Monday 6 January 2014

// // 3 comments

ஆண் பெண் நட்பு

வணக்கம் நண்பர்களே ... அனைவருக்கும் புதுவருட வாழ்த்துகள் :) 2014 உங்கள் அனைவருக்கும் சிறந்தவொரு வருடமாக அமைய இறைவனை பிராத்திக்கின்றேன்... இவ் வருடத்தின் முதலாவது பதிவு இது.. அதனால் என் மனதிற்கு பிடித்த ஒன்றினை பற்றி எழுதுறன்..



இன்றைய சமூகம் ஆண் பெண் நடப்பினை எவ்வாறு நோக்குகின்றது ?? இது 2014ம் வருடம் ஆண் பெண் சமத்துவத்தினை பற்றி அனைவரும் கதைத்துக்கொண்டு இருக்கின்றோம். பெண்கள் சமையல் முதல் சந்திர மண்டலம் செல்வது வரை ஆண்களுக்கு இணையாக உள்ளார்கள். ஆனாலும் இச் சமூகம் ஆண் பெண் நட்பினை பற்றிய ஒரு தவறாண எண்ணத்தையே கொண்டுள்ளது ( நான் அனைவரையும் குறிப்பிடவில்லை சமூகத்தில் பெரும்பாலானோர் ) அதாவது ஒரு ஆணும் பெண்ணும் கதைத்தால் அது காதலில் தான் முடியும் என நினைக்கின்றனர். இது இவர்களின் தப்பு இல்லை இன்றைய பெரும்பாலான சினிமாக்கள் இவ்வாறு தான் காட்டுகின்றன. :(

இது தவறு \\ அதனால் இன்று நான் அதனை பற்றி எனக்கு தெரிந்த சிலவற்றை இங்கு குறிப்பிட முனைந்து உள்ளேன்..


முதலில் ஒரு கவிதை


நித்தம் நித்தம் தொலைபேசி வுரையாடல்
நலமா என்று விசாரித்தல்
சண்டை போட்டு கோவபடுதல்
குறுதகவல் மூலம் தகவல் பரிமாறுதல்
இவைகள் எனக்கும் என் நண்பனுக்கும்
உண்டான நட்பின் பரிபாசைகள்
பார்வைகள் பலவிதம் அது
சொல்லும் ஏளன பேச்சுகள் பலவிதம்
தப்பான எண்ணமும் கருத்தும் அவர்களுக்கு
அதை பற்றி கவலை இல்லை எங்களுக்கு
ஆண் பெண் உறவை தவறாக எண்ணுபவர்கள் திருந்த வழி இல்லை
முழுவதுமாக அவர்களை திருத்த எங்களுக்கு நேரமில்லை
திருந்தும் போது திருந்தட்டும் அவர்களாகவே
நாங்கள் என்றும் இருப்போம் நண்பர்களாகவே


இதிகாசம் முதல் இக்காலம் வரை, நட்பு பெரிதாக போற்றப்படும் ஒன்றாகும்.
" உயிர் காப்பவன் தோழன்" என்றும் "இடுக்கண் களைவதாம் நட்பு" என்றும் நடப்பு என்ற உறவைப் பற்றி பெருமையாக பேசுகிறோம். துரியோதனன் - கர்ணன் நட்பு துய்மையான நட்ப்பிற்கு உதாரணமாக இன்றும் சொல்லபடுகிறது. பல சமயங்களில், தாய், தந்தை, உறவினர்களையும் விட நண்பர்களின் வார்த்தைகள் அதிகமாக மதிக்கப்படுகின்றன. நண்பர்களின் ஊக்கத்தல் சவால்களை எதிர்த்து வெற்றி கண்டவர் பலர். இவ்வாறு நட்பின் மகத்துவம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம்.


