Tuesday 20 May 2014

// // 2 comments

கருத்துக்களை திணிக்காதீர்கள்

வணக்கம் நண்பர்களே... சிறிது காலமாக அலட்ட முடியாம போச்சு இனி அப்பிடி நடக்காது ... ஏனென்டா இங்கு எனது சமுகத்தில நடக்கிற சில வேடிக்கையான, கவலைக்கிடமான, மகிழ்ச்சியான, கோவம் தரகூடிய விடயங்களை உங்களோட அலட்ட அசையா இருக்கு :)

சரி விடயத்துக்கு வருவம் ... என்னடா "கருத்துக்களை திணிக்காதீர்கள்" எண்டு இருக்கே எதாவது அட்வைஸ் பண்ண போறானோ எண்டு நினைக்காதிங்க... இது எனது மனதுக்கு பட்ட ஒரு விடயம் அத உங்களோட பகிர்ந்தது கொள்ள நினைக்கிறான் .... இது பற்றி உங்கட அபிப்பிராயத்த பின்னுட்டத்தில சொல்லுங்க .... 

நேற்றைக்கு என்ன நாள் (18.05.2014) அனைத்து தமிழ் மக்களுக்கும் தெரியும் .... இத் தினத்தில் முகப்புத்தகத்தில் நான் பார்த்த சில விடயங்கள் பற்றி எனது தனிப்பட்ட கருத்தை உங்களோட அலட்ட போறன் 

முதலாவதா மே 18ஐ முண்ணிட்டு நான் முகப்புத்தகத்தில அவதானிச்ச விடயம் இந்த profile picture மாத்துறது.... கறுப்பு ரோஜா, எரியும் மெழுகுவர்த்தி, அதுவும் இல்லாட்டி வெறும் கருப்பு படம் என பல பேர் தங்கட profile pictureற மத்தி இருந்தாங்க.. உண்மைய சொல்லணும் என்டா இது ஒரு சிறந்த விஷயம் தான் ... எதோ ஒரு விசயத்துக்காக தமிழர் எல்லாரும் ஒண்டு பட்டிருக்கிறத இது உலகத்துக்கு எடுத்து காட்டி இருக்கு...

தமது படங்களை மாற்றிய சில நண்பர்கள் :) 

இதுல ஒரு வருத்த தக்க விடயமும் இருக்கு... அது பல பேருக்கு தெரியாம போயிடுது..... கீழ இருக்கிற படத்த கொஞ்சம் பாருங்க
எனக்கும் நண்பர் ஒருவருக்கும் நடந்த உரையாடல் 
இதில பலபேர் தங்கட சொந்த விருப்பால படத்தினை மாற்றாமல் இவ்வாறு தமது நண்பர்கள் கேட்டதிர்கினங்க மாற்றி உள்ளனர் :( இது கவலைக்கிடமான விடயமாகும்... இவ்வாறு தமது சொந்த விருப்பம் இல்லாமல் மாறுபவர்கள் எந்த ஒரு உதவியினையும் எமக்கு செய்ய மாட்டார்கள் என்பது ஏன் தான் மற்றவர்களுக்கு புரிகிறது இல்லை எண்டு தான் எனக்கு விளங்குதில்லை ??? 
அதனால் நண்பர்களே (நான் எல்லா நண்பர்களையும் சொல்லவில்லை) இவ்வாறு உங்கள் விருப்பங்களை மற்றவர்களுக்கு திணிக்காதீர்கள்.... 

------------------------------------------------------------------------------------------------------------

அடுத்து மே 18 அன்று நடந்த ஒரு விடயம்... உண்மையை சொல்வதென்றால் என்னை மிகவும் யோசிக்க வைத்த ஒரு விடயம்.. இந்த பதிவு எழுதுவதற்கும் மூல காரணமாக காணப்பட்ட விடயம்.... 

ஒருவன் ( தமிழன் தான் )  மே 18அன்று  " இலங்கை இராணுவம் வெற்றி அடைந்து 5 ஆண்டுகள் முடிவடைகின்றது . இதற்காக நான் மிகவும் மகிழ்வடைகின்றேன் "  என்ற அர்த்தத்தில் முகப்புத்தகத்தில் ஒரு பதிவிடிருந்தார் .. அதற்கு நண்பர் ஒருவர் அளித்த பதிலினை கீழே பாருங்கள். 
அந்த பதிவுக்கு வந்திருந்த மறு மொழிகள் 

இந்த பதில்களில் ஒரு யாயம் உள்ளது.... இல்லை என்று சொல்லவில்லை.. அது இப்போது நான் சொல்ல வந்த விடயமும் இல்லை :( இதில் வட்டமிட பட்டிருக்கும் பதிலினை கொஞ்சம் கவனியின்கள்.. இப்போது ஒரு மூன்றாம் நபர் ( அதாவது மே 18இல் நடந்த சம்பவங்கள் பற்றி தெரியாத ஒருவர் ) இதனை வாசிக்கும் பொது இந்த பதில் இட்டவர் மீது ஒரு கேவலமான பார்வையினை உண்டாக்கும் ... அவரை பொறுத்த வரை அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.. அனால் அவர் மேடை நாகரிகத்தினை இழந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் :(......

