Tuesday 10 December 2013

// // 6 comments

காதல் டிப்ஸ் - குட்லக் பாய்ஸ்!!!

காதல்ல விழுந்திருக்குற குடிமகனா நீங்கள்... ஆமான்னா இந்தப் பதிவு உங்களுக்காகத் தான். காதல்ங்குறது ஒரு அழகான விஷயம், அதே அளவுக்கு ஆபத்தானதும் கூட. எப்போ அழகாகும், எப்போது ஆபத்தாகும்ன்னே சொல்ல முடியாது.

காதலனோ காதலியோ எதை, எப்படிப் பேசணும், எதைப் பேசக் கூடாதுன்னு விதிகள் உண்டு. பெரும்பாலும் இந்த விதிகள் கடைபிடிக்க வேண்டியது காதலன் தான். காதலிகளுக்குப் பெரிசா கஷ்டமான விதிகளெல்லாம் இல்லை. காதலன் கடைபிடிக்க வேண்டிய காதல் விதிகள் இங்கே.

1. நீங்க எந்த முக்கியமான வேலைல இருந்தாலும் உங்க காதலியின் அழைப்பை எடுக்காம விட்டுடாதீங்க. கிளசில படிச்சு கொண்டிருந்தாலும் கூட எடுத்து ஒரு ஹலோ சொல்லிட்டுப் பையில் போட்டுக்கோங்க. அடுத்து நீங்க லைன்ல இருக்கீங்களா, இல்லையாங்குற கவலையே இல்லாம அவங்க பாட்டு ஆத்து ஆத்துன்னு ஆத்திக்கிட்டிருப்பாங்க.

2. காதலி கூட எப்போவாச்சும் சண்டை போட்டா தப்பு அவங்க மேலவே இருந்தாலும் நீங்களே குற்றவாளியாகி ஸாரி சொல்லிடுங்க. “நீ செஞ்சது தப்பும்மா”ன்னு வாய் தவறிக் கூட சொல்லிடாதீங்க. அப்புறம் உங்களுக்கு உப்புமா கூட கிடைக்காது.

3. காதலிக்கு ஏதாச்சும் சோகமா.. பூக்கொத்துகளுடன் போய்ப் பாருங்க. அவங்க வீட்டு நாய்க்குட்டிக்கு ஒரு கால் உடைஞ்சு போய்ட்டாலோ , அவங்க பரீட்சையில் ஃபெயிலாகிட்டலோ கருப்பு ட்ரெஸ் போட்டுக்கிட்டு கையில் வெள்ளை மலர்க்கொத்துடன் போய் ஃபீலிங் குடுங்க. அந்த நேரத்துல நீங்க காதலிக்காகக் கண்ணீர் விடலைன்னா, அப்புறம் வாழ்நாள் முழுக்க வருத்தப்பட வேண்டியிருக்கும்.

4. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், ” இந்த ட்ரஸ்’ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்”. (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

5. வீட்ல யார் யாரோ சமைச்சதைக் கொண்டு வந்து தானே சமைச்சதா சொல்லி உங்களுக்கு ஊட்டி விடுவாங்க. அப்போவே அந்த நல்ல சாப்பாடை அனுபவிச்சுக்கோங்க.

6. அவங்க சொல்றதுல / செய்றதுல பெரும்பாலான விஷயங்கள் புரியாது. ஆனாலும் புரிஞ்ச மாதிரி மேனேஜ் பண்ணக் கத்துக்கோங்க. உதாரணத்துக்கு நிறங்களைப் பத்தி சொல்லும் போது இலைப் பச்சை, யானைக் கருப்பு, ரத்த சிவப்பு இப்படியெல்லாம் சொல்லுவாங்க. அதுக்காக போய் ஏகப்பட்ட இலை இருக்கு எந்த இலைன்னோ, ரத்தம் வரும் போது இருக்குற சிவப்பா, உறைஞ்சதுக்கப்புறம் இருக்குற சிவப்பான்னெல்லாம் கேக்கக் கூடாது. அதே மாதிரி கடை கடையா ஒரு நாள் முழுக்க அவங்க கூட உங்களை அலைய விட்டுட்டு கடைசில அம்பது பைசாவுக்கு ஒரு ஊக்கு வாங்கிட்டு வருவாங்க. அதுக்காக கடுப்பாகிக் கத்தக் கூடாது. பொறுமை முக்கியம் நண்பர்களே.

7. எல்லா மொழிலேயும் இருக்குற கொஞ்சுற வார்த்தைகளாக் கத்துக்கோங்க. அட, என்ன மொழின்னு தெரியலைன்னா கூட பரவாயில்லை. ஆனா கொஞ்சலா இருக்கணும் இப்படி செல்லம், சுச்சூ, புஜ்ஜூ, ப்யாரி, ஸ்வீட்டி, பப்ளி, நுன்னு,....

8. எப்போவும் எங்கேயும் அவங்களை 1 நிமிஷம் கூடக் காக்க வெச்சிடாதீங்க. அன்னிக்கு நாள் முழுக்க அர்ச்சனை 

9.அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்’ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க…

10.அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. 

11.கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்’ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

12.“நீ ரொம்ப அழகா இருக்கேங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

13.ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இத்தனையையும் வெற்றிகரமா சமாளிச்சுட்டீங்க, நீங்க க்ரேட் தான். கண்ணாடி முன்னாடி போய் நின்னு தோளைத் தட்டி சபாஷ் சொல்லிக்கோங்க. ஏன்னா பொண்ணுங்களுக்காக நீங்க இவ்ளோ செஞ்சதுக்கப்புறமும் கூட அவங்க உங்களைப் பாராட்ட மாட்டாங்க. நீங்க செய்யாம விட்ட தம்மாத்துண்டு பாயிண்ட்டைப் பிடிச்சுக்குவாங்க. பீ கேர்ஃபுல் அண்ட் குட் லக் (!) பாய்ஸ்.