ஆனால் நண்பர்களே பால் வேறுபாடின்றி பழகுவதிலும் கவனம் தேவை :) அதனை மனதில் வைத்து கொள்ளுங்கள்



பெற்றோர்களே உங்களுக்கு :) :)  


இன்று யாழ்ப்பணத்தில் பெற்றோருக்கும் பெண் பிள்ளைகளுக்குமிடையில் ஒரு போராட்டமே நடக்கிறது என்று சொல்ல முடியும் ( நான் அனைத்து பெற்றோற்களையும் குறிப்பிடவில்லை  )

அதாவது பிள்ளைகள் பால் வேற்றுமையின்றி நட்புடன் பழகுவதை நட்பு என்ற கண் கொண்டு பார்க்காமல் எங்கே பிள்ளைகள் தவறி விடுவார்களோ.. !! என்று அச்சப்பட்டு அச்சப்பட்டே பெற்றோர்களும் தமக்கு தாமே மன உளைச்சலை ஏற்படுத்தி கொண்டே வாழ்கிறார்கள்..

இது தப்பு மிகப்பெரிய தப்பு

நான்கு சுவர்களுக்குள் வளர்க்கப்படும் பிள்ளைகள் காதல் வலையில் விழவில்லையா ??? தவறுகள் அங்கு நடக்கவில்லாய் ?? என்பதை பெற்றோர் நன்றாக சிந்தித்து பார்க்க வேண்டும்..

வீட்டுக்குள் வளர்க்கப்படும் ( அதாவது எதிர் பாலருடன் பழகாத ) பெண் பிள்ளைகள், வெளி உலகத்தை நன்கு தெரியாமல் வளர்கின்ற பொதுதான் தவறுகள் கூடுதலாக அரங்கேறுகின்றன என்பதை பெற்றோர்கள் சிந்திக்க மறந்து விடுகின்றனர்.

பெற்றோர்கள், பிள்ளைகளை கட்டி வைப்பதால், அவர்கள் மனதையோ உணர்வுகளையோ கட்டி வைக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அத்தோடு இப்படி வளர்க்கப்படும் பெண் பிள்ளைகள் உலகத்தைக் காணத் தவறி விடுகிறார்கள். மனிதர்களின் ( முக்கியமாக ஆண்களுடைய ) நியமன குணங்களை புரிந்து கொள்ள முடியாமற் போய் விடுகிறார்கள். தமது வட்டத்திற்கும் தாம் சந்திக்கும் ஒரு ஆண்மகனை ( அவன் அண்ணனின் நண்பனாகவோ அல்லது பக்கத்து வீட்டில் வசிப்பவனகவோ இருக்கலாம் ) அவன் நல்லவனா, கெட்டவனா, தனக்கு பொருத்தமானவனா என்று தெரியாமல் கண் முடி தனமாக காதலிக்க தொடங்கி விடுகின்றனர். ஆனால் வெளியல் போய் ஆண் பெண் என்ற பேதமின்றி நட்புடன் பழகும் ஒரு பெண் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டாள்

அடுத்து பெற்றோரிடம் காணப்படும் மற்றொரு தவறான எண்ணம்
  
" எங்கட போடுயல் சரியில்லை " இது பெண்ணைப் பெற்றவர்களின் பலரின் வாய்ப்பாடமும் மனக்கருத்தும் ஆகும்.  அதாவது பெடியன்களின் நடத்தை சரி இல்லை என்று சொல்லுகின்றனர். இது மிக மிகத் தப்பானதொரு கருத்து.


ஆண்கள் கெட்டவர்கள், பெண்கள் நல்லவர்கள் என்றில்லை. நல்லவர்களும் கெட்டவர்களும் இருபகுதியிலும் உள்ளார்கள். அந்தக் கெட்டவர்கள் ஏன் உருவானார்கள் என்பதைத்தான் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

இங்கு நாம் எடுத்துக் கொண்ட விடயத்துடன் பார்த்தால், ஆண் பெண் என்ற பாகுபாடின்றி வளரும் போது பெண் பிள்ளைகளுடன் கதைப்பதை, ஒரு சாதனையாக ஆண் பிள்ளைகள் கருதவே மாட்டார்கள். கதைப்பதற்கென்றே அலையவும் மாட்டார்கள். எமது வாழ்க்கை முறையின் தவறினால்தான் இந்தத் தப்புகள் எல்லாம்.

