Saturday 31 December 2022

// // 1 comment

2022ம் நானும்.

 வணக்கம், ரொம்ப காலம் கழிச்சு திரும்பவும் எழுதணும் எண்டு வந்து இருக்கன், காரணம் பாத்தா எத்தனையோ விஷயம் யாரிட்டையாவது சொல்லணும் எண்டு தோணும் ஆனா அப்பிடி சொல்லும்போது அவங்க கருத்துக்கள் எங்க என் முடிவுகளில செல்வாக்கு செலுத்திடுமோ எண்ட பயம்  எப்பயுமே இருக்கும். அப்பிடி சொல்லாம சொல்லாம சேர்த்த விடயங்கள் இப்போ சேர்ந்து ஒரு பெரிய பூதமா முன்னுக்கு நிக்குது, அது தான் யாருமே வாசிக்காட்டியும் இங்க சொல்லுவம், எண்டு வந்து இருக்கன், பாப்பம் இனி மாசத்துல ஒரு தரமாச்சும் ஏதும் எழுத பாக்கிறன். இப்ப வாங்க 2022 எனக்கு என்ன எல்லாம் சொல்லி தந்த, என்ன எல்லாம் பண்ணினான் எண்டும் அதே மாதிரி 2023ல என்ன செய்ய பிளான் இருக்கு எண்டும் பாப்பம்



 2022 தொடங்கேக்க மிக சிறப்பா தொடங்கினாலும் முடியும் போது என்ன பண்ணுற எப்பிடிச்சும் போகனும் எண்ட முடிவுக்கு தான் கொண்டு வந்து விட்டு இருக்கு. எனக்கு நினைவு தெரிஞ்சதில இருந்து இந்த வருஷம் மாதிரி, மன வருத்தம், கவலை, தனிமை, என்ன பண்ணுற எண்டு கூட தெரியாம இருந்த எல்லாம் ஒண்டு சேர்ந்து வந்தா இந்த வருஷம் தான். 

நான் பார்த்ததுக்குள்ளேயே மிக Perfectஆனா ஆள் யாரென்று பாத்தா என்க அப்பா தான், என்க வீடு அவளவுக்கு வசதியான வீடா எல்லாம் இருக்கேல்ல, ஆனா எங்க எல்லாருக்கும் என்ன எல்லாம் தேவையோ அது எல்லாம் கிடைக்க வழி செய்தவர் அவர் தான், எப்பயுமே நாங்கள் எடுக்கிற முடிவுகள் சரியா இருக்கும் எண்டு எங்களுக்கு உணர்த்தியவர். நீ நல்ல எண்ணத்தோட நினைத்து செய்யிற எல்லாம் எப்பயுமே பிழையானது எண்டு சொன்னவர், He is the one of the disciplined person i ever see. நாங்க எல்லாம் இப்போ இப்பிடி ஒரு நல்ல நிலைமையில இருக்கிறம் எண்டா அதுக்கு எல்லாம் ஒரே காரணம் அவர் தான், ஆனா துரதிஸ்ரவசமா இந்த ஆண்டு எங்களை பிரிந்து இறைவனடி சேர்ந்தார். சில விடயங்கள் எங்களை எப்பிடி பாதிக்குது எண்டு சொல்ல ஏலாது. காட்ட ஏலாது ஆனா அதன் தாக்கம் கூடவா இருக்கும். அப்பிடி தான் இதுவும். நான் செய்யிற காணொளிகளா இருக்கட்டும், இல்லை என்னவா இருக்கட்டும், நானா காட்டாட்டியும், அப்பாவா போய் அது எப்பிடி இருந்த எண்டு சொல்லுவார், இப்போ இனி நான் எது செய்தாலும் அப்பிடி நடக்கா எண்டு நினைக்கும் போது அடுத்த விஷயத்தில கவனம் செலுத்தவே தோணல.  என்கிட்ட நேரடியா சொல்லாட்டியும் அம்மாட்ட சொல்லுவார் பாரு அது செய்தான் நல்லா இருந்த எண்டு எல்லாம். இனி அவை எல்லாம் நடக்கா காரியம் ஆகிட்டு. அவரின் கடைசி நிமிடங்களில நான் நேர பக்கத்தில தான் நிண்டன், எங்களுக்கு மிக நெருக்கமானவர் எம்மை விட்டு பிரியும் அந்த நிமிடங்கள் இலகுவானவை இல்லை, To be Frank it will bring you PTSD, we will think that it is not that much a issue, but as the one in that phase i can definitely say it is not easy to deal with and there will be no one you can share to understand what you experience and ongoing

இந்த பிரிவு, 2022ண்ட பிற்பகுதிய என்ன செய்யிற எண்டே யோசிக்க வச்சுது. அதில இருந்து தப்பிக்கிறத்துக்கு எத்தனையோ விடயங்களை முயற்சித்தன், வழமையா மன குழப்பங்கள் இருந்தா ஒரு சின்ன பயணம் சரி செய்யும், இந்த முறை ஒன்றுக்கு இரண்டு பயணகள், ஆனா எந்த பயனும் கிடைக்கவில்லை, பல புது விடயங்களை முயற்சி செய்து அதுல கூட கவனம் செலுத்தினா சரியா இருக்கும் எண்டு பாத்தா, மனம் அதுல செய்யவும் விடல இதுவும் எதோ ஒரு விதத்தில PTSD தாக்கம் செலுத்தி கொண்டே தான் இருந்த, கடைசியா இதுக்கு ஒரு தற்காலிக தீர்வா கொண்டு வந்த என்னை சுத்தி பலர வச்சு இருக்கும் போது அது மனம் வேறைய பற்றி யோசிக்காம இருக்கு, ஆனா இது தான் இந்த problemஆஹ taggle பண்ற வழியா என்டா இல்லை, எதோ வேலை செய்து எண்டு செய்யிறன். பாப்பம் எவ்வளவு காலத்துக்கு எண்டு. 

