆனால், இவை போன்ற எண்ணங்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவை.



மொழித்திறத்திறன் என்பது அறிவைக் காட்டுவதில்லை.   பழக்கத்தினால் வருவது மட்டுமே! எந்தச் சூழலில்  வாழ்கிறோம் என்பதையொட்டியே மொழிப் பேசும் ஆற்றல் வரும்.

ஆங்கிலம் பேசுகின்ற குடும்பத்தில் தங்கி வேலை செய்கின்ற படிப்பே இல்லாத வேலையாட்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவார்கள்.  அதனால், அவர்கள் மொழியாற்றல் உள்ளவர்கள் என்று அர்த்தமா?

எனவே, தவறான ஆங்கில மோகம் , மதிப்பு மாற வேண்டும்.  தமிழ் மொழிச் சிதைவிற்கும் , தமிழ்மொழி புறக்கணிக்கப் படுவதற்கும் இத்தவறான எண்ணமே காரணம்.

ஆங்கிலத்தில் பிள்ளைகள் பேசிவிட்டால், அவர்கள் அறிவு அதிகம் பெற்று விட்டதாக ஆர்ப்பாட்டம் செய்வது கூட இத்தவறான எண்ணத்தில்தான்.

மொழிப் பேசும் ஆற்றலை எப்போது வேண்டுமானாலும் பெறலாம்.  அதற்கான சூழலில் சில காலம் வாழ்ந்தால் போதும்.

ஆனால், அறிவுத் திறன் என்பது எவ்வளவு செய்திகளைத் தெரிந்து கொள்கிறோம், எவ்வளவு சுயமாகச் சிந்திக்கிறோம் என்பதைப் பொறுத்தே அமையும்.

ஆங்கிலம் உலகத் தொடர்பு மொழி என்பதால் அதனைக் கற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமே உண்மை.

அதற்காக தாய் மொழியைப் புறக்கணித்து ஆங்கிலத்தைத் தேர்வு செய்தல் சரியன்று.

சிந்தனை வளமும், சிறந்த அறிவும் தாய்மொழி மூலமே கிட்டும். இது உறுதி செய்யப்பட்ட உண்மை.

4 comments:

  1. எத்தனை மொழிகள் படித்திருந்தாலும் சிந்தனை செய்வது என்பது தாய் மொழியில் சத்தியம். அதனால்தான் அரிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்வோர் தாய்மொழியில் பயின்றவர்களாகவே இருக்கின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் சொல்வது சரியான வார்த்தைகள் தோழரே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  2. ரொம்ப சரி. நாம மட்டுமே இண்டலிஞன்ட்டு. இங்கிலீஸு கத்துகிட்டவங்க, அறிவியல் கத்துகிட்டவங்க, மேத்ஸ் கத்துகிட்டவங்க, ...................எல்லாம்...எல்லாம் வேஸ்ட். நாம தமிழையும் இலக்கண சுத்தமாக கற்க மாட்டோம்.

    ரொம்ப சரி. நாம மட்டுமே இண்டலிஞன்ட்டு. இங்கிலீஸு கத்துகிட்டவங்க (அத கத்துகிட்டு மொழிமாற்றும்/ஆக்கம் செய்யும் அறிவு தேவை என்றாலும்) எல்லாம் வேஸ்ட்உ.

    நாம, நாம மட்டுமே இண்டலிஞன்ட்டு.


    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/1-3-2-1.html

    ReplyDelete
  3. மொழி ஒன்றை கற்றுக்கொள்வதனால் மட்டும் ஒருவன் அறிவாளியாகிவிடமுடியாது சுயமான அறிவு அவனிடத்தில் இருந்தால் மட்டுமே அது முடியும்.

    ReplyDelete