Saturday 23 March 2013

// // Leave a Comment

நான் படித்து ரசித்த சில புத்தகங்கள்

நான் படித்து ரசித்த சில புத்தகங்கள் பற்றிப் பகிர்ந்து கொள்வதற்கு இப்படி ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த blogger ற்கு மனமார்ந்த நன்றி. நான் படித்து ரசித்த புத்தகங்களைப் பட்டியலிடுவது இன்னும் எளிதாகப் போய் விட்டது. சிந்து பைரவி படத்தில் ஒரு வசனம் வரும். நாமளா பாடறது ஒரு சுகம், சங்கீதம் கேக்கறது ஒரு சுகம். அதே மாதிரி சங்கீதத்தைப் பற்றி பேசுவதும் ஒரு சுகம் என்று சுஹாசினி சொல்லுவாங்க. அதே போல், புத்தகங்களைப் படிப்பது ஒரு சுகம், அதைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதும் ஒரு தனி சுகம். அதனால் தான் அலட்டல்களில் அவ்வப்போது என்னைக் கவர்ந்த சில புத்தகங்களைப் பற்றி இடுகைகள் எழுதியிருக்கிறேன். சரில்ல, ஓவரா பீத்திக்காதே. விஷயத்துக்கு வா’ன்னு சில பேர் கூவறாங்க.

சில புத்தகங்கள் வாழ்வின் யதார்த்தங்களைப் புரிந்து கொள்வதற்கு ரொம்பவே உதவியாயிருந்திருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், சுவாமி சுகபோகானந்தா எழுதிய மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் புத்தகம். வாழ்வின் மிகவும் விரக்தியான, தனிமைப் படுத்தப்பட்ட காலகட்டத்தில் மிகவும் தன்னம்பிக்கையூட்டிய புத்தகம். அதேபோல் காஞ்சி காமகோடி ஸ்ரீ பரமாச்சார்யாள் அவர்களின் பேச்சுகளின் தொகுப்பான தெய்வத்தின் குரல்.


The book you have read more than once:
ஒரு தடவைக்கு மேலாக ஒரு புத்தகத்தை வாசித்தது:



என்னடா இது மேஜர் சுந்தர் ராஜன் மாதிரி ஆங்கிலத்தில் சொன்னதை இன்னொரு முறை தமிழிலே சொல்கிறானே என்று நினைக்கறீங்க. பரவாயில்லை, நினைத்துவிட்டுப் போங்கள் :-)


அது பொன்னியின்செல்வனே மூன்று தடவை முழுவதுமாக படித்து முடித்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம், குந்தவை வரும் பாகங்களை மீண்டும் படிப்பேன்.

ஆங்கிலத்தில் மீண்டும் படிக்க வைத்த புத்தகம், டான் பிரவுணின் டிஜிடல் ஃபோர்ட்ரெஸ். விறுவிறுப்பாக இருந்ததால், விடிய விடிய படித்து விட்டு, முழுவதும் புரிவதற்காக மீண்டொருமுறை படித்தேன்.


One book you would want on dessert island:
ஒரு தனித்தீவில் நீங்கள் எடுத்துச் செல்ல நினைக்கும் புத்தகம்


பட்டுக்கோட்டை பிரபாகரன் மற்றும் சுஜாதாவின் எந்தவொரு நாவலானாலும் சரி. தமிழில் எழுதும் எவருக்கும் இவர்களே ஆசான். தைரியமாகச் சொல்லலாம்.

One book that made you laugh:
சிரிக்கவைத்தவொரு புத்தகம்:


ஆங்கிலத்தில் நகைச்சுவையான புத்தகம் என்றால், டிண்டின் காமிக்ஸ். அதுவும், கேப்டன் ஹேடக் எங்கேயாவது போய் அடிபட்டுக் கொண்டு, Billious of Blue Blistering Barnacles, Thundering Typhoons என்று கத்துவதைப் பார்த்தால் குபீரென்று சிரித்து விடுவேன்.

தமிழில் படித்ததில் சிரித்து வயிறு கிழிந்தது, கிரேஸி மகன் எழுதிய, கிச்சா. கிச்சா அடிக்கும் லூட்டியில் வயிறு அருந்தே போய்விட்டது. சாவி எழுதிய வாஷிங்கடன் திருமணமும் அதே ரகம். சில இடங்களில் மட்டும் கிச்சு கிச்சு ரகம்.

One book that made me cry:
அழவைத்த ஒரு புத்தகம்:


நல்லவேளை இது வரை அப்படியேதும் புத்தகம் படித்ததில்லை.


One book that you wish had never been written:
இந்த மாதிரி ஒரு புத்தகத்தை ஏன் எழுதினார்கள் என்றொரு புத்தகம்

பொன்னியின் செல்வனைப் படித்து முடித்து விட்டு, அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து கொண்டிருந்தபோது, அடுத்து என்ன நடந்திருக்கும் என்ற ஆவல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நேரம் அது. பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து, அதன் அடிப்படையில் யாராவது எழுதியிருக்கிறார்களா, என்று தேடியதில் விக்கிரமன் எழுதிய நந்திபுரத்து நாயகி பற்றி அறிந்து கொள்ள நேரிட்டது. அந்த நந்திபுரத்து நாயகி, குந்தவை என்றும் அவளை வைத்தே மூன்று பாகங்கள் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிந்ததும், அந்தப் புத்தகத்தை தேடாத இடமில்லை. கடைசியில்  புத்தகம் வாங்கி அன்றே  புத்தகம் செம கடி. வாங்கி விட்டோமே என்ற எண்ணத்திற்காகவே படிக்க வேண்டியதாப்போச்சு.

One book you wish you had written:
நான் எழுதியிருக்க வேண்டும் என்றெண்ணிய புத்தகம்


சுஜாதாவின் சில நாவல்களைப் படிக்கும் போது, இப்படியொரு கதைகளத்தைக் கொண்டு நமக்கேன் கற்பனை வர மாட்டேங்குது என்ற ஏக்கம் மட்டுமே வரும்.


One book you are currently reading
இப்போது படித்துக் கொண்டிருக்கும் ஒரு புத்தகம்:


இப்போது மூன்று புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன். விவேகானந்தரின் வாழ்க்கை சரித்திரம், சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள், ஜிம் கரி எழுதிய, Men are From Mars, Women Are From Venus.


One book you’ll recommend
நான் பரிந்துரைக்கும் ஒரு புத்தகம்


எதைச் சொல்ல எதை விட?

.
.
.
.
.
.

அடுத்த பதிவுல பாப்பம்

0 comments:

Post a Comment