இது மட்டும் இல்லாம வாழ்க்கேல ஒரு தரம் மட்டும் வாற எண்டு நான் நினைக்கிற ஒண்டு "காதல்" That Special Person ஒருவராக தான் இருப்பார் எண்டு நம்பிறவன் நான் ( இது தனிப்பட்ட கருத்து) கிட்ட தட்ட 8 வருடங்களாக தொடர்ந்த உறவு எண்டு சொல்லலாம், சிறிய சண்டைகள், எத்தனையோ நினைவுகள், கற்பனைகள் எண்டு கட்டிய மளிகை அது, ஆனால் எனது தவறு, எனது நிலையற்றதன்மை, எனது பிள்ளைகளால் உடைத்து எறிந்தேன் இந்த வருஷம். என் பிளைகளால் இன்னொருவரின் மனதில் நீங்கா வடுக்கள். இதன் பின் யாரிடமும் ஆகலும் நெருக்கமாய் இருக்க கூடாது என்ற முடிவு, நானே வேலியினை போட வேண்டிய கட்டாயம், ஏனெறால் எப்போதும் காயப்படுத்த கூடாது என்று நினைத்த ஒருவரையே இப்படி வடுக்களை கொடுத்தேன் என்றால். நண்பர்கள், கூட பயணிக்கும் தோழர்களுக்கும் இதே போல கவலைகள் குடுத்து விடுவேனோ என்ற பயம். அதனால் பலரிடம் இருந்து ஒரு இடைவெளி. எனக்கு வலித்தாலும் ஒரு நீண்ட பயணத்தில் இது தான் சரியாக இருக்கும் எண்டு நினைக்கிறன். 

நிறைய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பையும் இந்த வருடம் ஏற்படுத்தி தந்திருக்கிறது. அது மட்டும் இல்ல காணொளி செய்வதையோ, வாசிப்போ, தேடலோ எல்லாமே மிகக்குறுகிய அளவில் ஒரு சின்ன வட்டத்துக்குள் தேங்கவிட்டுவிட்டு உட்கார்ந்திருக்கிறேன். இதையெல்லாம் விட்டுட்டு நான் ரொம்ப தூரம் போயிட்டனோ எண்ட feel அவ்வளவு emptiness அ கொடுத்திருக்கு. பல நேரங்களில் "நான் என்ன செய்துகொண்டிருக்கிறன்" எண்ட கேள்வி மிகப்பெரிய சோர்வை தந்திருக்கிறது.

இவை மட்டும் இல்லாமல் சில புது முயற்சிகள் அதுல பல தோல்விகள் + பல வெற்றிகள். சில நல்ல நண்பர்களின் வருகைகள். பலரின் பிரிவுகள்.

லூசன், கோமாளி, நாகரிகம் தெரியாதவன், முரடன் என்ற பட்டங்கள் சேர்ந்தே வந்த வருடம். ஆனாலும் இப்பிடி இருக்கிறவனையும் அண்ணா என்று அழைக்க சில தம்பி, தங்கையர் 🙂

இந்த வருஷம் எப்பிடி எல்லாமோ போச்சு, என் கஷ்டங்களை ரொம்ப கதைச்சிட்டன். பாப்பம் அடுத்த வருஷம் எப்பிடியாவது என்னை நானே திருத்திக்க பாக்கிறேன்.

2023ல ஒரு 4-5 திட்டங்கள் இருக்குது, யாழ்ப்பாணத்தில இல்லாத புது விடயங்கள். பாப்பம் அதும் 3 ஆவது சரி பண்ணனும். இப்போ 100KGஇல் இருக்கன் அதை ஒரு 75-80KGகுள்ள கொண்டு வரணும். சரியான ஒரு Team பில்ட் பண்ணனும் எத்தனையோ வருடங்களாக முயற்சிக்கிறன் 2023ல அது சரி வரும் போல தெரியுது, 2-3 பேர் ஏற்கனவே சரியாக சேர்ந்து இருக்கம் எண்டு நினைக்கிறன் ஒரு 10 பேர் கொண்ட teamஆ வரணும். பாப்பம். Yarl Samayalல வித்தியாசமா கொஞ்ச standerd உயத்தி 100K க்கு கொண்டு போகணும். அதே போல Siva;s View வாரம் 1 full காணொளி போடனும் 4 shots போடணும். மாசம் ஒரு பயணம் போகணும். இவ்வளவும் தான் இப்போ சொல்ல கூடிய விடயங்கள் பாப்போம். எதனை சரி வருது எண்டு.

இப்படி ஒரு வித்தியாசமான ஆண்டினை, வித்தியசமாக்கிய நண்பர்கள். எப்போதும் எனக்கு பக்க பலமாக இருந்த உறவுகள், சுவாரசியம் ஆக்கிய அனைவருக்கும் நன்றிகள். 2023இனை சேர்ந்து சந்திப்போம்.

1 comment:

  1. உங்கள் எண்ணம் போல் 2023 சிறக்கும் அண்ணா...

    ReplyDelete