Wednesday 27 March 2013

// // Leave a Comment

ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன்?


இந்த தொடர் ஜோதிடம் மூட நம்பிக்கையா அல்லது  அறிவியலா என்று ஆராயப்போவதில்லை  ஆனால் இது ஜோதிடத்தில் இருக்கும் சில மூட நம்பிக்கைகளையும் ஏன் ஜோதிடம்  பல நேரங்களில் பொய்க்கிறது  எனதைப் பற்றியும் பொய்க்கிறது எனத் தெரிந்தும் எப்படி இத்தனை காலம் அது நீடித்துவருகிறது என்பதையும் .உலகின் பெருவாரியானவர்களின் நம்பிக்கையை பெற்ற இந்த கலை ஏன் அத்தனைத்தூரம் மக்களுக்கு பயன் இல்லாமல் இருக்கிறது என்பவைகளைப் பற்றி  ஓரளவிற்கு தெளிவாக உரக்க சிந்திக்க இருக்கிறோம் 

முதல் உண்மை:-

ஜோதிஷம் எனும் ஜோதிடம் நாம் நினைப்பது போல் மனிதனின் எதிர்க்காலத்தை தெரிந்து கொள்வதற்காக ஏற்ப்படுத்தப்பட்டதல்ல .

ஜோதிஷம் என்றால் ஒளியைத்தேடி என்றுதான் பொருள் .இந்த பொருளுடைய சொல்லுக்கும் மனிதனின் எதிர்க்காலத்திர்க்கும் எங்கே தொடர்பு இருக்கிறது. மனித இனத்தின் உயர் நூல்கள் உயர் சாஸ்திரங்கள் அத்தனைக்கும் குறிக்கோள் ஒன்றுதான். *அது மனிதனை ஒரு நிலை உயர்த்துவது .*அவனின் பரிணாமத்தின் அடுத்தப் படிக்கு அழைத்து செல்வது *பின் இறுதியிலே பிரும்மத்தை  அறிந்து அதனுடன் இணைவது இவைகளே ஒரு உயர் நூலினின் லட்ஷனங்கள் இவைகளுக்கு உதவாத எந்த நூல் படிப்பதும் பொழுது போக்குவது ஒன்றே  .
நாம் வந்த வேலையை பலர் மறந்துவிடுகின்றனர் வந்த வேலைப் பார்க்கவே நேரம் பற்றாது .

இதில் வெட்டிப் பொழுது போக்குவதுவேறு தேவையா ஜோதிஷம் என்பது வேதத்தின் ஆறு அங்கங்களில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது .வேதத்தின் பயன் எதுவோ அதுவேதான் ஜோதிட சாஸ்திரத்தின் பொருளும் ஆகும் .அறிவைத்தேடும் பயணத்தில் ஜோதிடமும் ஒரு கருவியாகும் இதில் மனிதனின் ஆன்மீக பயணத்திற்கு வானசாஸ்திரத்தை எங்கனம் பயன் படுத்துவது என்பதன் விளக்கமும் அறிவும் தான் உள்ளது .இது குறித்து ரிஷிகளும் சித்தர்களும் ஆயிரக்கணக்கான  ஆண்டுகளாக இயற்கையை ஊன்றி கவனித்து இயற்கையின் மாறுதல்கள் பூமியை எவ்வாறு பாதிக்கிறது என கண்டுணர்ந்து அவைகளில் கண்ட உண்மைகளை ஒரு சாஸ்திரம் ஆக்கினார்கள் .


