Saturday 28 September 2013

// // 3 comments

இது பனங்காய் சீசன்

"எல்லோரும் இன்றைக்கு பனங்காய் பணியாரம் சாப்பிடுவோமா?"

பனை என்றதுமே உடனடியாக ஞாபகத்துக்கு வருவது இரண்டு. ஒன்று 
பனங்கள்ளு. அடுத்தது பனங்காய் பணியாரம். இரண்டுமே யாழ்ப்பாணத்தில் 
பிரபலம். "கள்ளு குடித்தால் போதை வரும்!" என்பார்கள். ஆனால் எங்கள் 
அம்மம்மாக்கள் சுடும் பனங்காய் பணியாரத்தை சாப்பிட்டாலும் ஒரு போதை 
வரும். ஆனால் இந்த போதை குடித்துவிட்டு மெய்மறந்து அடுத்தவனை 
அடிக்கும் போதையல்ல. ஒரு முறை சாப்பிட்டாலே மீண்டும்
 மீண்டும் சாப்பிடத்தூண்டும் போதை.

பனங்காய்பணியாரம் சுடுவதில் நம்மூர் பெண்கள் கில்லாடிகள். 
பனம்பழத்தின் சுவையும் அவர்களின் கைப்பக்குவமும் சேர்ந்து 
பணியாரமாக வரும்போதுஅதன் சுவையே தனி. எங்கள் வீட்டில் 
பனங்காய் பணியாரம் சுடுவது அம்மம்மாதான். அவருக்குத்தான் அதன் 
கஷ்டம் புரியும். ஆனால் அந்த பணியாரம் சுடுவதற்கு பின்னால் 
எங்களின் (சிறுவர்களின்) கடின உழைப்பு இருக்கிறது என்பதுதான் சுவையானது.

ஆனா எங்க வீட்டில பனம் பழம் கொண்டு வாரது அத்தான். கழுவி 
தோல் உரிக்கிறது அப்பா. பனம்களி எடுக்கிறது அம்மாவும் அப்பாவும் சுடுறது 
அம்மா. அப்ப நான் என்ன வேலை செய்யிரனான் அம்மா சுட்டு தாரதை 
வயிறு முட்ட சாப்பிறது தான்

முன்னுரை போதும் எண்டு நினைக்கிறன். இப்ப இந்த நவீன உலகத்தில 
பல யாழ்ப்பாணத்து பெண்களுக்கு கூட இந்தப் பனங்காய் பணியாரம் செய்ய 
தெரியல. அது தான் இந்தப் பதிவு 

எப்பிடி செய்யிறது எண்டு பாப்பமா வாங்க


செய்வோமா பணியாரம்.


நன்கு பழுத்த ஒன்று அல்லது இரண்டு 
பனம் பழத்தை நன்கு கழுவி எடுங்கள். 
மேலுள்ள மூளைக் கழட்டி விடுங்கள்.

பனம் பழத்தின் மேலுள்ள நாரை சிறிய 
மேசைக் கத்தியினால் பழத்தின் 
மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக
சீவி எடுங்கள். (கவனமா செய்யுங்கோ 
கைகளை வெட்டிராதிங்கொ)


நாரை வெட்டி அகற்றிய பின் மீண்டும் 
பழத்தை தண்ணீரில் நன்கு கழுவுங்கள்.



பின்பு பழத்தை கைகளால் பிரியுங்கோ. (இது இரண்டு மூன்றாக விதையுடன் பிரியும்)



அவற்றைப் பிழிந்து அதிலுள்ள களியை இரு கைகளாலும் அழுத்தி எடுங்கள்.

களி தும்புகளுடன் கூடி இருக்கும். மெல்லிய வெள்ளைத்துணி அல்லது கண்ணறைத் துணியை வைத்து களியை வடித்தெடுங்கள்.

வடித்தெடுத்த களியை அடுப்பில் வைத்து சீனி சேர்த்து  பச்சை வாடை போக காச்சி எடுத்து ஆறவையுங்கள். 

இப்பொழுது காச்சிய பனம்களி தயாராகிவிட்டது.( அட பக்கத்து படத்தில இருக்கிற மாதிரி தான் இருக்கும் )


தேவையான பொருட்கள்


பனங்களி ( இத தயாரிக்கிறதான் மேல சொன்னனான்)   – 1 கப்
சீனி- ¼ கப்
பொரிக்க எண்ணெய் – அரை லீட்டர். 
அவித்த மைதாமா அல்லது வறுத்த உழுந்துமா அல்லது அரிசிமா – ¼ கப்
உப்பு சிறிதளவு.


செய்முறை


காச்சிய பனங்களியுடன் மைதாமா உப்பு சேர்த்து கிளறி எடுங்கள்.
தாச்சியில் எண்ணையை விட்டு நன்கு கொதிக்க மாவைக் கையில் எடுத்து 
சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுங்கள். 

ரிசூ பேப்பரில் இல்லாட்டி பழைய செய்தித்
தாளினில் போட்டு எண்ணையினை வடியவிட்டு ஆற வைத்த பின் இரண்டு மூன்று நாட்கள் வைத்துச் சாப்பிடுங்கள்.


உதவிக் குறிப்புகள் 

  • மைதாமா கலந்தால் மெதுமையான பணியாரம் கிடைக்கும்.
  • அரிசிமா, உழுந்துமா சற்று உரமாக இருக்கும். 
  • மா கலக்காமல் தனியே களியிலும் செய்வார்கள் இது கடித்துச் சாப்பிடும் 
  • போது களிப் பிடியாக இருக்கும்.

கால ஓட்டத்தில் இப்போது இதெல்லாம் கிடைப்பது அரிதாகி விட்டது. அவ்வப்
போது பனங்காய் பணியாரம் சாப்பிட வாய்ப்பு கிடைத்தாலும் முன்பு 
போல் சொந்தங்களுடன் சண்டை பிடித்து, பின்னர் ஒன்று சேர்ந்து 
சாப்பிடும் சுகமும்,சுவையும் கிடைப்பதில்லை.

உங்க கருத்துகளை பின்னூட்டத்தில சொல்லுங்கோ. அடுத்த பதிவில சந்திப்பம்.

 Bye



3 comments:

  1. ம்ம்ம்ம்ம் சிவா உண்மையாவே பணியாரம் மிகவும் ருசியானது

    ReplyDelete
  2. 1 comment thana

    ReplyDelete
  3. எங்களூர்களில் பழமொழி ஒன்று உண்டு "பசிக்கு பனம்பழம் உண்டால் பித்தம் போகிறவழியாய் போகும்"என்று.ஆம் பனம் பழத்தில் அரை கிலோ காம்ப்ளான் அளவுக்கு சத்து நிறைந்தது.ஆனால் இன்று கிடைப்பதற்கு அரிதாகிவிட்டது.பனங்காய் நொங்கு சாப்பிட்டு விட்டு மூங்கில் வேலியில் குச்சி ஒடித்து பனங்காய் வண்டி செய்து ஓட்டிய அந்தநாள் ஞாபகம் வருகிறது.

    ReplyDelete