Sunday 5 September 2021

// // Leave a Comment

நானும் யாழ் சமையலும்.

எத செய்ய தொடங்கினாலும் ஒரு 6 மாசத்தோட அத விட்டுட்டு இன்னொண்டு பக்கம் போறவன் நான். (சாத்தியமா இது நல்ல பழக்கம் இல்லை :p ) சிவாவின் அலட்டல்களில எழுதினது ஆகட்டும், Siva Feed la எழுதினது ஆகட்டும், Podcastல கதச்சதாகட்டும், Siva's View சனலில காணொளி செய்ததாகட்டும், இல்ல டிக்டாக்ல சின்ன சின்ன tech சம்மந்தமான காணொளி போட்டதாகட்டும் இப்பிடி இந்த லிஸ்ட் பெருசா போகும், இது கம்ப்யூட்டர் சம்மந்தமா மட்டும் இல்ல வெளி ப்ரொஜெக்ட்ஸ்க்கும் சரியா பொருந்தும் ஒரு 6 மாசத்துல தொடங்கினத அப்பிடியே விட்டுட்டு அடுத்தத தொடங்கிற ஆள் நான். இது என்ன சுத்தி இருக்க பலருக்கு தெரிஞ்ச ஒரு விசயம். 

இப்பிடி  இருந்த நான் 2016ல கொழும்புல எங்க நல்ல டேஸ்ட் ஆனா சாப்பாடு கிடைக்கும் எண்டு வித்தியாசம் வித்தியாசமான கடைக்கு போறது, ஆனா போன 90% கடையிலையும் ( சில கடைகள் செம சாப்பாடு இருக்கும்)  தூள் குழம்பு, டேஸ்ட் எண்டாலே என்ன எண்டு தெரியாத சாப்பாடுகள் தான் கிடைக்கும், அப்ப தோணின ஒரு விஷயம் தான் அட யாழ்பாணத்து சாப்பாடுகள் ரொம்ப நல்லா இருக்குமே அத வீடியோ எடுத்து போட்டா என்ன எண்டு  ஆனா அப்ப எனக்கு எடிட்டிங்கும் தெரியாது வீடியோவும் வடிடா எடுக்கவும்  தெரியாது, ( இப்ப மட்டும் தெரியுமா எண்டு கமெண்ட்ல கேக்க பிடாது, அது வேற டிப்பாட்மென்) அப்ப அண்டைக்கே போய் யூடுப் சேனல் தொடங்கியாச்சு. அடுத்தது பெயர் வைக்கணும், என்ன பெயர் வைப்பம் யாழ்ப்பாணத்து உண்வு தானே போட போறம் அப்ப யாழ்ப்பாணம் வேணும், அதுவும் சமைக்கிறத தானே போடா போறம் அப்ப யாழ்ப்பாண சமையல் எண்டு வைப்பம் எண்டு பாத்தா அது ரொம்ப பெருசா இருந்துச்சு,  அத கொஞ்சம் சுருக்கி யாழ் சமையல் எண்டு வச்சாச்சு, பெயர் வச்சாச்சு 

Yarl Samayal லோகோ
அடுத்து லோகோ வேணும் என்ன பண்ணுற எப்பிடி வினோத் வலிமைக்கு பண்ணீனாரோ அதே தான் கூகுள்ள Cooking logo தேடியாச்சு அதுல வந்த ஒரு வடிவான 3,4 ஆஹ டவுன்லோட் பண்ணி நம்ம நண்பன் லோகோ designer  துவாக்கு அனுப்பி இந்த 4யும் வச்சு, சேர்த்து, வெட்டி கொத்தி ஏதாச்சும் பண்ணி ஒரு லோகோவா செய் எண்டு, அடுத்து யாழ்ப்பாணத்த காட்ட ஒரு பனையையும் உள்ள போடு எண்டு, சொல்லி ஒரு வழிய 2 நாளுல
லோகோவும் வந்துச்சு, எல்லாம் போட்டு Dec 5, 2016 யாழ் சமையல் (Yarl Samayal) தொடங்கியாச்சு, கிட்ட தட்ட ஒரு 5 வருஷம் முன்னாடி,  ( ஒரு 11 வருஷம் முதல் தொடங்கின சேனலும் இருக்கு அது பத்தி இன்னொரு சமயம் கதைப்பம்). அடுத்த பூதமா வந்து நிண்டது  எப்பிடி எடிட் பண்ற, அப்ப எடிட்டிங் பழகணும் அத முதல் முதல் எனக்கு பழக்கினது இந்துசன் எண்டு இன்னோரு நண்பன் அப்பேக்க அவன் SLIITல படிச்சுட்டு இருந்தவன், 

