
புதுடெல்லியில் பிறந்து லக்னோவில் வளர்ந்தவரான பத்திரிகையாளர் பாஷாசிங் எழுதிய ”தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்” என்ற புத்தகத்தை வாசித்து முடித்தபோது இன்னும் நாகரீகமடையாத சமூகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. காஷ்மீர், புதுடெல்லி, பீகார், மேற்கு வங்காளம், உத்திரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம்...