(இதெல்லாம் உங்க சொந்த அனுபவமான்னு கேக்கறவங்க பல  காதலிகள் வைத்துத் துன்புற!)
Read More

Tuesday 3 December 2013

// // 1 comment

பிட்டடித்து வாழ்வாரும் வாழ்வர்...மற்றெல்லாம் புக் படித்து மாழ்வார்

இது நம்ம எல்லாம் பின்னி பெடலெடுத்த exams பத்தினது.. 

exams'na என்ன மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் வேப்பங்காய் தான்.. என்ன மாதிரி ஏன்டா நான் மட்டுமில்ல எங்கட கிளாஸ்சோட LASTBENCH Students ellorukkum than...

யார் யார் எண்டு ஒருக்கா சொல்லிரன்



  1. சிவரதன் (வேற யாருமில்ல நான் தான்..)
  2. ராம்கிஷன்
  3. பிரனவன்
  4. அனுஷன் 
  5. கௌரிஷங்கர்
  6. தயாகரன்  இன்னும் பலர்.....:)


நாங்க எல்லாம் கிளாஸ் ரூம்'ல ரெஸ்ட் எடுக்க கூட first பெஞ்ச் பக்கம் ஒதுங்காத நல்லவங்க. ஏன்னா, ஒரு வேல நம்ம அங்க போயி, நல்லா படிச்சு அந்த பசங்களுக்கு கெட்ட பேர வாங்கி தந்துட கூடாதுல..? அதான்.
அதூம் இல்லாம, அந்த ஒரு termi'ku, ஏகப்பட்ட புக்ஸ்'ல ஆயிரகணக்கான pages'a படிச்சு அவங்க கேக்கற ஐம்பது அறுபது கேள்விகள்ல பத்து இருபாத செலக்ட் பண்ணி.. அதுல ஏழு எட்டு கேள்விகளுக்கு answer எழுதி.., இதெல்லாம் ஒரு பொழப்பா.. சும்மா கடுப்படிச்சுகிட்டு..
என்ன பொறுத்த வரைக்கும் terms, exams' nO WAy. 



எங்க Groupக்கு ஒரு கொள்கை இருக்கு... எங்க கொள்கையின் சாராம்சம் என்னனா, எந்த கிலாஸ்கும் note'nu ஒன்ன கொண்டு போயி மாஸ்டர்'a கேவலப்படுத்திட கூடாது. ஏனா, குருவோட சாபம் பொல்லாதது. final எக்ஸாம் வரைக்கும் கண்டிப்பா புக்'e வாங்க கூடாது. அப்புறம், யாராச்சு books'a வாங்கி xerox போட்டு பத்தரமா எடுத்து வெச்சுக்கணும். (பிட் எழுத வேணும்ல.. அதுக்கு தான்.)


Exam ஆரம்ப்திச்சவொடனே, சில பல நல்ல white sheets'a வாங்கி பிட்டு பிட்டா கட் பண்ணி நோட்ஸ் எடுக்கணும். class'la நோட்ஸ் எடுத்தா மாஸ்டர்'a அவமதிச்சா மாதிரி. எக்ஸாம்'கு நோட்ஸ் எடுக்கட்டா, அது எக்ஸாம்'a அவமதிச்சா மாதிரி. So, நோட்ஸ் எடுத்துக்கணும். கொஞ்சும் descent'a சொன்னா, பிட் எடுத்துக்கணும்.
"பிட்டடித்து வாழ்வாரும் வாழ்வர் மற்றெல்லாம்

புக் படித்து மாழ்வார் ."

எங்க Group பொன் மொழி.......



எங்களோட  ரொம்ப முக்கியமான கொள்கை அடுத்தவரை சார்ந்து செயல் ஆற்றாமை.

எவ்ளோ பிட் தேவ பட்டாலும் ஒண்டியா ஒக்காந்து அத்தனையும் எழுதிட்டு போனம்னா, எல்லா பிட்டும் நமதே.. வெற்றியும் நாமதே.., மாட்டுனா சிக்கலும் நமதே.. யாருக்கும் பதில் சொல்ல தேவ இல்ல பாருங்க..

எங்கள்  வாழ்வில் நாங்கள்  பின்பற்றிய, பின்பற்றும் வழிமுறைகளை இங்கே பகிருகிறேன். USE பண்ணுங்க...:)



1. முதல் பிட்டு சின்ன சின்ன பேப்பர் எடுத்துகிட்டு எழுதவேண்டிய சப்ஜெக்ட்டோட முதல் பாடத்துல வர முதல் கேள்விக்கான ஹெட் லைன்ஸ் எல்லாம் அந்த குட்டிபேப்பர்ல எழுதி பர்ஸ்ல வச்சிடுங்க (இதுக்கு பஸ் டிக்கட் மாதிரியான பேப்பர்களை யூஸ் பண்ணிக்கிறது நல்லது, ஏன்னா சப்போஸ் இன்விஜிலேட்டர் பாத்துட்டாங்கன்னா அவங்களுக்கே தெரியாம தூக்கிவீசியெறிய வசதியா இருக்கும்.) இதுல எங்கட குருப்பில expert யாரெண்டு பார்த்தா நம்மட இந்துசன் என்பவர் தான். உங்களுக்கு இந்த வழிமுறையில எதாவது சந்தேகம் எண்டா இங்க click பண்ணி அவருட்ட fbல சந்தேகம் கேக்கலாம்...: 


2. ஹால்டிக்கட்ல பின்னாடி மொக்கையான பென்சில்ல எழுதிக்கலாம், கேள்வித்தாள் கொடுத்ததும் அதுல ஹிண்ட்ஸையெல்லாம் நோட் பண்ணிக்கிட்டு அப்ரம் ஹால்டிக்கட்ல இருக்கரதையெல்லாம் அழிச்சிட்டு படிப்ஸ் மாதிரி எழுதிட்டு இருக்கலாம். கேள்வித்தாள் குடுத்ததும் உடனடியா செய்ர வேலை இது காலம் கடத்தினாலும் மாட்டிக்க வாய்ப்பிருக்கு. கேள்வித்தாள்ல எழுதிட்ட பிறகு வந்து கேட்டா அப்ரம் மறந்துடும் சார் அதான் இப்பவே எழுதிவச்சிக்கிறேன்னு ஒரு ரீலை விடனும்