கோல் பண்ணி அலுப்பு குடுத்து சரி சொல்லி தாறன் எண்டு சொல்ல வச்சாச்சு. தெஹிவளையில நான் நிண்ட ரூம்க்கு ஒரு 2-3 தரம் வந்து எப்பிடி பண்ணுற எண்டு எல்லாம் வடிவா சொல்லி தந்தான், இப்போ சனல் சரி, எடிட்டிங்கும் ஓரளவுக்கு பழகியாச்சு, இனி காணொளி எடுக்கணும், ஆனா பாருங்க இங்க தான் ட்விஸ்டு, இந்த யாழ் சமையல் ப்ராஜெக்ட் ஆஹ அதோட விட்டுட்டு அடுத்த வேலை பாக்க போயாச்சு, யாழ் சமையல் ப்ராஜெக்ட் அம்புட்டும் தான்.

ஒவ்வொரு வருஷத்திலயும் எப்பயாச்சும் ஒருக்கா தோணும், அப்ப வீட்ட அம்மாட்ட வந்து கதைக்கிற இப்பிடி ஒண்டு செய்யணும் எண்டு எல்லாம் கதைச்சு சரி எடுப்பம் எண்டு எடுக்கிற ஒரு 4 தரம் கூழ் மட்டும் செய்து சாப்பிட்டு இருக்கம் ஒருமுறை நான் திசாங்கன் எண்டு ஒரு நண்பன் எல்லாம் மீன் சந்தைக்கு எல்லாம் போய் மீன் வாங்கிட்டு வாறது எல்லாம் காணொளியா எடுத்து கூழ் செய்து மதீசன் அண்ணாவ எல்லாம் கூப்பிட்டு குடிக்க குடுத்து ரிவியூ வாங்கி இத போட்டு தொடங்குவம் எண்டு சொன்னம், ஆனா எடுத்ததோட சரி, இப்பிடி மாறி மாறி செய்து கடைசில கூழ் குடிக்கிற எண்டா சொல்லுங்கடா நான் செய்து தாறன் ஏன் வீடியோ எடுக்கிற எண்டு சொல்லி ஒவோருக்காவும்  கூழ் காச்சிறீங்க எண்டு அம்மாவே சொல்ல தொடங்கீட்டா அத்தன தரம் கூழ் மட்டும் காச்சி குடிச்சம். கூழ் மட்டும் இல்லை, யாழ்ப்பாண சாப்பாடு தான் சரி வரேல்ல போல நாம கொஞ்சம் வித்தியாசமா தொடங்குவம் எண்டு நான் சியாந் துவா எல்லாம் கார்கில்ஸ் போய் cheese எல்லாம் வாங்கி வந்து Cheese Balls செய்தம், விடியோவும் எடுத்தம் ஆனா அதையும் போடல. பட் நல்லா சாப்பிட்டம்.  கிட்ட தட்ட ஒரு 10 தரம் இப்பிடி செய்யிறது, வீடியோ எடுக்கிறது, செய்தத சாப்பிடுறது இப்பிடியே 3 வருஷம் போச்சு.