வானியல் : வெளியில் தோன்றும் கிரகங்கள் மற்றும்  நட்சத்திரங்களை இனம் கண்டு வகைப் படுத்துவது. அவற்றின் இயக்கம் மற்றும் சுழற்சி பற்றி அறிவது, தட்பவெப்ப நிலை மாற்றங்களில் வான் பொருட்களின் தாக்கம், கிரகணங்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவற்றைப் புரிந்து கொள்ளுதல் முதலியவை. ஒருபகுதி .இகலை புரிந்துகொள்ள கணிதம்  மேம்பட்டது  .இது ஒரு அங்கம் இதில் திரி கோணம்  பல உயர் கணிதங்களும் வளர்ந்தன இத்தகைய கணித அறிவின் மூலமே கோள்களின் இயக்கத்தியும் அசைவுகளையும் பண்டைய அறிஞர்கள் கண்டறிந்தனர் .
 ஜோதிடத்தின் முக்கிய அடுத்த அங்கம் கால அளவிடுதல் முறை
 காலக் கணக்கு முறைகள்   தாங்கள் காணும் இயற்கை நிகழ்வுகளின் அடிப்படையிலேயே உண்டாயின.  பன்னிரண்டு ராசிகள்,  சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை சுழற்சியைக் கொண்டு நாட்களை அளவிடுதல் போன்றவை.  பிறப்பு, இறப்பு நாட்கள், பருவங்கள், பண்டிகைகள் இவை அனைத்தும் இந்தக் கால அளவு முறையிலேயே குறித்து வைக்கப் பட்டன. 
இத்தகைய பாரம்பரிய அறிவு பஞ்சாங்கம் என்ற பொதுப் பெயரிலே தொகுக்கப்பட்டது
இவ்வாறு பிருமத்தைத் தேடும் பயணத்திற்காக முறைபடுத்தப்பட்ட வானியல் அறிவும் கணித அறிவும்  பல  நூற்றாண்டுகளாக கவனித்து பதிவு  செய்யப்பட பிரபஞ்ச நிகழ்வுகளும் அது குறித்த ஆராயய்ச்சியின் ஒட்டு மொத்த பெயரே ஜோதிடம் என்பதாயிற்று .
 
தற்போது கூடபத்தில்  விண்ணியல் ஆராய்ச்சியின் போது அந்தகைய ஆராய்ச்சின் போக்கிலே வேறுபல கண்டுபிடிப்புகளும் ஏற்ப்படும் அவைகள் பல ஆயுதங்கள் நாம் செய்வதற்கும்   இன்னும் சொல்லப்போனால் மனிதனின் செயற்கை கால் செய்வதற்கு கூட தொழில் நுட்பம் விண்வெளி ஆராயய்சி செய்யும் போது கிடைத்ததாக அப்துல் கலாம் கூறியிருக்கிறார்
இவ்வாறே ஜோதிடம் எனும்   வானியல் அறிவும், கணித அறிவும், பல நூற்றாண்டுகளாகத்
திரட்டப் பட்ட பிரபஞ்ச நிகழ்வுகள் இவைகளை உள்ளடக்கிய ஒரு பெரும் அறியியல் திரட்டில்
விளைந்த ஒரு சிறிய பொருள்தான் நாம் இப்போது கூறும் எதிர்காலத்தை பற்றி மட்டும்
கூறுவதாக நினைக்கும் ஜோதிடம் ஒருகாலத்தில் ஒவ்வரு பிராமணரும் ஜோதிடம் அறிந்திருக்க
வேண்டிய கட்டாயம் இருந்தது .காலப்போக்கில் இது எதிர்காலத்தை கூறும் ஒரு கலையாக இதையே தொழிலாகக் கொண்ட சிலரால் மாற்றியமைக்கப்பட்டது

எனவே ஜோதிஷம் அல்லது ஜோதிடம் என்பது வேதத்தில் ஆறு அங்கத்தில் ஒன்று .சித்தர்களால் அர்த்தத்துடன்  பேணி வளர்க்கப்பட்ட கலை .ஆனால் எதிர்க்காலம் அறிந்து கொள்ள மட்டும் அல்ல .இதின் பல உபயோகத்தில் எதிர்க்காலம் அறிவதும் ஒன்று .ஆனால்  தற்போது இந்த சாஸ்திரம் இந்த எதிர்க்காலம் அறிவதிலேயே தேங்கிப் போய் நின்றுவிட்டது .காரணம் அனைவருக்கும் தெரிந்ததே .

0 comments:

Post a Comment