3. மை பேனா இல்லைன்னா இங்க் பேனா இப்பல்லாம் யாரும் இங்க் பென் யூஸ் பண்ரதில்லை ஆனாலும் இங்க் பேனா பிட்டு அடிக்கிரதுக்கு பெஸ்ட். உள்ளங்கையில முக்கியமான கேள்விகள் வரைக்கும் தேர்ந்தெடுத்து எழுதிவச்சிக்கலாம், இதுல நிரைய எழுதிவைக்க முடியாது இருந்தாலும் ஹெட்டிங்க்ஸ், ஃபார்முலாஸ், படங்களையெல்லாம் வரைஞ்சு எழுதிவச்சிக்கலாம். எழுதிமுடிச்சுட்டு உள்ளங்கையை துடைச்சிட்டாலே போயே போச்சு பிட்டு, வியர்வை அதிகம் வரவங்க பிட்டை சீக்கிரமா நோட் பண்ணிவைக்கிறது நல்லது.


4. எக்ஸாம் ஹால்ல இருக்கர பென்ச், சேர் டேபிள் சுவரையும் நம்ம பிட்டுக்காக பயன்படுத்திக்கலாம், சின்சியரா படிக்கும் (?!) படிக்கிர மாதிரி இருக்கும்போது டேபிள்ல சில நோட்சையெல்லாம் கிட்ட பாத்தமட்டும் தெரியரமாதிரி எழுதிவச்சிக்கலாம், இதுக்கு பென்சில், இங்க் பென் பெஸ்ட் அடுத்த எக்ஸாம்க்கும் எழுதிவைக்கனுமில்ல. ஒவ்வொரு நாள் ஒவ்வொரு க்ளாஸ் ரூம்னா

பிரச்சனையில்லை மை பென்லயே எழுதிவச்சிடலாம்.


5. பக்கத்துல நல்ல படிக்கிர பையனா அல்லது  பொண்ணா பாத்து கரெக்ட் பண்ணி உட்காரவச்சிக்கோங்க அந்த பையன் அல்லது  பொண்ணு உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம், இல்லைன்னா எக்ஸாம் சுப்பவைசர்க்கு  தெரியாம அவங்க பேப்பரை வாங்கி எழுதிக்கலாம். இதுவும் கொஞ்சம் கஷ்டமா இருந்தா உங்களுக்கு பிடிச்ச கடையில போய் கண்ணாடி வாங்கிபோட்டுக்கிட்டு முன்னாடி பென்ச்ல எழுதரவங்களை பாத்து எழுதிக்கலாம்.


இப்போ இருக்கர வசதிக்கு செல்போன்ல மெசேஜ் பண்ணியும் பிட்டு அடிச்சிக்கலாம் ஆனா பிடிபட்டீங்க செத்திங்க :(



இப்படியெல்லாம் பிட்டு அடிச்சு எழுத பயமா கஷ்டமா இருந்தா அமைதியா ராவோட ராவா படிச்சிட்டு வந்து எழுதலாம், ஆனாலும் அதுல ஒரு கஷ்டம் நிரைய படிச்சி எழுதினா நேரம் போதறதில்லை. அதனால எல்லாக்கேள்விகளுக்கும் சரியான விடைகளை எழுதும்போது முக்கிய குறிப்புகளையெல்லாம் அடிக்கோடிட்டு எழுதுங்க முடிஞ்சா ஸ்கெட்ச் பென்சில் யூஸ் பண்ணி அடிக்கோடிடலாம்,ரீல் விட்டு எழுதியிருந்தா அடிக்கோடிட வேண்டாம். கொஞ்சமா எழுதினாலும் பாக்க நச்சுன்னு இருக்கரமாதிரி கையெழுத்தும் பாயிண்ட்களும் அழகா எழுதுங்க :)






கடைசியாக ஒரு கவிதை --- நான் எழுதல யாரோ எழுதினாங்க...


நான் தான் 
வெற்றியையும் , தோல்வியையும் 
இணைக்கும் பாலாம்! 
என்னை விட்டுவிடாதே ! 

இப்படிக்கு 
எக்ஸாம் பிட்

Read More

Tuesday 29 October 2013

// // 2 comments

What is ஹக்கிங் 01

”What is ஹக்கிங்”  என்கிற இந்த தொடரில் ஹக்கிங் பற்றி நிறையவே எழுதப்போகிறேன். முக்கியமாக ஹக்கிங், ஹக்கேர்ஸ், ஹக்கிங் வழிமுறைகளும் அவற்றை தடுப்பதற்கான வழிவகைகள் என இன்னும் பல விடயங்களுடன்  இத்தொடர் நீண்டு செல்லப்போகிறது. ஆனால் மிக முக்கியமான ஒரு விடயத்தை ஹக்கிங் வழிமுறைகளும் அவற்றை தடுப்பதற்கான வழிவகைகள்” 