2019 லீவுக்கு வீட்ட நிக்கேக்க தொடங்கியே ஆகணும் எண்டு ஒரு முடிவு, எப்பிடி நடந்த எண்டு சாத்தியமா தெரியல, ஆனா வீட்ட இருக்க எல்லாரும் ஒரே முடிவா தொடங்கீட்டம், இவ்வளவு காலமும் விட்ட ஒரு பெரிய பிழை நாங்க காணொளி எடுக்கிறதுக்காக சமைச்சம் ஆனா இந்த முறை வீட்ட அண்டைக்கு மத்தியானம் என்ன கறியோ அத அப்பிடியே எடுத்து போட்டம். பெரிசா எந்த எடிட்டிங்கும் இல்ல, புது பொருட்களும் இல்லை, வழமையா வீட்ட என்ன எண்டு செய்வங்களோ அத அப்பிடியே அம்மா செய்ய நான் எடுத்து போட்டம், முதல் வருசத்தில 32 காணொளி. 

வாரத்துக்கு ஒண்டு போட தான் முயற்சி செய்தம், ஆனா தெரியாதோ, சில வாரங்கள் பிழைச்சுட்டு, ஆனா கனக்க ஆதரவு வந்துச்சு, அம்மா கதைக்கிற தமிழ், செய்முறை விளக்கம் எல்லாம் பலருக்கு பிடிச்சு இருந்த, நாங்கள் இது எல்லாம் பெருசா போகாது எண்டு நினச்சா உணவுகளே 100,000 பார்வை தாண்டி போச்சு,

எதுக்கு பன்மையில சொல்லுறன் எண்டு பாத்தா இது நான் தனியாவோ, இல்ல அம்மாவோ தனியா பண்ண முடியாத ஒண்டு, வீட்ட இருக்க எல்லாரும் சேர்ந்து தான் பண்ணுறது, அது தேவையான பொருட்கள் தயார் பண்ணுறதாகட்டும், இல்ல என்ன அடுத்ததா செய்யிறதா முடிவெடுக்கிறதா இருக்கட்டும், செய்து முடிய பாத்திரங்கள் எடுத்து கிளீன் பண்ணுறதா இருக்கட்டும், ஒரு காணொளி பதிவேற்றினா பிறகு அத பாத்து அடுத்ததுல என்ன மாற்றம் செய்யணும், என்ன தலைப்பு வைக்கிறது, எல்லாமே வீட்ட இருக்க எல்லாம் சேர்ந்து பண்ணுறதால தான் இந்த 2 வருசத்துக்குள்ள இவ்வளவு வந்து இருக்கு எண்டு சொல்லணும்.    

6 மாசத்துக்கு மேல ஒரு ப்ராஜெக்ட்ஆஹ தொடந்து செய்யாத நானே 2 வருசமா செய்யிறன் எண்டா அது கொண்டாடப்பட வேண்டிய ஒண்டு தானே. 😆😝  சரி கொஞ்சம் விஜயகாந் பாணில இந்த 2 வருஷத்திலே யாழ் சமையல் எட்டிய மைல்கல்லுகளை பார்ப்பமா. 


  • 24,859 அன்பு உள்ளங்கள் (Subscribers)
  • 2.1 Million பார்வைகள் ( Views ) 
  • 142.4K பார்வை மணித்தியாலங்கள் (Watch hours) , கிட்ட தட்ட 5,933 நாட்கள் தொடந்து பார்த்ததுக்கு சமன் 
  • 1,619 முகபுத்தக அன்பு உள்ளங்கள்  (FB fans) 
  • 899 இன்ஸ்டா அன்பு உள்ளங்கள் (Insta followers) 


இவ்வளவு மட்டும் இல்லை, எங்கள் பாரம்பரிய உணவு முறைகளின் ஒரு காப்பகமாவும் இருக்குது அது தான் இருப்பதற்குள் ஒரு பெரிய விடயமாக நான் நினைக்கிறன், நீங்க என்ன நினைக்கிறீங்க, நாங்க யாழ் சமையல் சனல்ல என்ன இன்னும் மெருகேற்றனும் எண்டு நினைக்கிறீங்க எல்லாம் சொல்லுங்க, 


உங்களுக்கும் இந்த சமையல் காணொளிகளில் விருப்பம் இருந்தா ஒருக்கா போய் பாருங்கோ என. 

Yarl Samayal - YouTubeஇந்த 


நன்றி.   கெதியில மீண்டும் ஒரு அலட்டல்ல சந்திக்கிறன்.  


0 comments:

Post a Comment