அத்துடன் இந்த பதிவருக்கு எதிராக கருத்திட அனைவரும் தமது கருத்தன "மே 18 நாம் துயரப்பட வேண்டிய நாள் " எனும் கருத்தினை திணிப்பதற்கு முயல்கின்றனர்.. என்னை பொறுத்த வரை இதுவும் ஒரு அடக்குமுறை தான். எதற்காக உங்கள் கருத்தினை மற்றவர்கள் மேல் திணிக்க முற்படுகின்றிகள்? பதிவரை பொறுத்தவரை அவருக்கு இலங்கை இராணுவம் செய்ததது சரி. அது அவருடைய பார்வை... அதை ஏன் நீங்கள் எதிர்கின்றிகள் ?? ஏன் உங்கள் கருத்தை அவர்கள் மீது திணிக்கின்றிகள் ?? 

------------------------------------------------------------------------------------------------------------

கடைசியாக இசைபிரியவின்  புகைப்படங்கள் வெளியானது .... இச் செய்தியை வாசிக்கும் பொது எனக்கு கோவமோ, வருத்தமோ ஏற்படவில்லை மாறாக சிரிப்பு தான் வந்தது... காரணம் என்ன என்று நினைக்கின்றிகள்..... போர் முடிந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது இவ்வளவு காலமும் இவ் வாதரங்கள் எங்கே இருந்தன ??? ஏன் 5 ஆண்டுகள் கழித்து இவ் வாதரங்களை மீடியாக்கள் வெளியிடுகின்றன ??
:(

மீடியாக்கள் தமது இலாபத்துக்காக நடந்து கொள்கின்றன... அது தெரியாமல் நாம் ( தமிழர்கள் ) வாழ்ந்தது கொண்டிருக்கின்றோம்.. மீடியாக்களுக்கு தெரியும் மே 18 அன்று இவ்வாறு ஒரு செய்தியினை வெளியிட்டால் தமக்கு இலாபம் கிடைக்கும் என்று... பொறுத்திருந்து பாருங்கள் இனி வரப்போகும் மே 18க்களிலும் இதுவரை வெளி வராத பல ஆதாரங்கள் வெளி வரும் :(

நீங்களே சிறிது யோசித்து பாருங்கள் இவ் வாதரங்களை போர் குற்ற விசாரணை நடைபெற்றிருக்கும் பொது வெளியிட்டிருந்தால் அது அரசிற்கு எதிரான ஒரு வலிமையான சாட்சியாக மாறி இருக்கும்... அனால் அது நடக்க வில்லை காரணம் " அவனவனுக்கு அவன் அவன் பிரச்சனை " :(

தமிழ் நண்பர்களே ... முதலில் எமக்கு ஆதரவு தருவது போல நடித்து கொண்டு தனது சுய லாபத்திற்காக செயற்படுபவர்களிடம் உங்கள் கோபத்தினை காட்டுங்கள்... தனது கருத்தினை பலர் முன்னிலையில் ஒத்துக்கொள்ளும் தமிழர்களை எதிர்காதிர்கள்  ...

------------------------------------------------------------------------------------------------------------

இதில் உங்களுக்கு ஏதேனும் உடன்பாடு இல்லை எனின் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும்
  
  

2 comments:

  1. //ஏன் 5 ஆண்டுகள் கழித்து இவ் வாதரங்களை மீடியாக்கள் வெளியிடுகின்றன///

    ஐந்து ஆண்டுகள் கழித்து வெளிட்டதும் ஒரு நன்மை இருக்கிறது ., உங்கள் நாட்டில் எப்டி எண்டு எனக்கு அறியாது ., ஆனால் எங்களடா தமிழ் நாட்டில் இந்த விஷயம் இன்னும் பல சமூக தமிழ் ஆதரவாளர்களை உருவாக்கீருக்கிறது ., இது முன்னமே வந்து இருந்தால் அவ்வளவு எழுச்சி இருக்கும் எண்டு சொல்லமுடியாது .,

    -------------------------------------------------------------

    மேல் குறிப்பிட்ட படம் 1 இல் உள்ளவர்கள் , அதை பதிவு செய்த நண்பர் அனைவரும் எனக்கு அறிந்தவரே ., அவர்கள் கருத்தால் ஒன்றிணைந்தவர்கள் ., முகநூலால் , கருத்து திணிப்பால் அல்ல .,.,

    ReplyDelete
  2. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்....

    //மேல் குறிப்பிட்ட படம் 1 இல் உள்ளவர்கள் , அதை பதிவு செய்த நண்பர் அனைவரும் எனக்கு அறிந்தவரே ., அவர்கள் கருத்தால் ஒன்றிணைந்தவர்கள் ., முகநூலால் , கருத்து திணிப்பால் அல்ல .,.,//

    நண்பரே அவர்கள் எனக்கும் நண்பர்கள் தான். நான் அவர்களை சொல்லவில்லை இவ்வாறு கருத்தால் ஒன்றிணைந்தது நல்லது என்பதை நானும் முழு மனதுடன் ஒத்துக்கொள்கின்றேன் :) ஆனால் சிலர் கருத்து திணிப்பும் செய்கின்றனர் என்பது உண்மை.. அப்படி செய்ய வேண்டாம் என்று தான் கேட்கின்றேன் (கருத்துகளை திணிப்பவர்களை மட்டும் தான் கேட்கின்றேன் )

    // ஐந்து ஆண்டுகள் கழித்து வெளிட்டதும் ஒரு நன்மை இருக்கிறது //

    ஆம் நீங்கள் சொல்லவதும் சரி தான் ஆனால் இவ் வாதரங்கள் அன்றே வந்திருந்தால் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான ஒரு முக்கிய போர் குற்ற ஆதரமாக திகழ்ந்த்திருக்கும்.. ஏன் அப்போது இவ் மீடியாக்கள் விடவில்லை என்று தான் நான் கேட்டேன் :) . Sand Box

    ReplyDelete