குறிப்பிட வேண்டியிருக்கிறது, அதாவது 

என்னும் போது தனிநபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஹக்கிங் முறைகள் மற்றும் அவற்றுக்கான பாதுகாப்பு வழிகள் பற்றியதே என்பதை நினைவில் கொள்க.
ஹக்கிங் என்றால் என்ன?
ஹேக்கிங் என்பது ஒரு வலையமைப்பிலோ அல்லது தனிநபர் இணையக் கணக்கிலோ உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடித்து அவற்றைப் பயன்படுத்தி  திருட்டுத்தனமாக வலையமைப்புக்குள் நுழைவது அல்லது தகவல்களை திருடுவது அல்லதுவிட்டால் கையகப்படுத்துவது.
ஹக்கிங் பற்றிய ஒரு சின்னதான அறிமுகத்தோட ஹக்கிங் உலகின் போராளிகளான ஹக்கேர்ஸ்(Hackers) பற்றி சற்று விரிவாகவே பார்க்கலாமே.ஆனாலும் இணைய உலகைப் பொறுத்த வரையில் இன்றைய கதாநாயகர்களும் இவர்கள்தான் வில்லன்களும் இவர்கள்தான்.
ஹக்கேர்ஸ் - Hackers
ஹக்கிங் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை ஹக்கேர்ஸ் என பொதுவாக எல்லோரும் அழைப்போம். ஆனாலும் அவர்களின் நோக்கம் அதாவது குறிக்கோள், செயற்பாடுகள்,மற்றும் திறமை  போன்ற இன்னோரன்ன காரணங்களின் அடிப்படையில் அவர்கள் சமூகத்தால் வேறுபட்ட கண்களால் பார்க்கப்படுகிறார்கள். ஆக வெவ்வேறு முகங்களையுடைய ஹக்கேர்ஸ் பற்றி மேலே பார்க்கலாம்.
இன்றைய கணினிஉலகில் ஹக்கேர்ஸ்களில் பலவகையினர் உண்டு  ஆயினும் அவர்களில் Black Hat Hackers, White Hat Hackers, Grey Hat Hackers ஆகிய பிரிவினரே முக்கியமானவர்கள்.

Types of Hackers
1.Black Hat Hackers-  யார் இவர்கள்? ஹக்கேர்ஸ் உலகின் ஜாம்பவான்கள், மகா புத்திசாலிகள் ஆனால் துளியளவும் நல்லெண்ணம் இவர்களிடம் கிடையாது. இவர்களிடம் நிரம்பப்பெற்ற அறிவு முழுவதையுமே தீய நோக்கங்களுக்காக பயன்படுத்துவார்கள். சின்னதாக ஈமெயில் பாஸ்வேர்ட் திருட்டு தொடங்கி பாரிய வலையமைப்புகளை முடக்குதல் வரை அத்தனையும் இவர்களுக்கு அத்துப்படி.
இவர்களே பெரிதும் இணையத்தளங்களை முடக்குதல், மென்பொருள் க்ராக்கிங்(CRACKING SOFT WARES), வைரஸ்களை உருவாக்குதல், இணைய வங்கி, கடனட்டை மோசடிகளில் ஈடுபடல், தனிநபர் மற்றும் முக்கிய நிறுவனங்களின் இணையத்தளங்களிற்குள் புகுந்து தரவுகளை சேதப்படுத்தல் மற்றும் திருடுதல், இணையத்தளங்களின் சேவை வழங்கிகளான சேர்வர்களுக்குள் (SERVERS) ஊடுருவுதல் போன்ற பலவகையான தீய செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
இவர்களின் பிரதான நோக்கம் பிறரின் தகவல்களை திருடுவதும் அனுமதியின்றி அவற்றை கையாள்வதும்தான். இப்படியாக திறமையைப் பயன்படுத்தி சட்டவிரோத வழியில் பணம் பார்ப்பதே இவர்களின் வேலை.
2.White Hat Hackers- இவர்கள் ஹக்கேர்ஸ் உலகின் போராளிகள். இவர்கள் தங்களுடைய அறிவை நல்ல செயற்பாடுகளிற்காகவே உபயோகிப்பார்கள். மேலும்  Black Hat Hackers ற்கு நேரெதிர் எண்ணம் கொண்டவர்கள்.இவர்களே சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹக்கேர்ஸ் ஆவர். இவர்களில் அனேகர் பெரிய பல நிறுவனங்களுடைய கணினி வலையமைப்புகளின் செக்கியூரிட்டி ஸ்பெசலிஸ்ட்(Security Specialist) ஆக வேலை பார்க்கிறார்கள். அன்ரி வைரஸ் மென்பொருள் தயாரிப்புகளில் இவர்களுடைய பங்கு அதிகமானது. இணைய வெளியைக் கலக்கிக் கொண்டிருக்கும் வைரஸ்கள், தீங்கு விளைவிக்கக்கூடிய புரோகிராம்கள் என்பவற்றிக்கு எதிராக போராடுவதே இவர்களின் வேலை.
3.Grey Hat Hackers-  இவனுங்க ஒரு மார்க்கமான ஆளுங்க, அதாவது கடவுள் பாதி மிருகம் பாதி என்கிறமாதிரி. இவர்கள் ஹக்கிங்கை முழுநேரமாக எடுத்துக்கொள்வதில்லை. உரு வந்தாற்போல நேரம் கிடைக்கும் போது க்ராக்கிங்(CRACKING), டீகோடிங்( DECODING), வைரஸ் உருவாக்குதல், தகவல் திருட்டு போன்றவற்றில் தங்கள் கைவரிசையினை காட்டிவிடுவார்கள்.
இவர்களே ஹக்கேர்ஸ் உலகின் முக்கியமான பிரிவினர் ஆவர், இவர்களை விட ஏனைய சிலவகை ஹக்கேர்ஸ்களும் உண்டு. அவர்களையும் பார்க்கலாம்
Script kiddies – ஹக்கிங் பற்றிய ஆரம்ம அறிவைப்பெற முயற்சிப்போர் அதாவது பிகினேர்ஸ்.நம்ம ஆட்கள் பலரும் இந்தவகைதான் இவர்களிடம் ஹக்கிங் பற்றிய போதிய பயிற்சி கிடையாது. எவனோ ஒருவன் கிரியேட் செய்த அப்ளிகேசன்ஸ்,ரூல்ஸ்  ஏதாவதொன்றை வைத்துக்கொண்டு ஹக்கிங் செய்ய முயற்சிப்பவர்கள் இந்த ரகம்.

