Thursday 8 January 2015

// // 3 comments

மஹிந்தவா.......மைத்திரியா......

நண்பர்களே....

இன்றைய நாள் நம்  அது தாங்க இலங்கை நாட்டின் ஜனாதிபதி தேர்தல் எந்தவொரு அமர்கலமுமின்றி சுமுகமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது.
இப்பொழுது அனைவரது எதிர்பார்ப்பும் தேர்தல் முடிவுகளுக்காய் காத்திருக்கின்றன. அதனால் என்னுடைய அலட்டலையும் பதிவேற்ற விரும்புகிறேன்.
                             
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி ஏற்றார்  . அவர் பதவி ஏற்பதற்கு முன்னும், பின்னும் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று யாரும் அறிந்திருக்கிறீர்களா?
 கவலைப்படாதீர்கள் எனக்கும் தெரியாது தான்,  இந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தால் அனைத்தும் தெரிய வரும், அப்பொழுதாவது அறிந்துகொள்வோம்.

மைத்திரி பாலசிறிசேனவின் 100 நாட்ள் திட்டத்தை பற்றி அறிவீர்களா?
அவர் செய்யப்போகும் முதலாவது செயலே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகும்.

மாற்றம் ஒன்றே மாறாதது......
பொறுத்திருந்து பார்ப்போம் மாறுகிறதா இல்லை அதே குட்டைக்குள் மட்டை 

அடிப்பதா என்று......

இதில் நான் எதற்கு சொத்து மதிப்பினை குறிப்பிடுகிறேன் என்று யோசிப்பவர்கள் காத்திருக்கவும் பதில் மற்றொரு பதிவில் தருகின்றேன் 

3 comments:

  1. இப்பொழுது எமக்கு தேவையானது அவர்களின் சொத்து மதிப்பு இல்லை. எமது தமிழ் மொழி மற்றும் தமிழ் இனத்தின் மதிப்பும், மகத்துவமும் எப்படி இருந்தது இப்போ எப்படி இருகின்றது இனி எப்படி இருக்கும் என்பதுதான். இதை எமது அரசியல் பேசும் பிரதிநிதிகள் சிந்திப்பதில்லை நாமாவது சிந்திப்போம்.....

    தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா அது அந்த காலம்
    தமிழன் என்று சொல்லுடா சிறையில் போய் நில்லுடா இது இந்த காலம்
    இனி???

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது 100% சரியான விடயம் ஆனால் நான் இங்கு சொத்து மதிப்பினை குறிப்பிட்டதன் காரணம் அடுத்த பதிவில் நிச்சயம் குறிப்பிடுகின்றேன்..

    //இதை எமது அரசியல் பேசும் பிரதிநிதிகள் சிந்திப்பதில்லை //

    இதை நான் முழுமையாக ஏற்கின்றேன். என் பார்வையில் இதன் காரணம் பதவிகள் இன்னும் துடிப்புடனும் தமிழ் பற்றுடனும் இருக்கும் இளைய சமுதாயத்திடம் கொடுக்கப்பட வேண்டும். இப்போது காணப்படும் 60 வயதை தாண்டியவர்களிடம் அனுபவம் உள்ளது ஆனால் அதை விட ஆசை கூடியுள்ளது

    //தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா அது அந்த காலம்
    தமிழன் என்று சொல்லுடா சிறையில் போய் நில்லுடா இது இந்த காலம்
    இனி//

    சூப்பர் ஜி சரியான கேள்வி ?? காலம் பதில் சொல்லடும்???Menaan Soundararajan

    ReplyDelete