சின்ன வயதிலிருந்தே பால் பாகுபாடின்றி ஒன்றாக நட்புடன் வளரும் பிள்ளைகள் மத்தியில் ஏற்படும் தவறுகளைவிட, "நீ ஆண், நீ பெண்" என்று பிரித்து தனிமைப் படுத்தப்பட்டு வளர்க்கப்படும் பிள்ளைகளின் மத்தியில்தான் தவறுகள் அதிகமாக ஏற்படுகின்றன.

ஆதலால் ஆண்-பெண் பால் பாகுபாடின்றிய நட்பு அவசியம். பெண் பிள்ளைகளும் உலகத்தைப் பார்க்க பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்.

தவறுகள் நடவாதிருக்க உரிய வயதிலேயே உடல் ரீதியான, உணர்வுகள் சம்பந்தமான சில முக்கிய விடயங்களை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அவர்கள் மனதில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

அதைவிடுத்து பெண் பிள்ளைகளை ஆண்களுடன் பழகவிடாது வீட்டுக்குள் வைத்து வளர்ப்பதுதான் சரியென நினைத்து பிள்ளைகளையும் மனரீதியாக வதைத்து, பெற்றோர்கள் தம்மையும் தாமே வதைத்துக் கொண்டு, ஏதோ, "நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்கின்றோம்." என்று சொல்வது அனாவசியச் செயலே.


ஆகவே பெற்றோர்களே இதிலிருந்து உங்கள் வளர்ப்பு முறையினை சிறிது மாற்றி கொள்ளுங்கள்.





நல்ல பண்புடன் கூடிய நட்பு ஆத்மாவிலிருந்து வெளிவருமானால் அது வெளியுலக சமுதாயத்தில் நம்மை வெற்றி பெற்ற மனிதர்களாக உயர்த்திக்காட்டும். நட்பு என்பது அழகானது. உயர்ந்த நட்பிற்கு ஆண்-பெண் பேதம் கிடையாது. அப்படிப்பட்ட நட்பு பல சாதனைகளை நிகழ்த்தும் வல்லமை படைத்தது. உள்ளத்தின் தூய உணர்வுகளை மட்டுமே பெற்று வளரக்கூடிய நட்பு, வாழ்க்கையில் பல வெற்றிகளை தேடித்தரும்.

கடைசியா ஒரு கவிதை



தயக்கத்தோடு
ஆரம்பிக்கும்
முதல் உரையாடல்.
பயத்தோடு
பகிர்ந்து கொள்ளப்படும்
அலைபேசி எண்கள்.
அவள் தவறாக
எண்ணிவிடுவாளோ?- என்று
யோசித்து,யோசித் து
பேசும் தருணங்கள்.
காதல்,கீதல் என
உளறுவானோ?-என்று
குழப்பத்தோடு
பேசும் ஆரம்பக்காலங்கள் .
புரிதல் தொடங்கும்
நேரத்தில் தானாக
மலர ஆரம்பிக்கும்
நட்பு மலர்.
புரிந்து கொண்ட பின்,
ஆண்-பெண் வித்தியாசத்தை
காணாமல் ஆக்கும்
நட்பின் ஆழம்.
தோல்விகண்டு துவலுகையில்
புதுத்தெம்பூட்ட ி,அடுத்த
முயற்சிக்கு அடிதளமிடவைப்பாள ்
அவனை அவன் தோழி.
ஆடவர் நால்வர் முன்
தைரியத்தோடும்,ப ெண்மை மாறாமலும்,
வாழ வழிகாட்டுவான்
அவளுக்கு அவள் தோழன்.
முடிவில்லா முடிவில்-நட்பு
வளர்ந்து நிற்கும்?
புரிந்து இருக்கமாட்டார்க ள் என்னை,
என் தோழியை/நண்பனை
விட வேறு யாரும் நன்றாக
என்னும் ரீதியில்...!
வளரட்டும் இதுபோல்
ஆரோக்கியமாக
ஆண்-பெண் நட்பு....