Intermediate hackers- இவர்களுக்கு வலையமைப்பு, புரோகிராமிங் போன்றவற்றில் பாதி அறிவுண்டு. ஒரு புரோகிராமை உருவாக்கும் வல்லமை இருந்தாலும் பெரிதாக எதுவும் இவர்களால் செய்ய முடியாது. சின்னதான சில திருட்டுகளில் மட்டுமே இவர்களால் ஈடுபட முடியும்.அதாவது ஆபத்துக் குறைந்தவர்கள்.

Elite Hackers-  இவர்களுக்கு ஹக்கிங் தொடர்பில் பூரண அறிவுண்டு. இவர்களும் அப்லிகேசன், ரூல்ஸ் போன்றவற்றை தாங்களாக உருவாக்குவதில்லை தான் . ஏனெனில் அவர்களின் திறமைக்கு இவற்றின் தேவைப்பாடுகள் எதுவும் இருக்கப்போவதில்லை. எந்த அப்ளிகேசன் உதவியுமின்றி தங்கள் திறமையாலேயே சாதிக்க கூடியவர்கள். ஹக்கேர்ஸ் உலகின் முடிசூடா மன்னர்கள்.
மேலும் Coders,Admins ரகத்தைச்சேர்ந்த ஹக்கேர்ஸ் என இப்பட்டியல் நீண்டு சென்றாலும் முக்கியமான ஹக்கேர்ஸ் பிரிவினர் இவர்களே.
இந்த பதிவில் ஹக்கிங் பற்றிய சின்னதாக ஒரு அறிமுகத்தோட, ஹக்கேர்ஸ் பற்றி சற்று விரிவாகவே பார்த்தோம். அடுத்த பதிவில் ஹக்கிங் பற்றிய இன்னுமொரு பயனுள்ள அவசியம் தெரியவேண்டிய விடயம் பற்றி பார்க்கலாம்.
Read More

Saturday 28 September 2013

// // 3 comments

இது பனங்காய் சீசன்

"எல்லோரும் இன்றைக்கு பனங்காய் பணியாரம் சாப்பிடுவோமா?"

பனை என்றதுமே உடனடியாக ஞாபகத்துக்கு வருவது இரண்டு. ஒன்று 
பனங்கள்ளு. அடுத்தது பனங்காய் பணியாரம். இரண்டுமே யாழ்ப்பாணத்தில் 
பிரபலம். "கள்ளு குடித்தால் போதை வரும்!" என்பார்கள். ஆனால் எங்கள் 
அம்மம்மாக்கள் சுடும் பனங்காய் பணியாரத்தை சாப்பிட்டாலும் ஒரு போதை 
வரும். ஆனால் இந்த போதை குடித்துவிட்டு மெய்மறந்து அடுத்தவனை 
அடிக்கும் போதையல்ல. ஒரு முறை சாப்பிட்டாலே மீண்டும்
 மீண்டும் சாப்பிடத்தூண்டும் போதை.

பனங்காய்பணியாரம் சுடுவதில் நம்மூர் பெண்கள் கில்லாடிகள். 
பனம்பழத்தின் சுவையும் அவர்களின் கைப்பக்குவமும் சேர்ந்து 
பணியாரமாக வரும்போதுஅதன் சுவையே தனி. எங்கள் வீட்டில் 
பனங்காய் பணியாரம் சுடுவது அம்மம்மாதான். அவருக்குத்தான் அதன் 
கஷ்டம் புரியும். ஆனால் அந்த பணியாரம் சுடுவதற்கு பின்னால் 
எங்களின் (சிறுவர்களின்) கடின உழைப்பு இருக்கிறது என்பதுதான் சுவையானது.

ஆனா எங்க வீட்டில பனம் பழம் கொண்டு வாரது அத்தான். கழுவி 
தோல் உரிக்கிறது அப்பா. பனம்களி எடுக்கிறது அம்மாவும் அப்பாவும் சுடுறது 
அம்மா. அப்ப நான் என்ன வேலை செய்யிரனான் அம்மா சுட்டு தாரதை 
வயிறு முட்ட சாப்பிறது தான்

முன்னுரை போதும் எண்டு நினைக்கிறன். இப்ப இந்த நவீன உலகத்தில 
பல யாழ்ப்பாணத்து பெண்களுக்கு கூட இந்தப் பனங்காய் பணியாரம் செய்ய 
தெரியல. அது தான் இந்தப் பதிவு 

எப்பிடி செய்யிறது எண்டு பாப்பமா வாங்க


செய்வோமா பணியாரம்.


நன்கு பழுத்த ஒன்று அல்லது இரண்டு 
பனம் பழத்தை நன்கு கழுவி எடுங்கள். 
மேலுள்ள மூளைக் கழட்டி விடுங்கள்.

பனம் பழத்தின் மேலுள்ள நாரை சிறிய 
மேசைக் கத்தியினால் பழத்தின் 
மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக
சீவி எடுங்கள். (கவனமா செய்யுங்கோ 
கைகளை வெட்டிராதிங்கொ)


நாரை வெட்டி அகற்றிய பின் மீண்டும் 
பழத்தை தண்ணீரில் நன்கு கழுவுங்கள்.



பின்பு பழத்தை கைகளால் பிரியுங்கோ. (இது இரண்டு மூன்றாக விதையுடன் பிரியும்)



அவற்றைப் பிழிந்து அதிலுள்ள களியை இரு கைகளாலும் அழுத்தி எடுங்கள்.

களி தும்புகளுடன் கூடி இருக்கும். மெல்லிய வெள்ளைத்துணி அல்லது கண்ணறைத் துணியை வைத்து களியை வடித்தெடுங்கள்.

வடித்தெடுத்த களியை அடுப்பில் வைத்து சீனி சேர்த்து  பச்சை வாடை போக காச்சி எடுத்து ஆறவையுங்கள். 

இப்பொழுது காச்சிய பனம்களி தயாராகிவிட்டது.( அட பக்கத்து படத்தில இருக்கிற மாதிரி தான் இருக்கும் )


தேவையான பொருட்கள்


பனங்களி ( இத தயாரிக்கிறதான் மேல சொன்னனான்)   – 1 கப்
சீனி- ¼ கப்
பொரிக்க எண்ணெய் – அரை லீட்டர். 
அவித்த மைதாமா அல்லது வறுத்த உழுந்துமா அல்லது அரிசிமா – ¼ கப்
உப்பு சிறிதளவு.


செய்முறை


காச்சிய பனங்களியுடன் மைதாமா உப்பு சேர்த்து கிளறி எடுங்கள்.
தாச்சியில் எண்ணையை விட்டு நன்கு கொதிக்க மாவைக் கையில் எடுத்து 
சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுங்கள். 

ரிசூ பேப்பரில் இல்லாட்டி பழைய செய்தித்
தாளினில் போட்டு எண்ணையினை வடியவிட்டு ஆற வைத்த பின் இரண்டு மூன்று நாட்கள் வைத்துச் சாப்பிடுங்கள்.


உதவிக் குறிப்புகள் 

  • மைதாமா கலந்தால் மெதுமையான பணியாரம் கிடைக்கும்.
  • அரிசிமா, உழுந்துமா சற்று உரமாக இருக்கும். 
  • மா கலக்காமல் தனியே களியிலும் செய்வார்கள் இது கடித்துச் சாப்பிடும் 
  • போது களிப் பிடியாக இருக்கும்.

கால ஓட்டத்தில் இப்போது இதெல்லாம் கிடைப்பது அரிதாகி விட்டது. அவ்வப்
போது பனங்காய் பணியாரம் சாப்பிட வாய்ப்பு கிடைத்தாலும் முன்பு 
போல் சொந்தங்களுடன் சண்டை பிடித்து, பின்னர் ஒன்று சேர்ந்து 
சாப்பிடும் சுகமும்,சுவையும் கிடைப்பதில்லை.

உங்க கருத்துகளை பின்னூட்டத்தில சொல்லுங்கோ. அடுத்த பதிவில சந்திப்பம்.

 Bye



Read More

Friday 20 September 2013

// // 2 comments

I am back...

வணக்கம் நண்பர்களே மிக நீண்ட............................ நாட்களின் பின் சந்திக்கின்றோம். எதுக்கு கன நாளாய் இந்தப் பக்கம் வரேல்ல எண்டு உங்கட mind voice எனக்கு கேக்குது. என்ன செய்யிறது எல்லாம் வயசு செய்யிற விளையாட்டு தான். நானும் 17 வயசு பெடியன் தானே. ஆனா இதையும் விடக்கூடாது அதுதான் திரும்பவும் வந்துட்டன். இனி ஒழுங்கா பதிவுகள் + கவிதைகள் வரும் அதையெல்லாம் நீங்க கண்டுக்கக்கூடாது.

சரி இண்டைக்கு எதைப்பற்றி எழுதலாம் என்னைப் பத்தி எழுதலாம் (வித்தியாசமா  )

எப்பிடி இருக்கு எண்டு பின்னுட்டத்தில சொல்லுங்க



1. A – Available/Single? : Available, எங்கேயும், எப்போதும்.

2. B – Best friend? : இருக்காங்க. 

3. C – Cake or Pie?: கேக் 

4. D – Drink of choice? :ஒரு drink  வாங்கி 5 friends குடிப்பது 

5. E – Essential item you use every day? : பணம் 

6. F – Favorite color? : கருப்பு.(இது ஒரு கலர் இல்லையாமே?)

7. G – Gummy Bears Or Worms?: Gummy bears

8. H – Hometown? - சாவகச்சேரி (1995 jaffna illa big fight ) 

9. I – Indulgence? – with friends  (?!)

10. J – January or February? February 14 (ட்றீட்டுக்காக மட்டும். அவ்வ்வ்)

11. K – Kids & their names? : சாரி, ராங் நம்பர்.

12. L – Life is incomplete without? - தேடல்

13. M – Marriage date? நான் பேச்சுலர்ப்பா (நோட் திஸ் பாயின்ட்).

14. N – Number of siblings? மூன்று அக்கா ஒரு அண்ணா நான் தான்  கடைசி
15. O – Oranges or Apples? Oranges

16. P – Phobias/Fears? : நாக்கு 

17. Q – Quote? : Change yourself world change itself

18. R – Reason to smile? : காரணமே இல்லாமல் சிரிப்பதுதான் அதிகம்.

19. S – Season? வசந்தகாலம்

20. T – Tag 4 People? இது இதுல சொல்லேல ஆன வேறு பதிவுல சொல்லுவன்


21. U – Unknown fact about me? தெரியலயே.

22. V – Vegetable you don't like? பிடிக்கும் ஆன பிடிக்காது

23. W – Worst habit? தெரியவில்லை, தெரிந்ததும் சொல்கிறேன்.

24. X – X-rays you've had? : இது எதுக்கு?

25. Y – Your favorite food? அம்மாவின் சமையல் எல்லாமே. 

26. Z – Zodiac sign? வாசலில் வைப்பது (அதான் கும்பம்).


அ - அன்பிற்கு உரியவர்கள் - அனைவரும்.

ஆ - ஆசைக்குரியவர்: அம்மா

இ - இலவசமாய் கிடைப்பது: ஆலோசனை.

ஈ - ஈதலில் சிறந்தது: “ஈதல் எத்துணையும் ஆற்ற இனிது” – எங்கேயோ படித்தது.

உ - உலகத்தில் பயப்படுவது: என் நாக்குக்கு.

ஊ - ஊமை கண்ட கனவு: சொல்ல முடியாத அதேதான்.

எ - எப்போதும் உடனிருப்பது: மனசாட்சி

ஏ - ஏன் இந்த பதிவு: வேற வேலையில்ல 

ஐ - ஐஸ்வர்யத்தில் சிறந்தது: கல்வியும் செல்வமும்

ஒ - ஒரு ரகசியம்: கிட்ட வாங்க, சொல்கிறேன்.