3 comments:

  1. நட்பு இது வெறும் வேஷம். சுய நல்த்துக்காக் எதுவும் சொய்யக்கூடியது. உனக்கு நீயே நண்பன், நீயே ஆசான்.

    என்னதான் தோழன்/தோழி என்று பழகினாலும் கூட இருந்தவன் முன்னுக்கு வந்த அவங்க ஏற்றுக்கொள்ள மாட்டாங்க்க... இது என் அனுபவம்.

    அற்ப்ப விசயத்துக்காக் கற்ப்ப காணவில்லை என்று சொல்லும் பெண்னின் நட்ப்பு...

    பெண்னுக்காக காவு எடுக்கும் ஆணின் நட்ப்பு


    இது என் அனுபவம் ஆனால் நீங்கள் உண்மையிலேயே நல்ல நண்பர்களுடன் இருந்தால் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தாமதமான பதிலுக்கு முதலில் மன்னிப்பு கேட்டு கொள்கின்றேன் :)

    // உனக்கு நீயே நண்பன், நீயே ஆசான்.// இது மிகவும் சரியான ஓன்று நாமே நமக்கு சிறந்த நண்பன்.

    ஆனால் நீங்கள் சொன்ன மற்றைய விடயங்கள் என்னால் ஒத்துக்கொள்ள முடியாத ஒன்றாகும்... சிலர் தமது சொந்த தேவைகளுக்காக நம்முடன் நட்பாக இருப்பதாக காட்டுவார்கள் அது உண்மையே ஆனால் சிறந்த நட்புகளும் உள்ளன என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் :) அது ஆண் நட்பாகட்டும் பெண் நட்பாகட்டும்
    Menaan Soundararajan

    ReplyDelete
  3. உங்கள் பதிலை நான் ஏற்றுகொள்கிறேன் சிவரதன். ஆனாலும் இன்று நான் இந்த பதிலை அனுப்ப முன்னர் கூட
    நண்பன் என்று இருந்த ஒருவரின் சுய முகத்தை என் நண்பர்களுக்கு காட்டிவிட்டு சென்றிருக்கிறார். எனக்கு பொதுவாக நண்பர்கள் என்று யாரும் இல்லை காரணம் எனது சிந்தனை அல்லது எனது கருத்து அவர்களுக்கு சரி என்று தோன்றினாலும் அதை ஏற்க அவர்களது மனம் மாறுகின்றது.

    உங்கள் கருத்துகளை பார்த்தல் இதே அனுபவம் உங்களுக்கும் இருக்கும் என்று நினைகின்றேன்.

    சக நண்பனின் முன்னேற்றத்தை காண்டு முதுகில் குத்துபவனும் நண்பன்தான் , துக்கத்தில் கை கொடுப்பவனும் நண்பன்தான். நல்லதை செய்பவர்கள் குறைவு சுயநலம் கொண்டவர்கள் அதிகம்.

    சுய நலம் இல்லாத நண்பர்கள் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் எனது எதிர்பார்ப்பு கூட ஒருவிதத்தில் சுயநலம் தானே...

    ஒரு ஆசிரியர் புத்தகம் போல என்றால் ஒரு நல்ல நண்பன் ஆயிரம் நூலகத்துக்கு ஒப்பானவன். (எங்கோ படித்தது )

    எதுவாகிலும் புரிந்துணர்வு ஒன்றே நட்பை வாழ வைக்கும்.

    தோழி ஒருத்தி கிடைத்தல் இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும் இதுவரை இந்த உண்மை ஏன் தெரியவில்லை எவர்க்கும் (http://www.youtube.com/watch?v=sBE9UPKwaR4).

    யாதி மத பேதத்தால் நடந்த சமுதாய அவலங்கள், கொலைகள் அஸ்தமனமாகி இன்று நட்பு காதல் எனும் பெயரில் உதயமாகின்றது.

    ReplyDelete