ஓ - ஓசையில் பிடித்தது: குழந்தையின் பேச்சு

ஔ - ஔவை மொழி ஒன்று: ஊக்கமது கைவிடேல்.

ஃ - (அ)ஃறிணையில் பிடித்தது: இயற்கையின் எல்லாமே


அடுத்த பதிவில பாப்பம்
  
Read More

Monday 1 July 2013

// // 1 comment

சிங்கம் 2 (விமர்சனம் )

படம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போதிருக்கிறது.பில்லா-நாகராஜசோழன் எம் எல் ஏ-முனி-விஸ்வரூபம்-துப்ப்பாக்கி என்று அதே வரிசையில் இப்போது இயக்குனர் ஹாரியின் 'சிங்கம்'.

விஜய் வேண்டாமென்று நிராகரித்த கதைகள் வேறு நடிகர்கள் நடித்து ஹிட் ஆகியிருக்கின்றன.அப்படியான ஒன்று தான் சூர்யாவின் சிங்கம்.அதன் முதல் பாகம் வந்து ஹிட் அடிக்க,இந்தியிலும் அஜய் தேவ்கன்,காஜல் நடிப்பில் ரீமேக் ஆகி வெளியாகியது.அந்த வெற்றியை தொடர்ந்து,சிங்கம் பார்ட் 2 வெளிவந்திருக்கிறது.ஏற்கனவே படத்தின் ட்ரெயிலரில் சூர்யா அனைத்து சேனல்களிலும் மணிக்கு மூன்று முறை வந்து 'யார்லே..எலே வாங்கலே..." அப்பிடின்னு அரிவாவ கையில வைச்சு மிரட்டி அப்பாவி ஜனங்களை தியேட்டருக்கு வான்னு மிரட்டியிருந்தார்.எங்க போகாமல் விட்டால் வெட்டிவிட்டிடுவாரோன்னு பயந்து நானும் போயிட்டேன்.. அதன் பின்னர் நடந்தது என்ன?

ஆரம்பமே அமர்க்களம் தான்.ஒரு காலேஜுக்குள் புகுந்து ரவுடிக்கும்பல் ஒன்று அட்டகாசம் செய்துகொண்டிருக்கிறது.பொண்ணுங்க மேல கைவைக்கிறதும்,எதிர்த்து கேக்கிறவங்கள அடிச்சு நொறுக்கிறதுமா இருக்கும்போது,இத பாத்து பொறுக்கமுடியாத அஞ்சலி துரைசிங்கம் ஐயாவுக்கு(அதாங்க சிங்கம் பார்ட் 2) போன் போட்டு சொல்றாங்க.சர்ர்னு ஒரு பொலீஸ் ஜீப்ல வந்து இறங்கிறார் சூர்யா.அப்பிறம் என்ன? ஓட ஓட அடி..இடைக்கிட,உசரம் பத்தாம போக,பாஞ்சு பாஞ்சு அடிக்கிறார்...அதுக்கு 'பாஞ்சு அடிச்சா பதினஞ்சு டன் வெயிட்டா..'''அப்பிடின்னு ஒரு பஞ்ச் சொல்லி சமாளிச்சிக்கிறார்.பைட்டு சீன் முடிஞ்ச சந்தோசத்தில காலேஜ் பொண்ணுங்க கூட ஆட்டம் போடுறார்.அஞ்சலி சேர்ந்து ஆடுறாங்க.இத தூத்துக்குடில படமாக்கியிருக்காங்க.எல்லாரும் இவர் புகழ் பாடுறாங்க.'இட்ஸ் சிங்கம் டான்ஸ்"அப்பிடின்னு காலேஜ்ல ஆட்டம்போடுறாங்க.

சென்னை ரவுடிஸ் எல்லாரையும் ஆல்ரெடி போட்டு தள்ளினதால,இம்முறை கொஞ்சம் பெரிய ரவுடீஸ் கொண்டுவர வேண்டியது அவசியம் எண்டதால,கதைய கொஞ்சம் அரசியலோட சம்பந்தப்படுத்தி,ஆப்ரிக்கா வரைக்கும் கொண்டு போயிருக்கிறார் ஹாரி.கதை ஆப்ரிக்காவுக்கு போகுது இடைவேளைக்கு அப்புறமா தான்.'ஐ ஆம் வெயிட்டிங்க்' அப்பிடின்னு துப்பாக்கில விஜய் பஞ்சு வைச்ச மாதிரி 'வாங்கலே......" அப்பிடின்னு ஆப்ரிக்க தீவிரவாதிகளுக்கு அடித்தொண்டையில சவால் விடுறார் ஈஸ்வரசிங்கம்.

சிங்கம் முதல் பாகத்திலேயே அனுஷ்கா மேட்டர்,கல்யாணம் கட்டிக்கிற அளவுக்கு வந்திட்டதால,இந்த பார்ட் 2'ல புதுசா ஹன்சிகாவ இறக்கியிருக்காங்க.ஹன்சிகா கொஞ்சம் மெலிஞ்சு காலேஜ் பொண்ணா வர்ராங்க.அனுஷ்கா இடைவேளைக்கு முன்னாடி கொஞ்ச சீன்லயும், இடைவேளைக்கு அப்புறமா க்ளைமாக்ஸ்லயும் ஒருதடவை வர்றாங்க.அதை தவிர படம் முழுக்க ஹன்சிகா தான் ஆட்சி பண்றாங்க.அனுஷ்காவுடன் பாடல் காட்சிகளில் துள்ளி துள்ளி நடிச்ச சூர்யா ஹன்சிகா எண்டதால,தரையிலயே நின்னு நடிக்கிறாப்லே.ஹன்சிகாவோ, அனுஷ்காவோ,ரெண்டு பேருமே சூர்யாவோட அம்மா மாதிரி தான் இருக்காங்கப்பா..!

நம்மகூட ஜாலியா இருந்த பய இப்போ குளுகுளு ஹன்சிகாவ கண்டவுடன அந்த பக்கம் தாவிடிச்சே அப்பிடின்னு பீலிங்ல இருந்த அனுஷ்காவுக்கு ஒரு டெமோ குடுத்து விளக்குறார் சூர்யா.அத கேட்டிட்டு,வழமையான மோட்டு ஹீரோயின் மாதிரி 'உங்கள புரிஞ்சுக்கிட்டேங்க..ஐ லவ் யு சோ மச்" அப்பிடின்னு உருகுறாங்க அனுஷ்கா..அட இதில்லாம் எதுக்குன்னு கேக்கிறீங்களா?அடுத்த பாட்டு போடுறதுக்கான சிச்சுவேசனாம்!!

இடைவேளைக்கு அப்பிறமா ஆப்ரிக்கா போகனும்கிறதால அந்த இடத்தில ஹாரி ஒரு பஞ்ச் வைக்கிறார்..'ஊரு விட்டு ஊரு..நாடு விட்டு நாடு...கண்டம் விட்டு கண்டம் குறிக்கோளோட பாஞ்சு தாக்கிற சிங்கம் டா' அப்பிடின்னு.ஒவ்வொரு பஞ்சும் பறந்து பறந்து கையால ஓங்கி எதிலயாவது அடிச்சு தான் சொல்றார் சூர்யா.ஏன்னா,அப்போதான் நங்கூரம் மாதிரி நச்சின்னு மனசில பதியுமாம்.

கண்டம் விட்டு கண்டம் தேடி போற ஈஸ்வர சிங்கம் அயன் படத்தில கருப்பனுக கூட டீல் வைச்சிக்கிற மாதிரி டீல் வைச்சு மெயின் வில்லனான முகேஷ் ரிஷி'யயும்,தென்னாபிரிக்க நடிகர் ஒருவரையும் கண்டுபிடிக்கிறார்.க்ளைமாக்ஸ் பைட் நைஜீரியால நடக்குது.

இசை தேவிஸ்ரீ பிரசாத்.பெரிதாக வேலையில்லை இவருக்கு.சிங்கம் ஒன்ரின் பாடல்களுக்கு எக்ஸ்ராவா ரெண்டு ஸ்வரத்த போட்டு பாட்டை ரிலீஸ் பண்ணியிருக்காப்லே!'காதல் வந்தாலே காலிரண்டும் தன்னாலே'பாடலை போலவே ஒரு பாடல் அதே போல செட் போட்டு அதே போல குனிஞ்சு குனிஞ்சு ஆடியிருக்காப்லே சூர்யா!"கன்னுக்குள்ள கண்ண வைச்சு என்ன சுடாதை"எண்ட டூயட் தான் அது.

விவேக்கு முதல் பாகத்தில எரிமலை எப்படி பொறுக்கும்னு ஆட்டுப்புழுக்கைய ஆத்தில கரைச்சு பர்போம்மன்ஸ் காட்டியிருந்ததால,இந்தவாட்டி ப்ரொமோசன் குடுத்து இன்ஸு ஆக்கியிருக்காங்க,அதாம்பா இன்ஸ்பெக்டர்.நாடுவிட்டு நாடு,கண்டம் விட்டு கண்டம் பாயும்போது தமிழ் நாட்டில சிங்கத்துக்கு உதவி பண்றது நம்ம எரிமலை தான்! 

"ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரைக்கும் காத்திருக்குமாம் கொக்கு"காத்திருந்து கண்ணி வைச்சவன பிடிச்சிருக்கேன்..ஒரு பய தப்பமுடியாது"அப்பிடின்னு சொல்லும்போதாச்சும் 'இது தப்பாச்சே" அப்பிடின்னு எந்திரிச்சு ஓடியிருக்கனும்..முதல் பாகத்தில தமிழ் நாட்டு எதிரிகளையும்,இரண்டாம் பாகத்தில சர்வதேச எதிரிகளையும் போட்டு பந்தாடியிருக்கிறதால,மூணாவது பாகத்தில ஏலியன்ஸ் கூட பைட்டு வைக்கலாம்னு ஹாரியும் சூரியாவும் ப்ளான் போட்டிருக்காங்கப்பா.அதுக்கு ஒரு ட்ரெய்லர் விட்டு அதில "ஊரு விட்டு ஊரு,நாடு விட்டு நாடு,கண்டம் விட்டு கண்டம்,கெரகம் விட்டு கெரகம் பாஞ்சு தாக்கும் அப்பலோ சிங்கம்டா" அப்பிடின்னு பஞ்ச் வைப்பாரு.'வாங்கலே.." அப்பிடின்னு வாண்டட்டா ஏலியன்ஸ இங்க கூப்பிடுவாரு..அதுக்கு முன்னாடி நாம வேற கெரகம் ஒன்னுக்கு போயிடணும்பா..! 

'போங்கலே................!"









Read More

Saturday 11 May 2013

// // Leave a Comment

பொண்ணு பாக்க போறிங்களா இத படிங்க

நாங்களும் quary எழுதுவமில்ல........

QUERY


CREATE PROCEDURE MyMarriage (
BrideGroom Male (25) ,
Bride Female(20) )AS
BEGIN

SELECT Bride FROM Beautiful_ Brides
WHERE FatherInLaw = 'Millionaire'

AND HouseStatus ='ThreeStoreyed'
AND BrideEduStatus IN (B.TECH ,BE ,Degree ,MCA ,MiBA)
AND Sisters =Yes Group by brothers,bride,car
Having Count(Brothers)=0
And Count(Car) > 10

SELECT Gold ,Cash,Car,BankBalance 
FROM FatherInLaw
UPDATE MyBankAccout 
SETMyBal = MyBal + FatherInLawBal

UPDATEMyLocker 
SET MyLockerContents = MyLockerContents + FatherInLawGold

INSERT INTO MyCarShed VALUES('BMW')
END

GO
Read More